தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 29 april 2015

நச்சுப் பாம்புக்கு பதிலாக சாரை பாம்பைக் கொண்டு வந்த மைத்திரி அரசு: விமல் கேலி



அரச பணியாளர்களுக்கு வடமாகாண மீன்பிடி அமைச்சால் நியமனக் கடிதங்கள்
[ புதன்கிழமை, 29 ஏப்ரல் 2015, 11:20.05 AM GMT ]
180 நாள் அரச பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் திட்டத்தின் கீழ் வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சரால் நியமன கடிதங்கள் வழங்கப்பட்டது.
இன்று மதியம் 12 மணியளவில் யாழ்ப்பாணம் நூலக ஒன்றுகூடல் மண்டபத்தில் 180 நாள் அரச பணியில் தற்காலிகமாக பணியாற்றிவந்த தகைமை உள்ளவர்களுக்கு வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் ஆகியவற்றின் பணியாளர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்கிவைத்தார்.
வடக்கு மாகாண மீன்பிடி,கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள். இந்நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் கௌரவ அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் அவர்களும் மாகாணசபை உறுப்பினர்கள் திரு.கஜதீபன் திரு.பரம்சோதி, எதிர்க்கட்சி தலைவர் திரு.தவராசா, மற்றும் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.பத்திநாதன் மாறும் ஏனைய திணைக்கள தலைவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmtyERdSUiozG.html

நச்சுப் பாம்புக்கு பதிலாக சாரை பாம்பைக் கொண்டு வந்த மைத்திரி அரசு: விமல் கேலி
[ புதன்கிழமை, 29 ஏப்ரல் 2015, 11:13.50 AM GMT ]
நச்சுப் பாம்பு போன்ற 19வது திருத்தத்தை பாராளுமன்றிற்கு கொண்டுவர நினைத்த போதும் இறுதியில் நிறைவேற்றப்பட்டது சாரைப் பாம்பு போன்ற 19வது திருத்தம் என தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். 
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியடம் காணப்பட்ட அதிகாரங்களை பிரதமர் வயப்படுத்தி கொள்வதற்காக எடுத்த முயற்சிகள் தோல்வியை சந்தித்துள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
19வது திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட போது எதிர்கட்சித் தலைவரின் பணியை செய்தது தினேஸ் குணவர்தன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாப்புச் சபைக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றி தமக்கு ஏற்றவர்களை நியமிக்க எடுத்த முயற்சியை தோல்வியடைய செய்துள்ளதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிந்தது என சோபித்த தேரர் மார்தட்டி கொள்ள கூடும் எனவும், தனது திட்டம் தவறியதால் பிரதமர் கவலையில் இருக்கக் கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyERdSUiozF.html

Geen opmerkingen:

Een reactie posten