பெரும்பான்மை இனங்கள் தங்களது அரசியல் பலத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மற்றையவர்கள் எதிரிகள் என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள்.
மற்றையவர்களை எதிரிகளாக சித்தரித்து பெரும்பான்மை பலத்தை தாங்கள் வைத்துக் கொள்கிற யுக்தியை கையாள்கிறதை பல நாடுகளிலும் காணக் கூடியதாக உள்ளது. இலங்கையிலும் இதுவே நடந்தது.
இலங்கையில் சுதந்திரமடைந்த காலத்திலிருந்து வடக்கு கிழக்கு மக்கள் அனைத்திலும் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளார்கள். இதனாலும் வன்முறை கட்டவிழ்க்கப்பட்டது.
உண்மையான ஐக்கியம் ஏற்பட வேண்டுமாக இருந்தால் வேற்றுமையை ஏற்றுக்கொண்டு, வேற்றுமையின் சிறப்பை வெளிப்படுத்தும் ஒரு அபிப்பிராயத்தின் மூலமாகவே ஏற்படுத்த முடியுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
நேற்று பம்பலப்பிட்டியில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் நினைவுப் பேருரையில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்புடைய செய்தி-யுத்தத்தை வென்ற போதிலும் சமாதானத்தை வெற்றி கொள்ளவில்லை! செல்வாவின் நினைவுப் பேருரையில் சந்திரிகா
http://www.tamilwin.com/show-RUmtyERbSUjw2I.html
Geen opmerkingen:
Een reactie posten