[ புதன்கிழமை, 29 ஏப்ரல் 2015, 09:42.07 AM GMT ]
சாய்ந்தமருது அனைத்து பொது அமைப்புகள் சம்மேளனம் எனும் பெயரில் நான்கு வகையான சுவரொட்டிகள் அப்பிரதேசத்தின் அனைத்து வீதிகள் மற்றும் பொது இடங்களில் ஒட்டப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.
தனி உள்ளூராட்சி மன்றம் பாராளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு முன் இல்லையேல் தேர்தலை பகிஷ்கரிப்போம்! அரசே தனி உள்ளூராட்சி சபையை உடன் வழங்கு!
இனியும் பொறுமை காக்க தயாரில்லை! பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் தனி உள்ளூராட்சி மன்றம் பெற்றுத் தருவோருக்கு 18000 வாக்குகள் சன்மானம்!
இனியும் பொறுமை காக்க தயாரில்லை! பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் தனி உள்ளூராட்சி மன்றம் பெற்றுத் தருவோருக்கு 18000 வாக்குகள் சன்மானம்!
தலைமையை உறுதிப்படுத்திய மண்ணுக்கு வழங்கும் சன்மானம் என்ன? தன்மானமுள்ள சாய்ந்தமருது மக்களே ஒன்றுபடுவோம்! உள்ளூராட்சியை வென்றெடுப்போம்! போன்ற வாசகங்கள் அந்த சுவரொட்டிகளில் பொறிக்கப்பட்டுள்ளன.
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை ஏற்படுத்தப்படும் எனவும் அதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் எனவும் பொது நிர்வாக, உள்ளூராட்சி அமைச்சர் கரு ஜெயசூரிய கடந்த வாரம் உறுதியளித்திருக்கின்ற நிலையிலேயே இச்சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன.
இது குறித்து சாய்ந்தமருது அனைத்து பொது அமைப்புகள் சம்மேளன முக்கியஸ்தர் ஒருவருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, இவ்வுத்தரவாதத்தை கூடிய விரைவில் நிறைவேற்றும் வகையில் அழுத்தம் கொடுக்கும் நோக்கிலேயே சம்மேளனம் இந்நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyERdSUioyG.html
இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது: பிரதி வெளிவிவகார அமைச்சர்
[ புதன்கிழமை, 29 ஏப்ரல் 2015, 09:53.20 AM GMT ]
அத்துடன் நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதியின் அதிகாரங்களை வரையறுக்கும் சில வாசகங்களும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன எனவும் பிரதியமைச்சர் கூறியுள்ளார்.
புதிய அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் ஊடாக 18வது திருத்தச் சட்டம் முற்றாக இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு இருந்த சிறப்புரிமைகள் இல்லாமல் போகும்.
ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய சந்தர்ப்பம் கிடைக்கும். அத்துடன் 17வது திருத்தச் சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படுவதுடன் சுயாதீன ஆணைக்குழுக்கள் மீண்டும் ஸ்தாபிக்கப்படும்.
அத்துடன் அரசியலமைப்புச் சபையில் 19வது திருத்தச் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக பிரதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
20இன் வெற்றியே 19இன் முழுமை: சம்பிக்க ரணவக்க
[ புதன்கிழமை, 29 ஏப்ரல் 2015, 10:01.36 AM GMT ]
இன்று காலை இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
19ஆம் திருத்தச்சட்டம் சமர்ப்பித்தவுடனே அது நிறைவடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த திருத்தச்சட்டத்திற்காக முன்னணியில் மற்றும் தலைமை தாங்கியது ஜாதிக ஹெல உருமய எனவும், தன் கட்சி முன்வைத்த யோசனைகள் இன்று நிறைவேறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
19ஆம் திருத்தச்சட்டம் தொடர்பான கதையினை மீண்டும்,மீண்டும் பேசாமல், அதனை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் அனைவரும் நாட்டின் வளர்ச்சிக்காக வேலை செய்ய நேரம் ஒதுக்க வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyERdSUioyI.html
த.தே.கூ, சோபித, மற்றும் சர்வதேசத்தின் சதியே 19 – பொதுபல சேனா
[ புதன்கிழமை, 29 ஏப்ரல் 2015, 10:12.29 AM GMT ]
19ம், 20ம் திருத்தச் சட்டங்கள் அவசர அவசரமாக கொண்டு வரப்படுவதாக பொதுபல சேனா அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உரிய முறையில் ஆராயாது இவ்வாறு திருத்தச் சட்டங்கள் கொண்டு வரப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.
19ம் திருத்தச் சட்டத்தின் உள்ளடக்கம் பற்றி அறிவுடையவர்கள் நாட்டின் மொத்த சனத்தொகையில் 5 வீதமானவர்களே என சுட்டிக்காட்டியுள்ளது.
19ம் திருத்தச் சட்டத்தின் அரசியல் சாசன பேரவை மிகவும் வலுவானது எனவும், நீதிமன்றில் வழக்குத் தொடர முடியாது எனவும் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிறைவேற்று அதிகாரம் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியம் என குறிப்பிட்டுள்ளது.
எந்த ஜனாதிபதிகளும் செய்யாத தியாகத்தை மைத்திரிபால செய்துள்ளார்!– எதிர்க்கட்சித் தலைவர் புகழாரம்
[ புதன்கிழமை, 29 ஏப்ரல் 2015, 10:20.04 AM GMT ]
எந்த ஜனாதிபதிகளும் மாற்றம் செய்யாத நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களில், 19வது திருத்தச் சட்டம் மூலமாக மாற்றம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிக சிறப்பான நபர் என்பதை செயலில் ஒப்புவித்துள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
புதிய தேர்தல் முறையை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சி போதிய அவதானத்தை செலுத்தாதது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இருக்கும் பாரிய பிரச்சினையாகும்.
எந்த ஜனாதிபதிகளும் மாற்றம் செய்யாத நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களில், 19வது திருத்தச் சட்டம் மூலமாக மாற்றம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிக சிறப்பான நபர் என்பதை செயலில் ஒப்புவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால மக்களின் மனதில் என்றும் அழியாத அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளார்.
நிறைவேற்று அதிகாரத்தை குறைக்காது அதன் அதிகாரங்களை முன்னாள் ஜனாதிபதிகள் மேலும் அதிகரித்து கொண்டனர்.
எனினும் நிறைவேற்று அதிகாரங்களை குறைத்து கொண்டதன் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாரிய அர்ப்பணிப்பையும் சேவையையும் தியாகத்தையும் செய்துள்ளார் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyERdSUiozB.html
Geen opmerkingen:
Een reactie posten