தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 14 april 2015

சொந்தநிலத்தில் சுயாட்சி அதிகாரங்களைப் பெற்று சுதந்திரமாக வாழ தொடர்ந்து போராடுவோம்! சம்பந்தன் பா.உ.

நாட்டின் ஐக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்வோம்!- எதிர்க்கட்சித் தலைவர்
[ செவ்வாய்க்கிழமை, 14 ஏப்ரல் 2015, 02:59.07 AM GMT ]
நாட்டின் ஐக்கியத்தை பாதுகாத்துக் கொள்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
தமிழ் சிங்கள புதுவருட முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
புதுவருடப் பிரார்த்தனைகளில் மெய்யான அபிவிருத்தி மற்றும் நாட்டின் ஐக்கியம் ஆகியனவற்றை பாதுகாப்பது முதன்மையாக அமைய வேண்டும்.
புதுவருட காலத்தில் உறவினர் நண்பர்களுடன் அன்பைப் பகிர்ந்து கொள்வோம்.
அனைத்து இன சமூகங்களுடனும் இணைந்து புதுவருடத்தைக் கொண்டாடுவோம்.
மதிநுட்பத்துடன் செயற்படுவதன் மூலம் நாட்டில் நிலவி வரும் வியாகூல நிலைமைகளிலிருந்து மக்களை மீட்டெடுக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் தனது புதுவருட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

சொந்தநிலத்தில் சுயாட்சி அதிகாரங்களைப் பெற்று சுதந்திரமாக வாழ தொடர்ந்து போராடுவோம்! சம்பந்தன் பா.உ.
[ செவ்வாய்க்கிழமை, 14 ஏப்ரல் 2015, 04:44.59 AM GMT ]
தமிழ் மக்கள், தமது சொந்த நிலத்தில் போதிய சுயாட்சி அதிகாரங்களைப் பெற்று சுதந்திரமாக, கௌரவமாக, நிரந்தரமாக வாழும் நிலை வரவேண்டும். அதுவரை நாம் தொடர்ந்து போராடுவோம்  என்று மலரப் போகின்ற இந்த சித்திரைப் புதுவருடத்தில் சபதம் எடுத்துக்கொள்கின்றோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பா.உ. தெரிவித்தார்
புதுவருட வாழ்த்துச் செய்தியில் சம்பந்தன் எம்.பி. மேலும் தெரிவிக்கையில்,
2015ம் ஆண்டின் ஆரம்பத்தில் நாம் ஆட்சி மாற்றத்தையும் அரசியல் தீர்வையும் எதிர்பார்த்தோம். நாம் எதிர்பார்த்த மாதிரி நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அனைவரையும் ஒன்றிணைத்து சமத்துவத்துடனும் சமாதானத்துடனும் நீதியைக் கட்டியெழுப்பக்கூடிய நல்ல சூழல் ஓரளவுக்கு வந்துள்ளது.
இதனை நாட்டில் உள்ள அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நல்லாட்சி முழுமை பெறவேண்டும் என்றால் வாக்குறுதிகள் அனைத்தையும் அரசு நிறைவேற்றியே ஆகவேண்டும்.
சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்ற போதிலும் அரசியல் தீர்வு சம்பந்தமான வாக்குறுதிகளுக்கு கால அவகாசம் வேண்டும் என்பது உண்மைதான்.
அதற்காக தீர்வு சம்பந்தமான விடயத்தை கிடப்பில் போடுவதை நாம் அனுமதிக்க மாட்டோம். இந்த நாட்டில் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் அவர்களின் அபிலாஷைகள் நிறைவேறவில்லை.
அவர்கள் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகளினால் ஏமாற்றப்பட்டு வந்தார்கள். இந்நிலைமை இந்த ஆட்சியில் மாறவேண்டும்.
எதிர்வரும் வருடத்திற்குள் இந்நிலைமை மாறவேண்டும். மாறக்கூடிய சூழலும் இல்லாமல் இல்லை. இதனை அரசு புரிந்துகொண்டு செயற்படவேண்டும் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyESYSUkx0G.html

Geen opmerkingen:

Een reactie posten