தமிழனே
இன்னும் எத்தனை காலத்துக்கென்றுதான்
கண்ணீர் வடிப்பாயோ..!
விழிநீர் உப்புடன் விருந்துண்பவனே
நரகத்தில் கிடந்துழலும் விதியை
எவனடா எழுதினான் உன் தலையில்
இன்னும் எத்தனை காலத்துக்கென்றுதான்
கண்ணீர் வடிப்பாயோ..!
விழிநீர் உப்புடன் விருந்துண்பவனே
நரகத்தில் கிடந்துழலும் விதியை
எவனடா எழுதினான் உன் தலையில்
விடுதலைக்காக நீ விழிதிறக்கும் போதெல்லாம்
கூடப்பிறப்பொன்றே உனக்குக் குழிபறிக்கும்
நீ படைவைத்து அரசாண்ட காலத்தில்
இன்று சந்திரனுக்குச் சென்று
சாதனை படைத்தானே
அவன் ஆடுகள் மேய்த்துக்கொண்டிருந்தான்
கூடப்பிறப்பொன்றே உனக்குக் குழிபறிக்கும்
நீ படைவைத்து அரசாண்ட காலத்தில்
இன்று சந்திரனுக்குச் சென்று
சாதனை படைத்தானே
அவன் ஆடுகள் மேய்த்துக்கொண்டிருந்தான்
செவ்விந்தியனைக் கொன்று சிம்மாசனம் பிடித்தவன்
இன்று சர்வதேசப் பொலிஸ்காரன் ஆகிவிட்டான்
கோட்டை கட்டியாண்ட குலத்துக்குரிய நீ மட்டும்
மாட்டைப் பூட்டியே இன்றும் மண்ணைக் கிளறுகின்றாய்
இன்று சர்வதேசப் பொலிஸ்காரன் ஆகிவிட்டான்
கோட்டை கட்டியாண்ட குலத்துக்குரிய நீ மட்டும்
மாட்டைப் பூட்டியே இன்றும் மண்ணைக் கிளறுகின்றாய்
நீ கப்பலேறிக் கடாரம் வென்றபோது
ஜப்பான்காரன் எக்ஸ்போ நடத்தவில்லை.
தடிக்குச்சிகளால் தட்டிகட்டித்தான் வாழ்ந்தான்
என்ன செய்வது?
ஜப்பான்காரன் எக்ஸ்போ நடத்தவில்லை.
தடிக்குச்சிகளால் தட்டிகட்டித்தான் வாழ்ந்தான்
என்ன செய்வது?
எல்லோர் தலையிலும் பிரம்மன் கையால் எழுதினான்
உன் தலையில் மட்டும்
அழிக்கமுடியாதபடி ஆணியால் எழுதிவிட்டான்
இடைக்கிடைதான் நீ எழுதுவது வழக்கம்
அப்போது கூட அடித்து விழுத்தப்படுவாய்
அதுவும் அன்னியராலல்ல
உன்னவரால்….!
உன் தலையில் மட்டும்
அழிக்கமுடியாதபடி ஆணியால் எழுதிவிட்டான்
இடைக்கிடைதான் நீ எழுதுவது வழக்கம்
அப்போது கூட அடித்து விழுத்தப்படுவாய்
அதுவும் அன்னியராலல்ல
உன்னவரால்….!
நீ நிமிர்ந்து கொள்ளும் ஒவ்வொரு நேரத்திலும்
நெஞ்சுக்குப் பாய்கிறதே நெருப்புக்குண்டு
குண்டெறிபவன் வேறுயாருமில்லை
கூடப்பிறந்தவனென்பதைக் குறித்துக் கொள்
கராம்பும் கறுவாவும் வாங்கத்தான்
பீரங்கியோடு புறப்பட்டுவந்தான் வெள்ளைக்காரன்
நெஞ்சுக்குப் பாய்கிறதே நெருப்புக்குண்டு
குண்டெறிபவன் வேறுயாருமில்லை
கூடப்பிறந்தவனென்பதைக் குறித்துக் கொள்
கராம்பும் கறுவாவும் வாங்கத்தான்
பீரங்கியோடு புறப்பட்டுவந்தான் வெள்ளைக்காரன்
வந்தவனுக்கு உந்தன் வரலாறு தெரிந்ததும்
வல்லமையைக் காட்டி வரி கேட்டான்.
பாஞ்சாலங்குறிச்சியில் மட்டும்
ஒருவன் பணிய மறுத்தான்
வெள்ளைக்காரனால் அவனை விழுத்த முடியவில்லை
பக்கத்திருந்த பாளையகாரன்
அவனும் தமிழன்
அதுவும் உருத்துடைய உறவுக்காரன்
காட்டிக்கொடுத்துக் கழுத்தை முறித்தான்
வன்னியிலும் இதே வரலாறுதான்.
