தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 27 april 2015

தந்தை செல்வாவும் பண்டாரநாயக்கவும் சமஸ்டி குறித்த ஒரே நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தார்கள்: மாவை எம்.பி

ஜனாதிபதி மைத்திரிபாலவை இயலாதவராக பார்க்காதீர்
[ திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015, 08:10.37 AM GMT ]
நூறுநாள் வேலைத்திட்டத்தின் நிறைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அந்த உரையில் அவரின் நிதானம் வெளிப்பட்டிருந்தது. அவர் ஆற்றிய உரையில் சமகால அரசியலில் சலசலப்புச் செய்யும் அரசியல்வாதிகளுக்கு நிறைந்த புத்திமதிகளைக் கூறியுள்ளார். 
ஜனாதிபதிக்கு இருக்கக்கூடிய அதிகாரங்கள் பற்றி தெரிந்து கொள்ளாதவர் அல்ல நான். அதிகாரங்களைக் கையில் எடுக்கக் கூடாது என்ற உயர்ந்த எண்ணம் காரணமாகவே அமைதியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரியின் மேற்போந்த உரையில் இருந்து அவரின் நிதானம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயந்தவர் என்றோ அல்லது அரசியலை நடத்த வல்லமை அற்றவர் என்றோ யாரும் நினைத்துவிடக் கூடாது. ஏனெனில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வை எதிர்த்து தேர்தலில் நின்ற மிக உயர்ந்த வீரம் மைத்திரியிடமே இருந்தது. ஜனாதிபதித் தேர்தல் மகிந்த ராஜபக்­ வெற்றி பெற்றால், நிலைமை என்னவாக இருக்கும் என்பதை நன்கு அறிந்திருந்த மைத்திரி, மகிந்தவின் மிரட்டலை துச்சமாக மதித்து தேர்தல் களத்தில் இறங்கினார்.

என்னோடு போட்டியிட இருக்கும் அந்த வீரன் யார்? என்று அறிய ஆவலாக இருக்கிறேன் என மகிந்த ராஜபக்­ கர்ச்சித்தார். யாருமே தன்னை எதிர்த்துப் போட்டியிட முன்வர மாட்டார்கள். அப்படி வந்தால் அவர்களை என்ன செய்வேன் என்பது தெரியும் தானே? என்ற தடிப்பில் கர்ச்சித்த மகிந்தவுக்கு அமைதியாகப் பதில் கொடுத்து உன்னோடு போட்டியிடும் மாவீரன் இந்த மைத்திரி என்று களமிறங்கியவர் தற்போதைய ஜனாதிபதி.

ஆக, மகிந்த ராஜபக்­வோடு போட்டியிட்டால் தனக்கு மட்டும் அல்ல; தன் சந்ததிக்கே ஆபத்து என்றிருந்த சூழ்நிலையில் இலங்கைத் திருநாட்டில் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தன் கடமை என்று கூறி தேர்தல் களமிறங்கிய மைத்திரியை எவரும் சாதாரணமாக எடைபோட்டுவிடக் கூடாது. சுருங்கக் கூறின் இந்த நாட்டில் எந்த அரசியல்வாதிக்கும் இல்லாத துணிச்சல் மைத்திரியிடம் இருந்தது.

பொதுவில் எங்கள் நாட்டில் இருக்கக்கூடிய ஒரு பெரும் பலவீனம்; நல்ல குணத்தை பலவீனமாகக் பார்ப்பது.இந்த வகையில்தான் ஜனாதிபதி மைத்திரியையும் அரசியல்வாதிகள் சிலர் பார்க்கின்றனர். இதன் காரணமாக மைத்திரியின் அரசுக்குத் தொந்தரவு செய்ய இவர்கள் தலைப்பட்டுள்ளனர்.

எனினும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்­ கைது செய்யப்பட்டதை அடுத்து, மைத்திரியின் ஆட்சியைக் குழப்பும் நோக்கில் ஆர்ப்பரித்த அரசியல்வாதிகள் சிலர் பயத்தால் நிலத்தில் வீழ்ந்து பாதுகாப்புத் தேடுகின்றனர்.

எனினும் இன்னும் சிலர் கைது செய்யப்படக் கூடும் என்ற தகவல்களும் தேசியக் கொடியில் மாற்றம் செய்தவர்களைத் தண்டிக்க நீதித்துறை தயாராகிவிட்டதென்ற தகவலும் நாட்டில் அமைதியை நிலைநாட்டும் போல் தெரிகிறது.

எதுவாயினும் ஜனாதிபதி மைத்திரி பொறுமைக்கு எல்லையிட்டு; மகிந்தவை எதிர்த்து தேர்தலில்கள மிறங்கியது போல, நாட்டில் அமைதியை ஏற்படுத்து வதற்காக களத்தில் குதித்து சமராடுவது அவசியம்.

அப்போதுதான் மகிந்தவின் ஆதரவாளர்கள் அடங்குவர். நாட்டைக் குழப்பலாம் என நினைப்பவர்களும் மடங்குவர்.
http://www.tamilwin.com/show-RUmtyERbSUjw3B.html

19வது திருத்தம் நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்தும்!– இரா.சம்பந்தன்
[ திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015, 08:58.41 AM GMT ]
அரசியலமைப்புச் சட்டத்தின் 19வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதன் மூலம் நாட்டில் ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் ஸ்தாபிக்கும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைகின்றது.
நாடாளுமன்ற அதிகாரங்களை கவனத்தில் கொள்ளாது கட்சி மாறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்டத்தை செயற்படுத்த நடவடிக்கை எடுத்து, மீண்டும் நாடாளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் சம்பந்தன் கூறினார்.
அத்துடன் நீதித்துறை சுதந்திரம்,, பொலிஸ் ஆணைக்குழு, தேர்தல் ஆணைக்குழு, கணக்காய்வு ஆணைக்குழு போன்றவை ஸ்தாபிக்கப்படுவதன் மூலம் சுதந்திரமான நிர்வாகம் உருவாகும் எனவும் சம்பந்தன் குறிப்பிட்டார்.


தந்தை செல்வாவும் பண்டாரநாயக்கவும் சமஸ்டி குறித்த ஒரே நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தார்கள்: மாவை எம்.பி
[ திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015, 08:58.33 AM GMT ]
இந்த நாட்டில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டுமெனில், சமஸ்டி அமைப்பை, தங்களுடைய சொந்தப் பிரதேசங்களில் தாங்களே ஆளுகின்ற ஆட்சியை அமைப்பது தான் பொருத்தமானது என தந்தை செல்வாவும் பண்டாரநாயக்கவும் நம்பிக்கை கொண்டிருந்தார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
1951ம்ஆண்டு திருமலையில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் சமஸ்டி அமைப்பை அடிப்படையாக கொண்டன. இந்த தீர்மானங்களின் அடிப்படையும் பண்டாரநாயக்க விட்டுச் சென்ற செய்தியும் ஒன்றாகவே இருந்தது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
பம்பலப்பிட்டியில் நேற்று இடம்பெற்ற தந்தை செல்வாவின் சிரார்த்த தின நிகழ்வில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyERbSUjw3G.html

Geen opmerkingen:

Een reactie posten