தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 29 april 2015

கோத்தபாயவை கைதுசெய்ய சட்டமா அதிபர் கொடுத்த ஆவணம் கசிந்ததால் பரபரப்பு !

முன்னாள் கடற்படைத் தளபதியின் பல இரகசிய ஆதாரங்கள் வெளிப்படுத்தப்படும் - ரணில் !

[ Apr 29, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 755 ]

சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவின் செயற்பாடுகள் தொடர்பாக எதிர்காலத்தில் பல ஆதாரங்கள் வெளிப்படுத்தப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.நாடாளுமன்றத்தில் இன்று 19வது திருத்தம் மீதான இரண்டாவது நாள் விவாதத்தில், உரையாற்றிய அவர், ஜப்பானுக்கான தூதுவராகப் பணியாற்றிய அட்மிரல் கரன்னகொட, பொய் கூறுவதாக குற்றம்சாட்டினார்.
முன்னதாக, இந்த விவாதத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து, அங்கு அனுப்பி வைக்கப்பட்ட படையினரே சிறிலங்கா படையினர் வெளிநாடு ஒன்றில் மேற்கொண்ட முதலாவது அனர்த்த மீட்புப் பணி என்று கூறி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையை தவறாக வழிநடத்தப் பார்க்கிறார் என்று குற்றம்சாட்டியிருந்தார்.அட்மிரல் கரன்னகொட ஜப்பானுக்கான தூதுவராக இருந்த போது, அங்கு ஏற்பட்ட சுனாமியை அடுத்து ஜப்பானுக்கு சிறிலங்கா படையினரை மீட்புப் பணிகளுக்காக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்திருந்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதற்குப் பதிலளித்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அந்தக் குழு ஜப்பானுக்கு பயணிகள் விமானத்திலேயே அனுப்பி வைக்கப்பட்டதே தவிர. இராணுவ விமானத்தில் அல்ல. நேபாளத்துக்கு இராணுவ விமானத்திலேயே இராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.ஜப்பானுக்கு ஒரு குழுவை அனுப்பி வைத்தது குறித்து ஏன் கரன்னகொட உரிமை கோருகிறார் என்று தெரியவில்லை.அவர் ஒன்றும் செய்யவில்லை. கரன்னகொட கூறிய பல பொய்களுக்கான சான்றுகள் உள்ளன. எல்லாமே விரைவில் வெளிவரும்” என்று பதிலளித்துள்ளார்.



கோத்தபாயவை கைதுசெய்ய சட்டமா அதிபர் கொடுத்த ஆவணம் கசிந்ததால் பரபரப்பு !

[ Apr 29, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 1950 ]
கோத்தபாய ராஜபக்ஷவை கைதுசெய்யலாம் என்றும் , அவர் சட்டவிரோதமாக ஆயுதங்களை இலங்கைக்குள் கொண்டுவந்தார் என்றும் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். முறையான லைசன் இல்லாமல் , கோட்டபாய ராஜபக்ஷ இலங்கைக்குள் ஆயுதங்களை கொண்டுவந்து விற்றமை பெரும் குற்றச்செயலாகும். இதுதொடர்பான அறிக்கையை சட்டமா அதிபர் சமர்பித்துள்ளார். சி.ஆர்1/58/2015 என்ற இந்த ஆவணம் தற்போது சிங்கள இணையம் ஒன்றில் கசிந்துள்ளது. குறித்த ஆவணத்தை சட்டமா அதிபர் மார்ச் மாதம் 9ம் திகதி ரகசியமாக ரணிலுக்கு அனுப்பிவைத்துள்ளார். இதன் மூலம் கோட்டபாயவை கைதுசெய்து விசாரிக்கலாம் என்று அவர் அவர் பரிந்துரை செய்துள்ளார்.
ஆனால் ரணில் விக்கிரமசிங்க அதனைச் செய்யவில்லை என்று சிங்கள இணையம் ஒன்று பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டியுள்ளது. ரணில் கோட்டபாயவை இன்றுவரை காப்பாற்றிக்கொண்டு இருக்கிறார். வெறும் கண் துடைப்புக்காகவே பசிலைக் கைதுசெய்தார்கள் என்றும். பின்னர் அவரை வைத்தியசாலையில் சேர்த்து சகல மரியாதையுடன் அவரைப் பேணி பாதுகாக்கிறார்கள் என்றும் கொழும்பில் இருந்து கிடைக்கப்பெற்ய்ம் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள ஆவணத்தின் பிரதிகள் இங்கே இணைக்கபப்ட்டுள்ளது.
http://www.athirvu.com/newsdetail/3063.html

Geen opmerkingen:

Een reactie posten