தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 16 april 2015

நவ்ரூ தீவில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர்களை கம்போடியாவிற்கு மாற்ற தீர்மானம்

இலங்கை அகதிகளின் வருகையை தடுக்குமாறு அவுஸ்திரேலியா கோரிக்கை
[ வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2015, 06:30.57 AM GMT ]
சட்டவிரோதமான முறையில் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா வரும் அகதிகளை தடுத்து நிறுத்துமாறு அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
இந்தியாவின் தமிழ்நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்த அவர், ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்டார்.
இதன் போது, தான் இந்தியாவிலுள்ள இலங்கை மக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்ததாகவும் அவர்களிடம் இந்த வேண்டுகோளை விடுத்ததாகவும் ஜூலி பிஷப் குறிப்பிட்டார்.

நவ்ரூ தீவில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர்களை கம்போடியாவிற்கு மாற்ற தீர்மானம்
[ வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2015, 07:30.43 AM GMT ]
அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் சென்ற புகலிடக்கோரிக்கையாளர்களில், நவ்ரூ தீவில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் உள்ளிட்டோரை கம்போடியாவிற்கு மாற்றுவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இவர்களில் முதலில் தன்னார்வ அடிப்படையில் கம்போடியா செல்ல விரும்புவோரை அவுஸ்திரேலிய அரசு விமானம் மூலம் அனுப்பவுள்ளது.
கடந்த செப்ரெம்பர் மாதம் அவுஸ்திரேலிய அரசுக்கும் கம்போடிய அரசுக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கையை அடுத்தே இந்த நடைமுறையை அவுஸ்திரேலிய அரசு மேற்கொண்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்கான நிதியை  அவுஸ்திரேலிய அரசாங்கம் செலவிடவுள்ளது.
அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் புலம்பெயர்ந்து சென்றனர். இவர்களை அவுஸ்திரேலிய அரசு நவ்ரூ தீவில் தங்க வைத்துள்ளது. இந் நிலையில் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியவர்களே இவ்வாறு கம்போடியாவில் குடியமர்த்தப்படவுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyESaSUjo2H.html

Geen opmerkingen:

Een reactie posten