தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 28 april 2015

19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாக 215 வாக்குகளும், எதிராக 1 வாக்கும்



இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பின்போது 19 ஆம் திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 215 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டன.
ஒரு உறுப்பினர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
7 பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை என சபாநாயகர் சமல் ராஜபக்ஸ அறிவித்துள்ளார்.
19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் குழுநிலை வாக்கெடுப்பும் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளன.
19ம் திருத்தச் சட்ட வாக்கெடுப்பு ஒரு மணித்தியாலம் ஒத்திவைக்கப்பட்டது!
19ம் திருத்தச் சட்டம் தொடர்பிலான வாக்கெடுப்பு இன்று மாலை 6.00 மணிக்கு நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மணித்தியாலத்திற்கு வாக்கெடுப்பை ஒத்தி வைப்பதற்கு சபாநாயகர் தீர்மானித்துள்ளார்.
இதன்படி, 19ம் திருத்தச் சட்டம் குறித்த வாக்கெடுப்பு மாலை 7.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
கட்சித் தலைவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்த கால அவகாசத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் இவ்வாறு ஒரு மணித்தியாலம் பிந்தி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyERcSUjx2C.html


Geen opmerkingen:

Een reactie posten