[ செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015, 11:15.14 AM GMT ]
19ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக நிறுவப்படவுள்ள அரசியல் சாசன சபை குறித்து இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை த்ற்பொழுது நடைபெற்று வருவதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரசியல் சாசனப் பேரவையில் பாராளுமன்ற உறுப்பினர்களே அங்கம் வகிக்க வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
அரசியல் சாசனப் பேரவை குறித்து அரசாங்கத்திற்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் நடைபெற்ற நேற்றிரவு நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அரசின் 100 நாள் வேலைத்திட்டம் தோல்வி: ஆசிய ஊடகம்
[ செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015, 12:43.17 PM GMT ]
உலக புகழ் பெற்ற தி எக்கோனமிக்ஸ்ட் பத்திரிகை இது தொடர்பிலான செய்தியை வெளியிட்டுள்ளது.
100 நாள் வேலைத்திட்டம் தோல்வியடைந்தமைக்கான பிரதான காரணம் என்னவெனில் புதிய அரசாங்கத்திற்குள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனது பலத்தை உறுதி செய்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அசமந்த போக்குடன் செயற்பட்டு வருவதாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்காகவே ஜனாதிபதி அதிக காலங்களை செலவிட்டுள்ளார் என அப்பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட போதிலும் மகிந்த ராபக்சவுக்கு கட்சி ஆதரவாளர்கள் இருப்பதினால் அவருக்கு ஏதாவதொரு இலாபம் அடைவதற்கான வாய்ப்பு கட்சிக்குள் காணப்படுவதாக அப்பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலைவரை நீக்குமாறு கோரி 113 உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதமொன்று சபாநாயகரிடம் ஒப்படைத்த சம்பவம் மூலம் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை தொடர்பாகவும் குறித்த பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
அதேபோல் ராஜபக்ச அரசாங்கத்திற்கு பாராளுமன்றத்திற்குள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தது.
எனினும் தற்போதைய அரசாங்கத்திற்கு உண்மையற்ற குழுவின் வேலைத்திட்டங்களில் தோல்வியை தழுவுவதற்குரிய செயற்பாடுகளை மேற்கொள்ளுதல் மாத்திரமே இதுவரை முடிந்துள்ளது என அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.
தான் இதுவரை அரச கட்சியில் அங்கம் வகிக்கின்றேன் என்பதை விட எதிர்கட்சியில் அங்கம் வகிப்பதாகவே உணர்கின்றேன் என நாட்டில் தற்போதைய நிலைமை தொடர்பில் குறித்த பத்திரிகைக்கு அரச கட்சி உறுப்பினர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையினால் வெகு விரைவில் பாராளுமன்ற கலைக்கப்பட்டு பொது தேர்தலுக்கு செல்ல ஜனாதிபதி முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார் என அப்பத்திரிகை கணிப்புகளை வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyERcSUjx2B.html
Geen opmerkingen:
Een reactie posten