தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 14 april 2015

மதியிறுக்க மீள்வுக் கடமைகளும் தமிழ்ச் சமுதாயத்தின் சிறப்புத் தேவையுள்ள சிறார்களும்

தாமரைக் கோபுரம் சீன இலத்திரனியல் உளவு மையமா?
[ செவ்வாய்க்கிழமை, 14 ஏப்ரல் 2015, 02:46.49 AM GMT ]
இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரைக் கோபுரம் சீன இலத்திரனியல் உளவு மையம் என இந்திய பாதுகாப்பு தந்திரோபாய ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா மற்றும் தொடர்பாடல் மேம்படுத்தல் அபிவிருத்தித் திட்டம் என்ற போர்வையில் சீனா, இந்த உளவு மையத்தை உருவாக்கி வருகின்றது.
சீனாவின் இரண்டு பாதுகாப்பு நிறுவனங்களினால் இந்த நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஈபிள் கோபுரத்தை விடவும் 26 மீற்றர் உயரமுடைய தாமரைக் கோபுரமானது தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமாக உருவாக்கப்பட உள்ளது.
ஒரு புறத்தில் இந்தியாவையும் மறுபுறத்தில் இந்து சமுத்திரத்தையும் மையப்படுத்தி இந்த கோபுரம் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சீன எக்ஸிம் வங்கியின் நிதி உதவியுடன் இந்த கோபுரம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது என இந்திய பாதுகாப்பு தந்திரோபாய ஆலோசகர் ஹஸ்கர் ரோய் தெரிவித்துள்ளார்.
இந்த கோபுரம் நிர்மாணிக்கப்பட்டால் இந்தியாவினதும், தெற்காசியாவினதும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.


மதியிறுக்க மீள்வுக் கடமைகளும் தமிழ்ச் சமுதாயத்தின் சிறப்புத் தேவையுள்ள சிறார்களும்
[ செவ்வாய்க்கிழமை, 14 ஏப்ரல் 2015, 03:09.45 AM GMT ]
மன இறுக்க அல்லது மதியிறுக்க (Autism) நிலையிலுள்ள சிறார்களையோ, இளைஞர்களையோ நாங்கள் சிறப்புத் தேவையுள்ள சிறார்கள், விசேட தேவையுள்ள இளைஞர் யுவதிகள் என்று அழைக்க வேண்டும்.
இவர்கள் தங்களது உணர்வுகளை எவ்வாறு சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப கட்டுப்படுத்தி வெளிப்படுத்துவது என்பதற்கான மத்திய நரம்பு மண்டல இயக்கத்தை கட்டுப்படுத்தும் திறன் அற்றவர்கள்.
இவர்களிற்கான தேவைகள் என்ன? இந்த சிறப்புத் தேவையுள்ளவர்களை எவ்வாறு நாங்கள் கனம் பண்ணலாம் போன்றவற்றை அறிந்திருந்தால், இவ்வாறான சிறப்புத் தேவையுள்ளவர்களின் பெற்றோர்களிற்கு சமுதாயமும் உதவும் மிகப்பெரும் பணியாக இருக்குமென  கடந்த சனிக்கிழமை லங்காசிறி வானொலியில் இடம்பெற்ற நிஜத்தின் தேடல் நிகழ்வில் ஆய்வாளர் சுரேஸ் தர்மா கருத்துப் பகிர்ந்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyESYSUkx0A.html

Geen opmerkingen:

Een reactie posten