[ திங்கட்கிழமை, 13 ஏப்ரல் 2015, 08:35.36 AM GMT ]
இது தொடர்பில் அச்சங்கத்தின் தலைவர் முரளி வல்லிபுரம் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைப் பிரதிநிதியான டாக்டர் அனந்தமதூருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை விடவும் சிறிய அளவிலான பாதைகளேயே புதிய அரசாங்கம் நிர்மாணிக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
அக்கடிதத்தின் பிரதிகளை அவர் யுனிசெப்பின் இலங்கைப் பிரதிநிதி, சுகாதார அமைச்சர், வடக்கு மாகாண ஆளுநர், முதலமைச்சர் உட்பட 11 பேருக்கு அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சுன்னாகம் மற்றும் யாழ்.மாவட்டத்தின் ஏனைய இடங்களில் நிலத்தடி நீர் மாசு குறித்துச் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேற்கொண்ட ஆய்வில் 150 கிணறுகளில் 109 கிணறுகளில் கிறீஸ் மற்றும் கழிவு எண்ணெய் கலந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
சுகாதார அமைச்சின் அதிகாரிகள் உடுவில், தெல்லிப்பழை மற்றும் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள 30 கிணறுகளின் மாதிரியை அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தில் பரிசோதனை செய்ததில் எண்ணெய், கிறீஸ் கலந்திருப்பது உண்மையெனவும், ஏற்றுக் கொள்ளப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மேற்படி பகுதியின் நிலத்தடி நீரின் மாசு குறித்து ஆராய்வதற்கும், அதனை முறையான படிமுறையில் மேற்கொள்வதற்கும் உபகரணங்களை வழங்குமாறு அக்கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மகிந்த அரசு ஊழலில் ஈடுபட்டதென காட்ட அளவில் சிறியதான வீதிகளை அமைக்கும் மைத்திரி அரசு: நாமல்
[ திங்கட்கிழமை, 13 ஏப்ரல் 2015, 09:34.02 AM GMT ]
அம்பாந்தோட்டை மாவட்ட மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பாதை நிர்மாணப் பணிகளுக்காக பயன்படுத்தப்படுகின்ற கொங்கிரீற் கற்படிகளின் தடிப்புகளை குறைத்தும் செலவை குறைத்தும் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன், கடந்த அரசாங்கம் வீதி அபிவிருத்தி பணிகளின் போது ஊழல் மோசடிகளில் ஈடுபட்டது என நாட்டிற்கு வெளிப்படுத்தியுள்ளதை நிரூபிப்பதற்காகவே தற்போதைய அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீதி அபிவிருத்தி திட்டங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள பாதைகளில் பாதுகாப்பு வலயங்களை தற்போதைய அரசாங்கம் நீக்கியுள்ளது.
அத்துடன் வீதிகள் ஸ்தீரமற்ற தன்மையில் காணப்படுகின்றது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகவியலாளர்களை அனுமதிக்க வேண்டாம் என உத்தரவிட்டது நானே!- யாழ். அரச அதிபர்
[ திங்கட்கிழமை, 13 ஏப்ரல் 2015, 07:55.36 AM GMT ]
மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் காலை 9.30 மணி தொடக்கம் ந ண்பகல் 12 மணிவரையில் நடைபெற்றிருந்தது.
குறித்த கலந்துரையாடலில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் மாகாண ஆளுநர் பளிஹக்கார மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப் பினர்கள் சமூக ஆர்வலர்கள், சட்டத்தரணிகள், வைத்தியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் செய்தி சேகரிப்பிற்காக ஊடகவியலாளர்கள் சென்றிருந்த நிலையில் கேட்போர் கூடத்திற்குள் செல்லவேண்டாம். எனவும் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி இல்லை. எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில் அவ்வாறு அனுமதி இல்லை என தெரிவித்தவர்கள் யார்? என வினவியபோது ஆளுநர் அந்த உத்தரவை வழங்கியதாக மாவட்டச் செயலகத்தின் அதிகாரிகள் தெரிவித்திருந்தார்கள்.
இந்நிலையில் விடயம் தொடர்பாக கலந்துரையாடல் நிறைவடைந்ததன் பின்னர் ஆளுநரின் செயலாளர் இளங்கோவனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது அவ்வாறான அறிவுறுத்தல் எதனையும் நாங்கள் வழங்கவில்லை. என அவர் அடியோடு மறுத்திருந்தார். மேலும் ஆளுநர் தடுத்ததாக கூறியவர் யார்? எனவும் இளங்கோவன் கேட்டிருந்தார்.
இந்நிலையில் ஆளுநர் ஊடகவியலாளர்களை அனுமதிக்க வேண்டாம். என ஊடகவியலாளர்களுக்கு கூறியவருடன் தொடர்பு கொண்டபோது அவர் அந்த விடயத்தை மறைக்க முற்பட்டார்.
பின்னர் யாழ்.அரசாங்க அதிபரை நேரில் சந்தித்து ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, அவ்வாறான உத்தரவை தானே கொடுத்ததாகவும், ஊடகவியலாளர்களினால் பல குழப்பங்கள் மக்கள் மத்தியில் உருவாக்கப்படுகின்றது.
எனவே பல தரப்புக்கள் இணக்கப்பாட்டுடன் பேசிக் கொள்ளும் இந்தக் கலந்துரையாடலில் ஊடகவியலாளர்கள் கலந்துகொள்ளக் கூடாது என நினைத்தே உத்தரவை வழங்கியதாகவும் கூறியதுடன் கலந்துரையாடல் நிறைவின் பின்னர் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக தெரிவிக்கலாம். என தாம் எண்ணியிருந்ததாகவும் அவர் விளக்கினார்.
அவ்வாறெனில் ஊடகவியலாளர்கள் குழப்பவாதிகளா? என மீண்டும் கேட்டதற்கு அதனை அப்படியே அரசாங்க அதிபர் விழுங்கி விட்டு அமைதியாக இருந்தார். என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyESXSUkw7D.html
Geen opmerkingen:
Een reactie posten