தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 29 april 2015

தொடர்ந்தும் மிரட்டல்களைச் சந்தித்துவரும் இலங்கைப் பெண்

பாலியல் தொழிலை சட்ட ரீதியாக்க வேண்டும் உள்ளிட்ட சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிட்ட இலங்கை பெண் ஊடகவியலாளர் மற்றும் சமூக ஆர்வலர் சர்மிளா சையத் தொடர்ந்தும் மிரட்டல்களை சந்தித்து வருகின்றார்.
ஆங்கில ஊடகமொன்று இது தொடர்பில் வெளியிட்டுள்ள செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு சர்மிளா சையத்தின் சிறகு முளைத்த பெண் என்ற கவிதை நூலில் விபச்சாரி ஒருவர் குறித்த கவிதையினை எழுதியிருந்தார்.
அது தொடர்பில் அவரிடம் சர்வதேச ஊடகம் ஒன்று அவரிடம் கேள்வி கணைகளை தொடுத்துள்ளது.
அந்த செவ்வியின் பின்னர் அவருக்கு இலங்கையில் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதால், தனது பிள்ளையுடன் இந்தியாவுக்கு தப்பிச் சென்றார்.
இந்நிலையில் அவரது உம்மத் என்ற நாவலில் கூறப்பட்ட கருத்துக்களும் சர்ச்சையை ஏற்படுத்துவதாக அமைந்தன.
இதனையடுத்து இந்தியாவிலும் அவருக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகவும் இதனால் அவர் மறைந்து வாழ்வதாகவும் தெரியவருகின்றது.
சர்மிளாவைப் பற்றிய அவதூறுகளும் பெருகிவந்த வண்ணமேயுள்ளன. அவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டதாகவும் இணையத்தளங்களில் புரளிகள் கிளம்பின.
மறுபுறம் சர்மிளாவை பாதுகாக்குமாறும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyERdSUiozC.html

Geen opmerkingen:

Een reactie posten