2013ம் ஆண்டு இலங்கை தமிழர் ஒருவரை , நாடுகடத்தியுள்ளது சுவிஸ் அரசு. அவரது அகதிகள் கோரிக்கையை நிராகரித்த சுவிஸ் அரசு , அவருக்கு இலங்கையில் எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லை என்று கூறி மீண்டும் அவரை இலங்கை நாடு கடத்தியது. இன் நிலையில் கட்டநாயக்க விமான நிலையத்தில் வைத்தே சிங்களப் படையினர் அவரைக் கைதுசெய்து நேரடியாக 4ம் மாடிக்குகொண்டுசென்றுவிட்டார்கள். கடந்த 2 வருடங்களாக அவர் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். இதேவேளை பெரும் சித்திரவதைகளையும் அனுபவித்து வந்துள்ளார். அவரது சட்டத்தரணி இது தொடர்பான ஆதாரங்களை திரட்டி கொழும்பில் உள்ள சுவிஸ் தூதுவருக்கு அனுப்பியுள்ளார்.
இதேவேளை மனித உரிமை அமைப்புகளும் இதனை முன்னுதாரணமாக காட்டி , சுவிஸ் அரசாங்கத்தை சாடத்தொடங்கியுள்ளது. இதனால் நன்றாக வாங்கிக்கட்டிய சுவிஸ் அரசாங்கம் அவரை மீண்டும் சுவிஸ் நாட்டுக்கு அழைத்து , அகதிகள் அந்தஸ்த்து கொடுப்பது என்ற முடிவை எட்டியுள்ளார்கள். மைத்திரி அரசால் அவர் சில வாரங்களுக்கு முன்னர் தான் விடுவிக்கப்பட்டு உள்ளார். அவரை கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரக அதிகாரிகள் விசாரித்துள்ளார்கள். விரைவில் அவருக்கு சுவிஸ் விசா வழங்கப்பட உள்ளதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.
http://www.athirvu.com/newsdetail/3055.html
Geen opmerkingen:
Een reactie posten