[ செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015, 11:59.44 PM GMT ]
19வது திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
1978ம் ஆண்டின் அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்ட பின்னர் 5 பேர் இந்த பாராளுமன்றத்தில் இருக்கின்றனர். இதில் சம்பந்தன் எம்.பி தவிர நாம் மூவர் நிறைவேற்று அதிகாரத்துக்கு ஆதரவாக வாக்களித்தவர்களாகும்.
நிறைவேற்று ஜனாதிபதி முறை மூலம் நாட்டில் பாரிய மாற்றங்கள் இடம்பெற்றன. சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தபோது ஐ.தே.க அரசு கஷ்டங்களுக்கு மத்தியில் செயற்பட்டது. இறுதியில் தேர்தலுக்கு செல்ல நேரிட்டது. வேறுபட்ட இரு கட்சிகள் ஒன்றாக செயற்பட்டது. இதுவே முதல் தடவையாகும்.
மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் யுத்தத்தை செய்வதற்காக நிறைவேற்று அதிகாரம் தேவை எனத் தெரிவிக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் ஜனாதிபதிக்கு சென்றன. ராஜபக்ச ரெஜிமென்ட் தான் அனைத்தையும் நிர்வகித்தன.
நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கவும் 18வது திருத்தத்தை நீக்கவும் கட்சிகளிடையே உடன்பாடு ஏற்பட்டது. எமது 100 நாள் திட்டத்தில் ஜனாதிபதி முறையை ஒழிப்பதே பிரதானமாக இருந்தது. அது தவிர விருப்பு வாக்கற்ற தேர்தல் முறையை மாற்றவும் திட்டமிடப்பட்டது.
நிறைவேற்று ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களை பிரதமரினூடாக பாராளுமன்றத்துக்கு வழங்கவும் 17வது திருத்தத்தை செயற்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டது. 6 சரத்துக்களுக்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கவும் அமைச்சரவையினூடாக பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்களும் திட்டமிடப்பட்டன.
அடுத்த தேர்தலின் பின்னர் பாராளுமன்றத்தை அரசியலமைப்பாக மாற்றி புதிய அரசியலமைப்பை உருவாக்குவதே எமது நோக்கமாகும். நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவாகும் எவரும் தமது அதிகாரத்தை கைவிடுவதில்லை. அந்த கருத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாற்றியுள்ளார். பாராளுமன்றத்தை பலப்படுத்துவதற்காக வரலாற்று முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளார்.
அரசியலமைப்பு சபை பாராளுமன்றத்திற்கு பொறுப்பு கூற வேண்டும் என்பதை ஏற்கலாம். இதற்கு நியமிக்கப்படும் உறுப்பினர்கள் எம்பிக்களாக இருக்க வேண்டும் என எதிர்தரப்பு கோரியது. எமக்கு பெரும்பான்மை கிடையாது இதன்படி 7 எம்பிக்களையும் 3 அரசியல் பிரதிநிதிகள் அல்லாதவர்களையும் நியமிக்கவும் உடன்பாடு காணப்பட்டுள்ளது.
ஆனால் அரசியலமைப்பு சபைக்கு நியமிக்கப்படும் உறுப்பினர்கள் அரசியலமைப்புக்கு அப்பாலே நியமிக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். வெஸ்மினிஸ்டர் முறைக்கு நெருக்கமான முறையே கொண்டுவரப்பட வேண்டும். எவருக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காது.
எமக்கு தேர்தல் முறை மாற்றம், தகவல் அறியும் சட்டமூலம், கணக்காய்வு சட்டமூலம் என்பவற்றை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இழுபறி நிலையை முடிவுக்குக் கொண்டுவர ஜனாதிபதியும் சபாநாயகரும் பங்களித்தார்கள் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyERcSUjx3H.html
ஒபாமாவை விடவும் ஜோன் கெரிக்கு இலங்கையில் அதிக பாதுகாப்பு!
