[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2015, 09:34.47 AM GMT ]
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பாதுகாப்பாளர் ஒருவரான இராணுவ சிப்பாய் துப்பாக்கி ஒன்றை மறைத்து வைத்துக்கொண்டு நுழைய முடியாத இடத்தில் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரதிநிதிகளை விழிப்புணர்வு செய்யும் முகமாகவே ஜனாதிபதி இச்சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் குறித்த இராணுவ சிப்பாயை போதுமான அளவு சோதனையிடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிப்பாய் ஜனாதிபதி அருகில் நெருங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி வருகை தரும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சாதாரண பொலிஸ் பாதுகாப்பிற்கு பதிலாக ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினால் பூரன சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்த சம்பவம் இடம் பெற்ற சந்தர்ப்பத்தில் துப்பாக்கியுடன் இனங்காணப்பட்ட நபரை வெளியேற்றியுள்ளதுடன் அது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றன.
வலி.வடக்கில் 5859 ஏக்கர் நிலம் தொடர்ந்தும் படையினரின் கட்டுப்பாட்டில்!
[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2015, 09:40.08 AM GMT ]
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்குப் பகுதிகளில் உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருக்கும் படையினர் பயன்படுத்தாத நிலங்கள் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் மேற்படி இரு பிரதேசங்களிலும் சுமார் 1056.8 ஏக்கர் நிலம், மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வலி. வடக்கில் 656 ஏக்கர் நிலமும் வலி. கிழக்கில் 400.8ஏக்கர் நிலமும் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வலி. வடக்கில் 150 ஏக்கர் அளவுள்ள நிலத்தில் படையினர் தொடர்ந்தும் முகாம் அமைத்து தங்கியுள்ளதுடன், வலி. வடக்கில் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட தென்மயிலை, மற்றும் தையிட்டி தெற்கு பகுதிகளில் மக்கள் எவரும் மீள்குடியேற்றத்திற்கு வருகைதரவில்லை.
இதற்கான காரணம் இந்தப் பகுதிகள் மக்களுடைய விவசாய நிலங்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்படி விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சுமார் 466 குடும்பங்கள் மீள்குடியேற்றத்திற்கான, பதிவுகளை மேற்கொண்டிருக்கின்றனர்.
இதன்படி ஜே.226 நகுலேஷ்வரம் 74.1 ஏக்கர், ஜே.233 காங்கேசன்துறை மேற்கு 938.6 ஏக்கர், ஜே.234 காங்கேசன்துறை மத்தி 247 ஏக்கர், ஜே.235 காங்கேசன்துறை தெற்கு 113.3ஏக்கர், ஜே.236 பளைவீமன்காமம் வடக்கு 98.14 ஏக்கர்,
ஜே.238 கட்டுவன் 238 ஏக்கர், ஜே.240 தென்மயிலை 221 ஏக்கர், ஜே.241 வறுத்தலை விளான் 103.3 ஏக்கர், ஜே.242 குரும்பசிட்டி 247 ஏக்கர், ஜே.243 குரும்பசிட்டி கிழக்கு 98.8ஏக்கர், ஜே.244 வசாவிளான் கிழக்கு 36.62 ஏக்கர்,
ஜே.245 வசாவிளான் மேற்கு 98.8 ஏக்கர், ஜே.246 மயிலிட்டி வடக்கு 1210.3 ஏக்கர், ஜே.247 தையிட்டி கிழக்கு 222.3 ஏக்கர், ஜே.248 மயிலிட்டி தெற்கு 172.9 ஏக்கர், ஜே.249 தையிட்டி வடக்கு 172.9 ஏக்கர், ஜே.250 தையிட்டி தெற்கு 254.7 ஏக்கர்,
ஜே.251 மயிலிட்டிதுறை வடக்கு 172.9 ஏக்கர், ஜே.252 பலாலி தெற்கு 51.6 ஏக்கர், ஜே.253 பலாலி கிழக்கு 370.5 ஏக்கர், ஜே.254 பலாலி வடக்கு 321.1 ஏக்கர், ஜே.255 பலாலி வட மேற்கு 197.6 ஏக்கர், ஜே.256 பலாலி மேற்கு 197.6 ஏக்கர் ஆகிய அளவுகளில் மொத்தமாக சுமார் 5 ஆயிரத்து 859.6 ஏக்கர் நிலம் தொடர்ந்தும் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது.
இந்நிலையில் மேற்படி நிலத்திற்குச் சொந்தமான சுமார் 9 ஆயிரத்து 968 குடும்பங்களைச் சேர்ந்த 34 ஆயிரத்து 368 பேர் மீள்குடியேறவேண்டியவர்களாக உள்ளார்கள்.
இதில் 1318 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 737 பேர் யாழ்.மாவட்டத்திலுள்ள 32 நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கின்றனர். மீதமான மக்கள் உறவினர், நண்பர்கள் வீடுகளில் தங்கியிருக்கின்றமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.
http://www.tamilwin.com/show-RUmtyERaSUjv6A.html
Geen opmerkingen:
Een reactie posten