[ செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015, 05:28.54 AM GMT ]
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் வெள்ளை வான்களில் ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள், சிவில் அமைப்பு செயற்பட்டாளர்கள் கடத்தி காணாமல் செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பாதுகாப்பு துறைசார் பிரதானிகள் மூவர் பற்றிய இரகசிய அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வாரத்தில் இந்த அறிக்கை பாதுகாப்புச் சபையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
ஜனாதிபதி, பிரதமர், முப்படையினர், பொலிஸ் மா அதிபர், பொலிஸ் மா அதிபர், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் இந்த பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கின்றனர்.
வெள்ளை வான் சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாதுகாப்பு பிரிவு பிரதானிகளில் மூன்று பேரில் இருவர் ஒய்வு பெற்றுக் கொண்டுள்ளனர்.
இராணுவ மேஜர் ஒருவர் தொடர்பிலும் தனியான அறிக்கையொன்று ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
நான்கு தமிழ் ஊடகவியலாளர்களை அழைத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர்
[ செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015, 05:54.08 AM GMT ]
நான்கு தமிழ் ஊடகவியலாளர்களுக்கு குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்று விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
வவுனியா மற்றும் மன்னாரைச் சேர்ந்த நான்கு ஊடகவியலாளர்களையே தெமட்டகொடவில் உள்ள குற்றப்புலனாய்வு திணைக்கள அலுவலகத்திற்கு விசாரணைக்கு வருமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த கடிதம் சிங்கள மொழியில் எழுதப்பட்டிருந்ததாகவும், விசாரணைக்கு அழைக்கப்பட்ட காரணம் தெரிவிக்கப்பட்டவில்லை எனவும் குறித்த ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.
வவுனியாவைச் சேர்ந்த சிரேஸ்ட ஊடகவியலாளர் மாணிக்கவாசகம் மற்றும் மூன்று ஊடகவியலாளர்களுக்கே இவ்வாறு கடிதம் மூலம் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிச் சென்ற ஊடகவியலாளர்கள் மீண்டும் நாட்டிற்கு வரவிரும்புவதால் அதற்கான நடவடிக்கைகளை தமது அரசாங்கம் மேற்கொள்வதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர நேற்று நாடாளுமன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyERcSUjxyH.html
Geen opmerkingen:
Een reactie posten