[ புதன்கிழமை, 29 ஏப்ரல் 2015, 12:13.54 AM GMT ]
எதிர்வரும் மே மாதம் 2ம் திகதி ஜோன் கெரி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அமெரிக்க நாட்டு ஜனாதிபதிக்கு வழங்கப்படும் பாதுகாப்பை விடவும், அதிகளவான பாதுகாப்பு ஜோன் கெரிக்கு வழங்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜோன் கெரியின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் 200 அமெரிக்கப் படையினரும், வெடிபொருட்களை இனம் காணும் 40 பயிற்றப்பட்ட மோப்ப நாய்களும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜோன் கெரியின் இலங்கை விஜயம் தொடர்பில் செய்தி சேகரிப்பில் ஈடுபடும் நோக்கில் 40க்கும் மேற்பட்ட அமெரிக்க ஊடகவியலாளர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
நிதிக் குற்றவியல் பிரிவு சட்டவிரோதமானது என்றால் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்!- ஜனாதிபதி
[ புதன்கிழமை, 29 ஏப்ரல் 2015, 12:25.42 AM GMT ]
நிதிக் குற்றவியல் பொலிஸ் பிரிவு அமைக்கப்பதற்கு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் சட்டவிரோதமானது என்றால் அந்த வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்படும்.
இது தொடர்பில் அமைச்சரவையில் கலந்தாலோசித்து சட்டவிரோதமான முறையில் வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தால் அதனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க எடுக்கப்படும் என ஜனாதிபதி வாக்குறுதி அளித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போது நிதிக் குற்றவியல் பொலிஸ் பிரிவு சட்டவிரோதமான முறையில் நிறுவப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியிருந்தனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தெரியாமல் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதன்போது ஜனாதிபதி கூறியுள்ளார்.
நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்த முதல் ஜனாதிபதியாக வரலாற்றில் இடம்பிடித்த மைத்திரி!– சுமந்திரன்
[ புதன்கிழமை, 29 ஏப்ரல் 2015, 12:48.51 AM GMT ]
நாடாளுமன்றில் 19ம் திருத்தச் சட்டம் குறித்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
18ம் திருத்தச் சட்டத்தின் முதல் பேச்சாளராக உரையாற்றிய நான், ஜனநாயகத்தின் முடிவு இதுவெனக் குறிப்பிட்டேன்.
இன்று 18ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய விவாதம் நடத்தப்படுகின்றது அதில் பங்கேற்கக் கிட்டியமை மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது.
ஜனாதிபதி பதவியை ஏற்றுக் கொண்ட பலரும் நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்வதாக கூறியிருந்தனர்.
எனினும் எவரும் அதனை நடைமுறைப்படுத்தவில்லை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்ய இணக்கம் தெரிவித்து அதனை நடைமுறைப்படுத்தியவர் என்ற ரீதியில் வரலாற்றில் இடம்பிடித்து விட்டார் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
19ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக ஜனாதிபதியின் அதிகாரங்கள் அனைத்தும் குறைக்கப்படாது!– சரத் வீரசேகர
[ புதன்கிழமை, 29 ஏப்ரல் 2015, 01:25.22 AM GMT ]
ஜனாதிபதியின் அனைத்து நிறைவேற்று அதிகாரங்களும் இந்த திருத்தச் சட்டத்தின் ஊடாக குறைக்கப்படாது என்பது பலருக்கு தெரியாது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முற்றாக இல்லாதொழிக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
இதன் காரணமாகவே அரசாங்கம் சில சரத்துக்களை நீக்கிக்கொண்டுள்ளது.
சுயாதீன ஆணைக்குழுக்களின் ஊடாக பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட உயர் பதவிகளின் நியமனங்களின் போது அவர் ஜனாதிபதிக்கு விசுவாசமானவரா என்ற கேள்வி எழும்புகின்றது.
இந்த நிலைமையானது தேசிய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடுமென திகாமடுல்ல மாவட்டத்தின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரத்குமார வீரசேகர தெரிவித்துள்ளார்.
19ம் திருத்தச் சட்டம் குறித்த நாடாளுமன்ற உரையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyERdSUjx4D.html
Geen opmerkingen:
Een reactie posten