மட்டு.சிறைச்சாலையில் சிறைக்கைதிகளின் சித்திரை புத்தாண்டு விழா- கைதிகளை பார்வையிடுவதற்கு விசேட அனுமதி
[ திங்கட்கிழமை, 13 ஏப்ரல் 2015, 07:33.26 AM GMT ]
மட்டக்களப்பு சிறைச்சாலையில், சிறைச்சாலை நலன்புரி சங்கம் ஏற்பாடு செய்த சிறைக்கைதிகளுக்கான சித்திரை புத்தாண்டு விழா இன்று முதல் நாள் நிகழ்வாக சிறைச்சாலை வளாகத்தில் சங்கத்தின் தலைவர் என்.பீ.ரஞ்சன் தலைமையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர் இராஜன் சத்தியமூர்த்தி சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.ஏ.பிரியங்கர உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆண் பெண் சிறைக்கைதிகளின் பல்வேறு வகையான விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.
தமிழ் - சிங்கள புது வருடத்தை முன்னிட்டு சிறை கைதிகளை பார்வையிட கைதிகளின் உறவினர்களுக்கு இரண்டு நாட்கள் விசேட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்றும் நாளையும் கைதிகளை பார்வையிட அவர்களது உறவினர்களுக்கு நாள் முழுவதும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உறவினர்கள் கொண்டு வரும் உணவுகளையும் உட்கொள்ள கைதிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளது.
ஆஸி சென்ற ஈழ அகதிகள் குறித்த தகவல்களை சேகரிக்கின்றனர் புதுச்சேரி பொலிஸார்
[ திங்கட்கிழமை, 13 ஏப்ரல் 2015, 07:22.44 AM GMT ]
இது தொடர்பில் அவுஸ்திரேலிய அதிகாரிகளுக்கு இந்திய வெளிவிவகார அமைச்சின்ஊடாக கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடம் ஜுன் மாதமளவில் 150 ஈழத் தமிழ் அகதிகள் அவுஸ்திரேலியாவிற்குத் தஞ்சம் கோரிச் சென்ற நிலையில் தற்போது அவர்கள் நவுறு தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் வழங்கிய வாக்குமூலங்களை தந்துதவுமாறு அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
குறித்த அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பியமைக்காக, படகு உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏனையோரையும் கைது செய்யும் நோக்கில் இந்த தகவல்களை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyESXSUkw7A.html
Geen opmerkingen:
Een reactie posten