தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 22 april 2015

பகிரங்கத்திற்கு வந்தது மகிந்த- பசில் மோதல்: ஏட்டிக்குப்போட்டியாக இருவரும் பேச்சு !

லண்டன் சி.ஐ.டி பொலிசார் தேடும் தமிழர் பெடியன் இவர் தான்: ஆபத்தானவர் என்று தகவல் !

[ Apr 22, 2015 02:31:16 PM | வாசித்தோர் : 16930 ]

லண்டனில் உள்ள மெற்றோ பொலிடன் பொலிசார் , அரவிந்தன் ரவீந்தர் என்னும் தமிழ் இளைஞர் ஒருவரை வலைவீசி தேடிவருவதாக அதிர்வு இணையம் அறிகிறது. பிரித்தானிய மெற்றோ பொலிடன் பொலிசின் , சி.ஐ.டி பிரிவினர் இதுகுறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்கள். கொள்ளைச் சம்பவத்தோடு தொடர்புடைய இவரை பொலிசார் கைதுசெய்ய முற்பட்டவேளை இவர் தப்பிவிட்டார். மேற்படி இவர் தலைமறைவாகியும் உள்ளார். 5 அடி 3 அங்குலம் உயரம் உள்ள இவர் கைகளில் ஒரு வெட்டிக் காயம் இருக்கிறது என்றும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
பல தமிழர்களின் வீட்டில் கொள்ளையடித்த சந்தேக நபர் இவர் என்று , மேட்டன் பகுதி மக்கள் தெரிவித்துள்ளார்கள். மிச்சம் , ரூட்டிங் மற்றும் மேட்டன் பகுதிகளில் இவரை தேடி பொலிசார் வலைவிரித்துள்ளார்கள். இவர் தொடர்பான விபரங்கள் தெரிந்தால் , பொலிசாரை உடனே இந்த இலக்கத்தில் 0800 555 111 தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்படி இனியும் தமிழர்கள் வீட்டில் திருட்டுகள் நடக்காமல் இருக்க இவர் கைதுசெய்யப்படவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
தகவல் தருபவர்களின் ,தனிப்பட்ட உரிமை பாதுகாக்கப்படும் என்றும் பொலிசார் வாக்குறுதி அளித்துள்ளார்கள்.


பகிரங்கத்திற்கு வந்தது மகிந்த- பசில் மோதல்: ஏட்டிக்குப்போட்டியாக இருவரும் பேச்சு !

[ Apr 22, 2015 01:46:27 PM | வாசித்தோர் : 11720 ]

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும், அவரது சகோதரர் பசில் ராஜபக்சவிற்குமிடையில் முறுகல் ஏற்பட்டுள்ளதாக ஊகிக்க முடிகிறது. தேர்தல் தோல்வியின் பின்னர் இருவருக்குமிடையில் சுமுகமான உறவில்லையென செய்திகள் வெளியான போதும், அதனை சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை. இந்தநிலையில் பசில் நேற்று நாடு திரும்பியதன் பின்னர் மகிந்தவும் பசிலும் வெளியிட்ட கருத்துக்கள் அவர்களிற்கிடையிலான முறுகலை வெளிச்சமிட்டுள்ளது.
மகிந்தவின் தேர்தல் வெற்றிகளிற்கு நானே காரணம். சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளராக இருந்து நான் ஆற்றிய விடயங்களே வெற்றியை தேடித்தந்தது. இவ்வாறு கூறியுள்ளார் பசில் ராஜபக்ச. நேற்று நாடு திரும்பிய பின்னர், விமானநிலையத்திற்கு வெளியில் ஊடகவியலாளர்களிடம் பேசும்போதே இதனை தெரிவித்தார். அதேவேளை, நேற்று பிறிதொரு இடத்தில் கருத்து தெரிவித்த மகிந்த, பசில் நாடு திரும்பியது பற்றி தனக்கு தெரியாதென்றும், அவரது அரசியல் பயணம் வேறு, என்னுடைய அரசியல் பயணம் வேறு என வேறுபடுத்தி பேசியுள்ளார்.
விமானநிலையத்தில் பேசிய பசில்- “ராஜ­பக்ச குடும்­பத்­த­வர்கள் எப்­போதும் மக்­களின் நல­னுக்­காகவே போராடி வந்­துள்­ளனர். 1931 ஆம் ஆண்டு காலப்­ப­குதி முதல் எமது குடும்­பத்­தினர் அர­சியல் செய்து வரு­கின்­றனர். இத­னூ­டாக மக்­களின் நம்­பிக்­கையை வென்­றுள்­ளனர். எனினும் எந்த சந்­தர்ப்­பத்­திலும் ராஜ­பக்ச குடும்­பத்­தினர் மக்­க­ளு­டைய பணத்தை கொள்­ளை­யிட்­ட­தில்லை. அவ்­வாறு கொள்­ளை­யிடப்போவ­து­மில்லை.
எனக்கு எதி­ராக சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் விசா­ரணை செய்­வ­தற்கு என்னால் முடி­யு­மான அனைத்து ஆத­ர­வி­னையும் வழங்க தயா­ராக உள்ளேன். நான் எந்­த­வொரு குற்­றத்­தையும் செய்­ய­வில்லை. இதனை என்னால் உறு­திப்­ப­டுத்த முடியும். ஆகவே பொலி­ஸாரின் விசா­ர­ணைக்கு முன்­னு­ரிமை அளிக்கும் வகை­யி­லேயே நான் நாடு திரும்­பினேன்.
இதே­வேளை நடந்து முடிந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் போது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தேசிய அமைப்­பாளர் என்ற வகையில் முன்னாள் ஜனா­தி­ப­தியும் எனது சகோ­த­ர­ரு­மான மஹிந்த ராஜ­ப­க்சவின் தோல்­விக்கு முழு­மை­யான பொறுப்பை நானே ஏற்­றுக்­கொள்­கிறேன். எனினும் தோல்­விக்கு நானே பிர­தான கார­ண­மாக அமைந்­ததை போன்று அவரின் முன்னைய வெற்றிகளுக்கும் நானே பொறுப்பாவேன். ஆகவே அர­சியல் ரீதி­யாக பிழை­யான தீர்­மா­னங்கள் எடுத்­தி­ருப்­பினும் நான் ஒரு­போதும் ஊழல் மோச­டி­களில் ஈடு­ப­ட­வில்லை என்பதனை என்னால் உறுதியாக கூறமுடியும் என்றார். இதேவேளை, நார­ஹேன்­பிட்டி அப­ய­ராம விகா­ரை­க்கு நேற்று வருகை தந்த மஹிந்தவிடம் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக்ச வருகை தந்­தமை தொடர்பில் ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் எழுப்­பிய கேள்­விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.
“முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக்ச நாட்­டிற்கு வந்துவிட்டாரா? அவர் வருகை தந்தது எனக்கு தெரியாது. அவரது அரசியல் பயணம் வேறு என்னுடைய அரசியல் பயணம் வேறு. என்னுடைய அரசியலை நானே முன்னெடுத்தேன். அவர் கம்பஹாவில் வைத்து அரசியல் செய்தவர்” என்று தன்னுடைய சகோதரரை வேறுபடுத்தி காட்டும் வகையில் கருத்து தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten