தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 14 april 2015

அழுத்தங்கள் இல்லாது புதுவருடத்தை கொண்டாட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது!- பிரதமர்

ஜனாதிபதிக்கு உடல் நலம் பாதிப்பு!
[ திங்கட்கிழமை, 13 ஏப்ரல் 2015, 01:42.10 PM GMT ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உடல் நலக் குறைவினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலனறுவையில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வுகளை ரத்து செய்துள்ளார்.
அவசரமாக கொழும்பு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும் பாரதூரமான உடல் நலக்குறைவு எதுவும் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.


சுதந்திரக் கட்சியில் இருந்து விலக்கப்பட்டவர்களுக்கு ஜனசெத்த பெரமுன கட்சி அழைப்பு
[ திங்கட்கிழமை, 13 ஏப்ரல் 2015, 03:37.24 PM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்ட ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தமது கட்சியில் இணைந்து கொள்ளுமாறு ஜனசெத்த பெரமுன கட்சியின் தலைவர் கோரியுள்ளார்.
கட்சியின் தலைவரான பத்தரமுல்ல சீலரத்தின தேரர் இந்த அழைப்பை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இடமில்லையென்றபோதும் தமது கட்சியில் ஐந்து பேருக்கும் இடமிருப்பதாக தேரர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்ட ஐந்து பேரும் மீண்டும் மத்திய செயற்குழுவில் இணைந்துக் கொள்ளப்படலாம் என்ற ஊகங்களும் அவர்களுக்கு பதில் புதியவர்கள் நியமிக்கப்பட்டு விட்டார்கள் என்ற செய்திகளும் வெளியாகியுள்ளன.


அழுத்தங்கள் இல்லாது புதுவருடத்தை கொண்டாட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது!- பிரதமர்
[ செவ்வாய்க்கிழமை, 14 ஏப்ரல் 2015, 01:28.14 AM GMT ]
அழுத்தங்கள் மற்றும் அடக்குமுறைகள் இன்றி புத்தாண்டை கொண்டாட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் வி;க்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அழுத்தங்கள் இன்றி புதுவருடத்தை அனைவரும் கொண்டாட வாய்ப்பு கிட்டியமை மிகவும் முக்கியமானது.
இது வசந்த காலமாகும், இன, மத மொழி பேதங்கள் இன்றி அனைத்து மக்களும் இலங்கையர் என்ற ரீதியில் கொண்டாட்டங்களில் ஈடுபடும் காலம் என்ற ரீதியில் கொண்டாட்டங்களில் ஈடுபடும் காலமாகும்.
தமிழ் சிங்கள புதுவருடம் இலங்கை வாழ் மக்களுக்கு மிகவும் முக்கியமானதோர் கலாச்சார கலை நிகழ்வாகும்.
வரலாற்றுக் காலம் முதலே இயற்கையுடனும் விவசாயத்துடனும் நெருங்கிய தொடர்புடைய இலங்கையர்களுக்கு புதுவருடம் மிகவும் முக்கியமானதாகும்.
தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம், மகிழ்ச்சி, சௌபாக்கியம் போன்றவற்றை மெருகூட்டும் நிகழ்வாகவே இதனை கருதுகின்றோம்.
தமிழ் சிங்கள புதுவருடம் இனங்களுக்கு இடையில் சமாதானத்தையும் சௌபாக்கியத்தையும் ஏற்படுத்தும் மகிழ்ச்சியான  வருடமாக மலரட்டும் என பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyESYSUkxzE.html

Geen opmerkingen:

Een reactie posten