[ வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2015, 08:20.47 AM GMT ]
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே விக்ரமபாகு கருணாரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேர்தல் முறைமையை மாற்றியமைக்க வேண்டியது அவசியமாக இருந்த போதிலும் விகிதாசார முறைமையை மாற்றியமைக்க யாருக்குமே உரிமையில்லை.
விகிதாசார தேர்தல் முறைமை ஜே.ஆர்.ஜயவர்தனவால் மக்களுக்கு வழங்கப்பட்ட வரப்பிரசாதம், இதை யாரும் மாற்றியமைக்க நினைத்தால் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தமது கட்சியின் தலைவர் ஒருவரால் பெற்றுக்கொடுக்கப்பட்ட தேர்தல் முறையை மாற்ற ஐக்கிய தேசிய கட்சி உடன்படும் பட்சத்தில் அது கட்சிக்கும் கட்சித் தலைவருக்கும் இழைக்கும் துரோகம் எனவும், அதனை துரோகி கட்சியாகத்தான் நாம் நோக்குவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற தேசிய நிறைவேற்று சபைக் கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்றென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் குறிப்பிட்டிருந்தார்.
மூளைக் கோளாறு உள்ளவர்கள்தான் இரண்டு கட்சிகளும் ஒன்றென இவ்வாறு தெரிவிப்பார்கள்.
கடந்த 2005ம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு தெரிவித்து அவருக்காக தேர்தல் பிரச்சார பணிகளில் அநுரகுமார திசாநாயக்க முழுமூச்சுடன் செயற்பட்டார்.
மஹிந்த ராஜபக்ச அன்று எந்த பாதையை தேர்ந்தெடுத்தார் என்பது அநுரகுமாரவிற்கு தெரியாமல் போய்விட்டதா?அன்று மஹிந்தவிற்கு ஆதரவு தெரிவித்துவிட்டு இன்று இரு கட்சிகளும் ஒன்றென தெரிவிக்கின்றார்.
தேசிய நிறைவேற்று சபையை உருவாக்குவதற்கு யோசனை முன்வைத்ததும் அவரே தான். ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்திருந்தால் மஹிந்த தமது குடும்பத்தை வேரோடு அழித்திருப்பார் என ஜனாதிபதி மைத்திரி தெரிவித்திருந்தார்.
தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருந்த சமயம் தான் நண்பரின் வீட்டில் மறைந்திருந்ததாக அவர் உலகத்திற்கே அறிவித்திருந்தார்.
அவ்வாறானதொரு கொடுங்கோல் ஆட்சியே கடந்த 10 வருடங்களாக இந்த நாட்டில் நடைபெற்றது.
மற்றையது வெள்ளை வானில் மக்களை கடத்திச் சென்றார்கள், அவன்காட் ஆயுத களஞ்சியசாலையை கடலில் மட்டுமன்றி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திலும் வைத்திருந்தனர்.
சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான நவீன ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன, இவற்றை வைத்து கடந்த ஆட்சி காலத்தில் என்னவெல்லாம் செய்தார்கள் என்று யாருக்கு தெரியும். இவ்வாறான ஒரு ஆட்சியை வேறு எந்த ஆட்சியுடனும் ஒப்பிட முடியாது.
அநுரகுமார ஆரம்பம் எது முடிவு எது என்று அறிந்துகொள்ளாமல் இரு கட்சிகளும் ஒன்றென கூறி வருவது முட்டாள்தனமானது எனவும் தெரிவித்துள்ள கருணாரத்ன,
எதிர்வரும் 19ம் திகதி தேர்தல் முறை குறித்து கலந்துரையாடி முக்கிய தீர்மானங்கள் எட்டப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எட் மிலிபாண்டுக்கு லண்டனில் சிங்கள அமைப்புகள் கண்டனம்
[ வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2015, 09:47.21 AM GMT ]
அவரது வாழ்த்துச் செய்தியில் தமிழர்களுக்கு மாத்திரமே புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்திருந்தார்.
பிரித்தானியாவில் உள்ள தமிழ்ச் சமுகத்துக்கு தொழில் கட்சி எப்போதும் பக்கபலமாக இருக்கும் என்றும், யுத்தக் குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணைக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த வாழ்த்து குறிப்பில் சிங்கள மக்கள் புறக்கணிக்கப்பட்டமைக்கு லண்டனை தளமாக கொண்டு இயங்கும் சிங்கள அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
அடுத்த மாதம் பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyESaSUjo3H.html
Geen opmerkingen:
Een reactie posten