தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 25 april 2015

8 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இலங்கை பெண்: அகதி முகாமில் கண்டுபிடிப்பு

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இலங்கையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வேலூர் அகதி முகாமில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை முல்லைத்தீவை சேர்ந்த ஒருவர் தனது மகளை காணவில்லை என்று செஞ்சிலுவை சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து அவரது மகளை தேடும் பணியில் சங்கத்தினர் ஈடுபட்டு வேலூர் மாவட்டம் வாலாஜா, அணைக்கட்டு அகதிகள் முகாமை செஞ்சிலுவை சங்கத்தினர் பார்வையிட்டுள்ளனர்.
மேலும், காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் காணாமல் போன இளம் பெண்ணை பற்றி விசாரித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது அந்த பெண் அணைக்கட்டு அகதி முகாமில் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
பின்னர் வேலூர் சங்க செயலர் இந்தர்நாத் அந்த பெண்ணிடம் அவரது தந்தை எழுதிய கடிதத்தை வழங்கியுள்ளார்.
இதைதொடர்ந்து அந்த பெண்ணை 8 ஆண்டுகளுக்கு பிறகு அவரது குடும்பத்தினருடன் சேர்த்து வைத்துள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten