தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 26 april 2015

சொந்த மண்ணில் குடியேற வேண்டும்! தீபம் ஏற்றி வழிபட்ட சம்பூர் மக்கள்

19வது திருத்தம் நிறைவேறும் வரை சோபித தேரர் சத்தியாக்கிரகப் போராட்டம்
[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2015, 04:08.16 PM GMT ]
நீதிக்கான சமூக அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரர், நாளை முற்பகல் 10 மணிமுதல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளார்.
19வது அரசியலமைப்பு சீர்திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் வரை இந்த சத்தியாக்கிரகத்தை அவர் மேற்கொள்ளவுள்ளதாக பிரஜைகள் சக்தியின் அழைப்பாளர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
ஆரம்பம் முதலே ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படுவதற்கான 19வது திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் சோபித தேரர் போராட்டங்களை நடத்தி வந்தார்.
இதன்அடிப்படையிலேயே மைத்திரி- ரணில், பாட்டலி, அனுர திஸாநாயக்க கூட்டமைப்பை அவர் உருவாக்கினார்.
இந்தநிலையில் தற்போது 19வது திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளமையை அடுத்தே தேரர் சத்தியாக்கிரக போராட்ட முடிவை அறிவித்துள்ளார்.
இதேவேளை 19வது திருத்தம் விவாதம் நாளை நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பில் குறைபாடு சம்பவம்!- விசாரணை ஆரம்பம்
[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2015, 04:40.04 PM GMT ]
1999ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலை அடுத்து நேற்று மிகமுக்கியஸ்தர் பாதுகாப்பில் பாரிய பின்னடைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கையின் பாதுகாப்பு தரப்பினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அங்குனகொலபெலஸ்ஸ என்ற இடத்தில் நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற சென்றிருந்த வேளையில் பாதுகாப்பு படைவீரர் ஒருவர் சாதாரண உடையில் துப்பாக்கியுடன் நடமாடியதை கண்டுபிடித்தனர்.
குறித்த பாதுகாப்பு வீரர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் பாதுகாவலர் என்று கண்டறியப்பட்டது.
உடல்சோதனையின்றி குறித்த படைவீரர், ஜனாதிபதி இருந்து வளாகத்துக்கு சென்றமை எவ்வாறு என்று பொலிஸார் வியப்பை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை தற்போதைய ஜனாதிபதியின் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள இரண்டு பொலிஸ் அதிகாரிகள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு பாதுகாப்பு வழங்கியவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் இடம்பெற்ற கட்சி ஆதரவாளர் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதிக்கு நேராக சூரிய ஒளிப்பாய்ச்சல் இருந்தமையால் அவர், உரையாற்றுவதற்கு பாரிய அசௌகரியத்தை எதிர்நோக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



சொந்த மண்ணில் குடியேற வேண்டும்! தீபம் ஏற்றி வழிபட்ட சம்பூர் மக்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2015, 04:21.45 PM GMT ]
தாங்கள் விரைவாக சொந்த இடங்களில் மீள்குடியேற வேண்டும் என்று தீபங்களை ஏற்றி விசேட வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்கள் சம்பூர் பிரதேச மக்கள்.
சம்பூர் பிரதேசத்தில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு இன்றுடன் 9வது ஆண்டை நிறைவு செய்கின்றார்கள். இந்நிலையிலேயே தாம் சொந்த நிலத்தில் குடியேற வேண்டும் என் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.
2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ம் திகதி அவ்வேளை இராணுவ தளபதியாகவிருந்த ஜெனரல் சரத் பொன்சேகா கொழும்பில் விடுதலைப்புலிகளின் தற்கொலை தாக்குதலுக்குள்ளானார்.
இந்த தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக அன்றிரவு கிழக்கு மகாணத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுபாட்டிலிருந்த சம்பூர் பிரதேசத்தில் விமான தாக்குதல்கள் இடம் பெற்றிருந்தன.
இதனையடுத்து மறுநாள் சம்பூர் பிரதேச மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
நாட்டில் தற்போது யுத்தம் முடிவடைந்து 6 வருடங்களாகி விட்ட போதிலும் சம்பூர் பிரதேச மக்களின் மீள்குடியேற்றம் தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளது.
அந்த பிரதேச மக்களின் குடியிருப்பு காணிகளும், வயல் நிலங்களும் அரச முதலீட்டு ஊக்குவிப்பு வலயம், கடற்படை உயர் பாதுகாப்பு பிரதேசம் மற்றும் இந்திய அனல் மின் உற்பத்தி நிலையம் என கடந்த அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் அடையாளமிடப்பட்டு விஷேட வர்த்தமானி பிரகடனம் மூலம் சுவீகரிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சொந்த நிலத்தில் மீள்குடியேற்றம் தடைப்பட்டுள்ள நிலையில் அந்த பிரதேச மக்கள் தொடர்ந்தும் தற்காலிக இடைத்தங்கல் மையங்களில் தங்கியுள்ளார்கள்.
புதிய அரசாங்கம் பதவியேற்ற நிலையில் குறித்த காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு மீள்குடியேற்றம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது.
முதல் தொகுதியில் முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கு என அடையாளமிடப்பட்ட 818 ஏக்கர் விடுவிக்கப்பட்டு அந்த பகுதியில் இந்த மாதம் நிறைவடைய முன்பு மீள்குடியேற்றம் நடைபெறும் என மீள்குடியெற்ற அமைச்சினால் உறுதிமொழியும் உத்தரவாதமும் அளிக்கப்பட்டு ஒரு மாதமாகிவிட்ட போதிலும் இதுவரை மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயெ அவர்கள் தற்பொழுது தற்காலிகமாக தங்கியுள்ள கிளிவெட்டி , கட்டப்பறிச்சான் உட்பட இடைத்தங்கல் முகாம்களுக்கு முன்பாக தீபங்களை ஏற்றி வழிபட்டனர். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் குமாரசாமி நாகேஸ்வரனும் கலந்து கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmtyERaSUjwzB.html

Geen opmerkingen:

Een reactie posten