தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 26 april 2015

ஜுன் மாதம் பொது தேர்தலுக்கு ஆயத்தமாகவும்!– பிரதமர்

ஐ.ம.சு.முன்னணியின் இரு மே தினக் கூட்டங்களையும் புறக்கணிக்கும் மகிந்த!
[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2015, 07:11.44 AM GMT ]
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இரண்டு மே தினக் கூட்டங்கள் நடைபெறவுள்ளது. இதில் எந்த கூட்டத்திலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ள மாட்டார் என தெரியவருகிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உருவாக்கப்பட்டு 11 ஆண்டுகளில் முதல் முறையாக இவ்வாறு இரண்டு மே தினக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான கட்சிகள், கொழும்பு கிருளப்பனை லலித் அத்துலத்முதலி மைதானத்தில் மே தினக் கூட்டத்தை நடத்தவுள்ளன.
விமல் வீரவன்ஸவின் தேசிய சுதந்திர முன்னணி, தினேஷ் குணவர்தனவின் மக்கள் ஐக்கிய முன்னணி, வாசுதேவ நாணயக்காரவின் ஜனநாயக இடதுசாரி முன்னணி மற்றும் உதய கம்மன்பிலவின் பிவித்துரு ஹெல உறுமய ஆகிய கட்சிகள் இணைந்து இந்த மே தினக் கூட்டத்தை நடத்துகின்றன.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட ஏனைய கூட்டணி கட்சிகள் கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் மே தினக் கூட்டத்தை நடத்த உள்ளன.
இந்த மே தினக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளதுடன், முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நடத்தும் மே தினக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்திருந்த போதிலும், அவர் இதுவரை பதில் எதனையும் வழங்கவில்லை.

புதிய அரசுடன் இணைய கோத்தா தீர்மானம்
[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2015, 07:12.07 AM GMT ]
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தற்போதைய அரசாங்கத்தில் நுழைவது குறித்து ஆலோசித்து வருகிறார் என தெரிவிக்கப்படுகின்றது.
அவர் இவ்வாறு தீர்மானித்துள்ளார் என அவரை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கம் தனக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றது.
இந்நிலையிலேயே தான்  அரசியலில் நுழைவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எந்த கட்சியின் கீழ் பொது தேர்தலில் போட்டியிடுவார் என விரைவில் அறிவிப்பார் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

மகிந்த பொது தேர்தலில் போட்டியிடுவது நிச்சயம்: ஆதரவாளர்கள் உறுதி
[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2015, 07:39.03 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் பொது தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவார் என அவருக்கு சார்பான பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் மகிந்த ராஜபக்சவிற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாவிட்டால் வேறொரு கட்சியொன்றின் ஊடாக போட்டியிடுவார் என முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவை நிறுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறு அவரை பிரதமர் வேட்பாளராக நிறுத்தாவிட்டால் வேறொரு கூட்டணியின் ஊடாக முன்னாள் ஜனாதிபதி நிச்சயமாக போட்டியிடுவார் என முன்னாள் அமைச்சர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு 85 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்கி வருகின்றனர்.
அது மாத்திரமல்லாது மாகாண முதலமைச்சர்கள், அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற அரசியல்வாதிகள், என பலரும் அவருக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர் என முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதியின் தலைமையில் எதிர்வரும் பொது தேர்தலை நடத்துவது தொடர்பிலான விரிவான திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜுன் மாதம் பொது தேர்தலுக்கு ஆயத்தமாகவும்!– பிரதமர்
[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2015, 07:43.11 AM GMT ]
பொதுத்தேர்தல் ஜுன் மாதம் இடம்பெறுவது உறுதி என பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய கட்சிக்கு அறிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தியில் தேர்தலில் ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளை ஒன்றிணைத்து உறுதியாக முகம் கொடுப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்து வருகின்றதென சிரேஷ்ட உப தலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
பொதுத் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் போட்டியிடுவதுடன் சிறுபான்மை கட்சிகள் மற்றும் ஏனைய குழுக்களை ஒன்றினைத்து கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் இடம் பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிட்ட சிறுபான்மை கட்சிகள் மற்றும் ஏனைய குழுக்கள் இம்முறை ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyERaSUjv5B.html

Geen opmerkingen:

Een reactie posten