தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 4 april 2015

நாட்டை உண்மையாக நேசித்தால் ஓரமாக இருங்கள்: மகிந்தவிற்கு சந்திரிக்கா அட்வைஸ்!

நாடாளுமன்றத்தில் ஏப்ரல் மாத இறுதிக்குள் இரண்டு வாக்கெடுப்புகள்?
[ சனிக்கிழமை, 04 ஏப்ரல் 2015, 04:48.30 PM GMT ]
இலங்கையின் நாடாளுமன்றத்தில் இந்த மாத இறுதிக்குள் இரண்டு முக்கிய வாக்கெடுப்புக்கள் இடம்பெறவுள்ளதாக ஐக்கிய தேசியகட்சியின் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
கடந்த வியாழக்கிழமையன்று கட்சியின் செயற்குழு கூடியபோது கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இதனை அறிவித்துள்ளார்.
இதன்படி 20வது அரசியலமைப்பு திருத்தமாக தேர்தல் முறை திருத்தம் அமையவுள்ளது.  இந்த திருத்தம் கலப்பு தேர்தல் முறையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஏப்ரல் மாதக்கடைசியில் நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தல் ஒன்றுக்கு செல்வதற்கும் ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு தீர்மானம் எடுத்துள்ளது.
இதன்படி 20வது அரசியல் திருத்த தேர்தல் முறையிலேயே பொதுத்தேர்தல் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டை உண்மையாக நேசித்தால் ஓரமாக இருங்கள்: மகிந்தவிற்கு சந்திரிக்கா அட்வைஸ்!
[ சனிக்கிழமை, 04 ஏப்ரல் 2015, 04:52.58 PM GMT ]
நாட்டை அழிவுப் பாதையில் இருந்து மீட்கும் போது, மகிந்த ராஜபக்ஷ நாட்டை உண்மையாக நேசிக்கின்றவராயின் ஓரமாக இருக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கேட்டுக்கொண்டுள்ளார். 
கொழும்பிலுள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அந்த செவ்வியில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஸ்ரீலங்க சுதந்திரக்கட்சியை மூன்றாவது தடவையாக மகிந்த ராஜபக்ச அழிக்கவே முயற்சிக்கின்றார்.
முதலாவதாக ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசாங்கத்தில் சிறிமாவின் பிரஜாவுரிமையை பறித்து, இவ்வாறான ஒருவருக்கு கட்சியில் இருக்க முடியாது என இலங்கையில் உள்ள அனைத்து ஆதரவாளர்களையும் திரட்டி கூட்டங்களை தற்போது போன்றே நடத்தினார்கள்.
இரண்டாவது தடவையாக 2001ம் ஆண்டில் ஐக்கிய தேசிய கட்சி எஸ்.பி திஸாநாயக்க போன்றவர்களை தம் பக்கம் இழுத்து ஆட்சியை கவிழ்த்தது.
தற்போது மூன்றாவது முறை.இவர் தோல்வி அடைந்தே வீட்டுக்கு சொன்றார் ஜே.ஆர்.ஜெயவர்த்தன பிரேமதாசவிடம் கையளித்து விட்டு சென்றார். D.V.விஜயதுங்க என்னிடம் கையளித்து விட்டு சென்றார்.
நான் போட்டியிட்ட எந்தவொரு தேர்தலிலும் தோல்வி அடையவில்லை.
மூன்றாவது தடவையாக நான்காவது தடவையாக போட்டியிடுமாறு பலர் என்னிடம் கூறினார்கள். மகிந்த ராஜபக்ச செய்ததைப்போன்று அரசியலமைப்பை மாற்றியமைக்க சொன்னார்கள்.
அதனை என்னால் செய்ய முடியாது என கூறிவிட்டு நான் வீட்டிற்கு சென்றேன். நான் ஜனநாயக வாதி. இரண்டு தடவைகள் இருந்துவிட்டு மற்றுமொருவருக்கு சந்தர்ப்பம் அளிக்க வேண்டும்.
கைகளைப்பிடித்துசென்று மகிந்த ராஜபக்சவை நான் கதிரையில் அமர்த்தினேன். ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரின் ஆதரவாளர்கள் மகிந்த ராஜபக்சவின் விடயங்கள் தொடர்பில் தெளிவுடன் இருக்க வேண்டும். இவர்கள் பாரியளவில் கொள்ளை அடித்துள்ளனர் என்றார்கள்.
தனிப்பட்ட ரீதியாக அது எனக்கும் தெரியும். அதனை உறுதிப்படுத்த வேண்டிய சந்தர்ப்பம் வரும் வரையில் காத்திருக்கின்றோம். நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டிய விடயங்களை தேடிச்செல்கின்றோம்.
ராஜபக்சவிடம் ஒரு விடையத்தை நான் தெளிவாக கூற வேண்டும்.அவர் இந்த நாட்டின் நான்காவது ஜனாதிபதி. மூன்று ஜனாதிபதிகள் ஓய்வு பெற்றவிதம் அவர்கள் அவற்றுக்குப் பின்னர் செயல்பட்ட விதம் போன்றவற்றை கவனத்தில் கொண்டு அவ்வாறு செயல்பட முயற்சிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
தனது சகோதரர்கள், புதல்வர்கள், மனைவி மற்றும் அவர்களது சகோதரர்கள் அவர்களின் உறவினர்கள் என 283 பேரைக்கொண்ட எனது ஆட்சியில் ஆறு அமைச்சுக்களை நிர்வகித்தேன்.
ஆனால் 1600 பேர் அதற்கு பின்னால் காணப்பட்டனர். சம்பள தினத்திற்கு மாத்திரம் வந்து அதனை பெற்றுக்கொள்ளும் பலர் இருந்தனர். அவர்கள் பாரியளவில் கொள்ளையிட்டுள்ளனர்.
நாட்டை அழிவில் இருந்து மீட்கும் போது உண்மையாகவே நாட்டை நேசிப்பவராயின் ஓரமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஆனால் அந்த அழிவுக்கு நீங்கள் தயாரானால், அதனை எதிர்கொள்ள நாங்களும் தயார். நான் தனியாக இதனை கூறவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் என்ற வகையிலேயே இதனைக்கூறுகின்றேன். இதனை விட நான் எதனையும் கூறுவதற்கு விரும்பவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyETYSUkr2J.html

Geen opmerkingen:

Een reactie posten