வல்லமையைக் காட்டி வரி கேட்டான்.
பாஞ்சாலங்குறிச்சியில் மட்டும்
ஒருவன் பணிய மறுத்தான்
வெள்ளைக்காரனால் அவனை விழுத்த முடியவில்லை
பக்கத்திருந்த பாளையகாரன்
அவனும் தமிழன்
அதுவும் உருத்துடைய உறவுக்காரன்
காட்டிக்கொடுத்துக் கழுத்தை முறித்தான்
வன்னியிலும் இதே வரலாறுதான்.
வெள்ளைக் கொக்குகளுக்கு எதிராக
கறுப்புக் காகமொன்று கச்சைகட்டியது
துரத்தித் துரத்தி கொக்குகளைக் கொத்தியது காகம்
வன்னியனை வளைத்துப்பிடிக்க முடியவில்லை
காட்டிக்கொடுத்தது இன்னொரு காக்கை
அவனும் தமிழன்
அதுவும் உருத்துடைய உறவுக்காரன்.
கறுப்புக் காகமொன்று கச்சைகட்டியது
துரத்தித் துரத்தி கொக்குகளைக் கொத்தியது காகம்
வன்னியனை வளைத்துப்பிடிக்க முடியவில்லை
காட்டிக்கொடுத்தது இன்னொரு காக்கை
அவனும் தமிழன்
அதுவும் உருத்துடைய உறவுக்காரன்.
அத்துடன் முடிந்ததா அந்த வரலாறு
இல்லையே… இன்றும் தொடர்கிறது
எல்லோரின் தோள்களிலும்
இன்று சூரியன் சுடர்கிறது.
உன் தலையில் மட்டும் இன்னும் இருட்டுத்தான்
என்ன விதியடா உனக்கு?
இல்லையே… இன்றும் தொடர்கிறது
எல்லோரின் தோள்களிலும்
இன்று சூரியன் சுடர்கிறது.
உன் தலையில் மட்டும் இன்னும் இருட்டுத்தான்
என்ன விதியடா உனக்கு?
நீண்டகாலமாக நெடுமூச்செறிந்தபடி
தட்டியெழுப்ப யாருமின்றிக் கட்டிலிற்கிடந்தாய்
விடுதலைச் சிறகுதந்து உன்னைப் பறக்க வைக்கும்
தேவகுமாரனொருவனைத் தேடிச் சலித்தாய்
தட்டியெழுப்ப யாருமின்றிக் கட்டிலிற்கிடந்தாய்
விடுதலைச் சிறகுதந்து உன்னைப் பறக்க வைக்கும்
தேவகுமாரனொருவனைத் தேடிச் சலித்தாய்
காலம் உன்னைக் காத்திருக்க விடவில்லை
கையிற்தந்தது ஒரு கைவிளக்கு
பிரபாகரன் என்ற பெயரைச் சுமந்து
வந்தது அந்த வல்லமை.
தூசிகளை எரித்தபடி தோன்றியது
அந்தச் சுதந்திர நெருப்பு
அப்போதும் உன் தலையெழுத்து மாறவேயில்லை.
அப்படியேதான் கிடந்தது அது.
கையிற்தந்தது ஒரு கைவிளக்கு
பிரபாகரன் என்ற பெயரைச் சுமந்து
வந்தது அந்த வல்லமை.
தூசிகளை எரித்தபடி தோன்றியது
அந்தச் சுதந்திர நெருப்பு
அப்போதும் உன் தலையெழுத்து மாறவேயில்லை.
அப்படியேதான் கிடந்தது அது.
காலம் மாறியது
களங்கள் மாறியது
பெயர்கள் மாறியது
வரலாறு மட்டும் மாறவேயில்லை
எட்டப்பன் துரையப்பா என்றானான்
காக்கை வன்னியன் கதிர்காமர் என்றானான்
கூடப் பிறந்ததுகளே குழிபறிக்கும் தலையெழுத்தை
எவர்தான் உனக்கு இல்லாமற் செய்வாரோ?
களங்கள் மாறியது
பெயர்கள் மாறியது
வரலாறு மட்டும் மாறவேயில்லை
எட்டப்பன் துரையப்பா என்றானான்
காக்கை வன்னியன் கதிர்காமர் என்றானான்
கூடப் பிறந்ததுகளே குழிபறிக்கும் தலையெழுத்தை
எவர்தான் உனக்கு இல்லாமற் செய்வாரோ?
பக்கத்து வீட்டுக்காரன் படலை திறந்து வந்து
பூமாலை யென்று பொரியரிசி போட்டபோதும்
பிரபாகரன் தன்னந்தனியனாய்ப் போராடினான்
இரவற் தாய்நாட்டின் இராப்பிச்சைக்காக
வரதராசப்பெருமாள் வாலை ஆட்டியது
தின்று முடித்ததும்
சொந்த வீட்டிலேயே ஒண்டுக்கிருந்து விட்டு
அது ஒரிஸாவுக்கு ஓடியது
இன்று நடிகன் மனைவியின் நாடகம் நடக்கிறது.
