[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2015, 02:09.15 PM GMT ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
நாளைய தினம் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பாக இதில் கலந்துரையாடப்படவுள்ளது.
அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் இடையில் இன்று இரவு மற்றுமொரு சந்திப்பும் நடைபெறவுள்ளது.
இதிலும் 19வது திருத்தச் சட்டம் குறித்து கலந்துரையாடப்பட உள்ளது.
19வது திருத்தத்திற்கு ஆதரவு வழங்குமாறு எம்.பிக்களிடம் மல்வத்து மாநாயக்கர் கோரிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2015, 02:22.44 PM GMT ]
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் ஓரளவேனும் குறைக்கப்படுவது நாட்டுக்கு சாதகமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையளித்த 19வது திருத்தச் சட்டத்தை ஆராய்ந்த பின்னர் மாநாயக்க தேரர் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை கூறியுள்ளார்.
அதிகாரத்தில் இருக்கும் போது இப்படியான திருத்தங்களை மேற்கொள்ள எந்த அரசியல்வாதியும் முன்வரவில்லை.
தற்போது நாட்டிற்கு நல்லது நடக்கும் சந்தர்ப்பம் உதயமாகியுள்ள நேரத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை மாத்திரமல்ல, விருப்பு வாக்கு தேர்தல் முறையையும் ஒழிக்க வேண்டும். இதன் மூலமும் நாட்டுக்கு நல்லது நடக்கும் எனவும் மாநாயக்க தேரர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyERaSUjwyD.html
தமிழக மீனவர்களின் அனைத்து படகுகளும் விடுவிக்கப்படவில்லை!
[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2015, 03:24.54 PM GMT ]
எனினும் இதில் 16 படகுகளை மாத்திரமே தமிழக மீனவர்களால் தமது நாட்டுக்கு எடுத்துச்செல்ல முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் 52 படகுகளும் விடுவிக்கப்பட்டு விட்டதாக பிழையான செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை அதிகாரிகள் குறித்த படகுகளை எடுத்துச் செல்ல அனுமதி மறுப்பதே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 86 இந்திய படகுகள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அதில் 34 படகுகள் தமிழக மீனவர்களால் எடுத்துச் செல்லப்பட்டன.
இந்தநிலையிலேயே 52படகுகள் தடுத்துவைக்கப்பட்டிருந்தன.
இதில் 16 படகுகளே கடந்த புதன்கிழமை விடுவிக்கப்பட்டு தமிழகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
யாழ். குடாநாட்டில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில்..! மக்களுக்கு எச்சரிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2015, 03:39.58 PM GMT ]
இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழ் - சிங்கள புதுவருடத்துடன் புதிய நாணயத்தாள்கள் அச்சிட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ளது.
எனவே அதனை சாதகமாக பயன்படுத்தி போலி நாணயத்தாள்களும் விசமிகளால் அச்சிடப்பட்டு புழக்கத்திற்கு தற்போது விடப்பட்டுள்ளது.
அந்தவகையில் போலி நாணயத்தாள்களின் புழக்கம் யாழ்.குடா நாட்டில் அதிகரித்துள்ளது.
5000 , 1000 , 500 ஆகிய தாள்களே போலியாக வெளியிடப்பட்டுள்ளன.
எனவே வியாபார நிலையங்களில் உள்ளவர்களும் , பொதுமக்களும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
கவனயீனமாக இருந்தால் சட்ட நடவடிக்கைகளுக்குக் கூட ஆளாகலாம் என வணிகர் கழகத்தினர் மேலும் அறிவுறுத்தியுள்ளனர்.
ஜனாதிபதியின் பாதுகாப்பு மீறப்பட்டதா? தனக்கு தெரியாது என்கிறார் நாமல்
[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2015, 03:50.50 PM GMT ]
நேற்று அங்குனுகொலபெலஸ்ஸவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற நிகழ்வு ஒன்றில், நாமல் ராஜபக்சவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கியுடன் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இவ்வாறானதொரு குற்றச்சாட்டு பற்றி தமக்கு தெரியாது என நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
யாரும் தமக்கு இது குறித்து அறிவிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் பாதுகாப்பு விடயங்களில் தலையீடு செய்யப் போவதில்லை எனவும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyERaSUjwyI.html
Geen opmerkingen:
Een reactie posten