[ புதன்கிழமை, 15 ஏப்ரல் 2015, 09:21.55 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் முதுகுக்கு பின்னால் பதவி பெற்றுக்கொள்ளவில்லை கட்சியை வலுவடைய செய்யும் நோக்கிலேயே பதவியை பெற்றுக்கொண்டேன் என மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் பதவி பெற்றுக்கொண்டாலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு எந்நேரமும் ஆதரவு வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் மஹிந்தவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறேன் என மஹிந்த யாப்பா மேலும் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய அகதி முகாமில் ஈழத் தமிழர் பலி
[ புதன்கிழமை, 15 ஏப்ரல் 2015, 10:31.43 AM GMT ]
50 வயதுடைய இராமைய்யா மகேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவர் கடந்த 2013ம் ஆண்டு மே மாதம் படகு பயணத்தின் மூலம் புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்தார்.
இதனையடுத்து அவர் தொடர்ந்து கொக்கோஸ் தீவில் தங்க வைக்கப்பட்டதன் பின்னர் கிறிஸ்மஸ் தீவிற்கு மாற்றப்பட்டு கர்ட்டின் தீவில் தங்க வைக்கப்பட்டார்.
இந்நிலையில் மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக அவர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்துள்ளார்.
எனினும் அவுஸ்திரேலியாவிற்கு சென்றது முதல் இராமைய்யாவுக்கு சரியான முறையிலேயே வைத்திய சேவைகள் வழங்கப்பட்டு வந்துள்ளதாக சடலத்தை பரிசோதனை செய்த அதிகாரி ரொஸ் பொக்லியானி தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyESZSUkx7J.html
Geen opmerkingen:
Een reactie posten