ஒப்பனையில் மயங்கி எத்தனைபேர் கிடக்கின்றனர்.
பூமாலை யென்று பொரியரிசி போட்டபோதும்
பிரபாகரன் தன்னந்தனியனாய்ப் போராடினான்
இரவற் தாய்நாட்டின் இராப்பிச்சைக்காக
வரதராசப்பெருமாள் வாலை ஆட்டியது
தின்று முடித்ததும்
சொந்த வீட்டிலேயே ஒண்டுக்கிருந்து விட்டு
அது ஒரிஸாவுக்கு ஓடியது
இன்று நடிகன் மனைவியின் நாடகம் நடக்கிறது.
ஒப்பனையில் மயங்கி எத்தனைபேர் கிடக்கின்றனர்.
பிரபாகரன் ஒருவன்தான்
அரிதார முகத்தை அறிந்துகொண்டு
காட்டு மரங்களிடையே களங்களை விரித்து
பூட்டுடைக்கப் போராடுகின்றான்
உயிர்விலை கொடுத்தபடி உண்மையும்
சத்தியத்தைச் சலுகைவிலையில் விற்றபடி பொய்மையும்
சந்தித்துக் கொள்கின்றன
அரிதார முகத்தை அறிந்துகொண்டு
காட்டு மரங்களிடையே களங்களை விரித்து
பூட்டுடைக்கப் போராடுகின்றான்
உயிர்விலை கொடுத்தபடி உண்மையும்
சத்தியத்தைச் சலுகைவிலையில் விற்றபடி பொய்மையும்
சந்தித்துக் கொள்கின்றன
புதிய கண்ணோட்டப் பிரேம நிலவுகளும்
வீரசிங்கத்துக்கு வெண்சாமரம் வீசும்
ஆனந்தத்தையே சங்கரிப்பவர்களும்
தேவ ஆனந்த்தத்துக்குத் தேதி குறிப்பவர்களும்
கொள்ளைக்காரிக்குக் குடை பிடித்தபடி
கள்ளத்தனம் செய்யும் கதிர்காம முருகர்களும்
எல்லோரும் அம்மணமாக ஆடுகின்றனர்
ஆடிவிட்டு போகட்டும்
இது தலையெழுத்தென்று இருந்துவிடலாம்
அறிக்கைகளுமல்லவா அச்சிடுகின்றனர்
வீரசிங்கத்துக்கு வெண்சாமரம் வீசும்
ஆனந்தத்தையே சங்கரிப்பவர்களும்
தேவ ஆனந்த்தத்துக்குத் தேதி குறிப்பவர்களும்
கொள்ளைக்காரிக்குக் குடை பிடித்தபடி
கள்ளத்தனம் செய்யும் கதிர்காம முருகர்களும்
எல்லோரும் அம்மணமாக ஆடுகின்றனர்
ஆடிவிட்டு போகட்டும்
இது தலையெழுத்தென்று இருந்துவிடலாம்
அறிக்கைகளுமல்லவா அச்சிடுகின்றனர்
ஈழத்தமிழர்களை ஈடேற்ற வந்தவர்போல
இடைக்கிடை உற்சவமூர்த்திகளைப் போல
ஊர்கோலம் வேறு
இடைக்கிடை உற்சவமூர்த்திகளைப் போல
ஊர்கோலம் வேறு
இன்னொருவன் இருக்கின்றான்
இவனே பெரிய எட்டப்பன்
நஞ்சின் நிறம் இவனின் நாமம்
பிடாரிக்குத் தலைவாரி விடுபவன்
இவனே பெரிய எட்டப்பன்
நஞ்சின் நிறம் இவனின் நாமம்
பிடாரிக்குத் தலைவாரி விடுபவன்
தமிழனே….!
இன்னும் எத்தனை காலத்துக்கென்றுதான்
கண்ணீர் வடிப்பாயோ?
விழிநீர் உப்புடன் விருந்துண்பவனே
நரகத்திற் கிடந்துழலும் விதியை
எவனடா எழுதினான் உன் தலையில்?
இன்னும் எத்தனை காலத்துக்கென்றுதான்
கண்ணீர் வடிப்பாயோ?
விழிநீர் உப்புடன் விருந்துண்பவனே
நரகத்திற் கிடந்துழலும் விதியை
எவனடா எழுதினான் உன் தலையில்?
நன்றி
உலைக்களம் 1997
வியாசன்
விடுதலைப் புலிகள் பத்திரிகை
உலைக்களம் 1997
வியாசன்
விடுதலைப் புலிகள் பத்திரிகை
Geen opmerkingen:
Een reactie posten