தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 13 april 2015

19வது திருத்தத்திற்கு 175 பேர் ஆதரவு! மறுப்போருக்கு தேர்தலில் பதிலடி கிடைக்கும்!- அரசாங்கம்

19ம் திருத்தச் சட்டம் 20ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட மாட்டாது! தேர்தல் சட்டம் 22ல் சமர்ப்பிப்பு!
[ திங்கட்கிழமை, 13 ஏப்ரல் 2015, 12:33.16 AM GMT ]
19ம் திருத்தச் சட்டம் எதிர்வரும் 20ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படக் கூடிய சாத்தியம் குறைவாகக் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
19ம் திருத்தச் சட்டம் எதிர்வரும் 20ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு 21ம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்படவிருந்தது.
கட்சித் தலைவர்களினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்ததுடன், இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பகிரங்கமாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் முறைமை மாற்றம் குறித்த 20ம் திருத்தச் சட்டமும் 19ம் திருத்தச் சட்டத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
இதனால் 19ம் திருத்தச் சட்டம் சமர்ப்பிக்கப்படும் நடவடிக்கை ஒரு சில நாட்களுக்கு காலம் தாழ்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
19ம் திருத்தச் சட்டத்துடனேயே 20ம் திருத்தச் சட்டத்தையும் அமுல்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக் கொண்டுள்ளதாக ஆளும் கட்சியின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைக்க நிமால் சிறிபால டி சில்வா, ஜீ.எல்.பீரிஸ், டிலான் பெரேரா மற்றும் மஹிந்த சமரசிங்க ஆகியோரைக் கொண்ட குழுவொன்றை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நியமித்துள்ளது.
இந்தக் குழுவின் பரிந்துரைகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அமைச்சரவையில் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றால் 19ம் திருத்தச் சட்டம் சமர்பிக்கப்படும் அதே தினத்தில் 20ம் திருத்தச் சட்டமும் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதேவேளை,  தேர்தல் முறைமை மாற்றத்தின் அடிப்படையில் தொகுதிகளை நிர்ணயம் செய்ய குறைந்தபட்சம் இரண்டு மாத கால அவகாசம் தேவை என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
எனவே நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தல் நடத்தும் நடவடிக்கைகள் இன்னும் சில மாதங்களுக்கு பின்தள்ளப்படலாம் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் முறைமை மாற்றம் குறித்த யோசனை 22ம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது
தேர்தல் முறைமை மாற்றம் குறித்த உத்தேச சட்ட மூலம் எதிர்வரும் 22ம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறுகிய காலத்தில் தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டு வரக்கூடிய எளிமையான முறைமை ஒன்றை அமுல்படுத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உத்தேசித்துள்ளது. இந்த யோசனைத் திட்டம் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஓரு லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்ட மத்திய கொழும்பு, கடுவல, ஹோமாகம போன்ற தொகுதிகளின் எல்லைகள் மீள் நிர்ணயம் செய்யப்படவுள்ளன.
அதேபோன்று 50த்திற்கும் குறைவான வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகள் இணைக்கப்படவுள்ளன.
இவ்வாறான ஐந்து தேர்தல் தொகுதிகள் யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் காணப்படுகின்றது.
தொகுதிகளின் புவிவியல் ரீதியான பரப்பரப்பளவு அடிப்படையிலும் எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்படவுள்ளது.
தற்போது தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கை 160 ஆக காணப்படுகின்றது.
இந்த எண்ணிக்கையில் பாரியளவில் அதிகரிப்போ அல்லது குறைவோ ஏற்படாது என அமைச்சர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

19ம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அவசர திருத்தச் சட்டங்கள் சமர்ப்பிக்க முடியாது!
[ திங்கட்கிழமை, 13 ஏப்ரல் 2015, 01:06.53 AM GMT ]
19ம் திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், அவசர திருத்தங்களை நாடாளுமன்றில் சமர்பிக்க முடியாது என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதுவரை காலமும் காணப்பட்ட அவசர சட்ட மூலங்களை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கும் முறைமை ரத்தாகும்.
இதன்படி, 19ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் எந்தவொரு சட்டத்தையும் அவசர அசரமாக நாடாளுமன்றில் சமர்ப்பித்து நிறைவேற்றிக்கொள்ள முடியாது.
இதன் மூலம் மக்களின் ஜனநாயக உரிமைகள் உறுதி செய்யப்படும்.
இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் கொண்டு வரப்பட்ட பெரும்பான்மையான அவசர சட்டங்கள் சுயலாப அடிப்படையிலானது.
கடந்த காலங்களில் குறித்த அமைச்சரவை அமைச்சருக்கு தெரியாமலேயே துறைசார் சட்டங்கள் நாடாளுமன்றில் அவசரமாக நிறைவேற்றிக்கொள்ளப்பட்ட கசப்பான அனுபவங்கள் உண்டு.
இவ்வாறான நடவடிக்கைகள் உண்மையில் ஜனநாயக விரோதமான செயற்பாடேயாகும்.
18ம் திருத்தச் சட்டமும் அவசர சட்ட மூலமாகவே நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றிக்கொள்ளப்பட்டது.
எனினும், 19ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் அவ்வாறு அவசர அவசரமாக சட்டத் திருத்தங்களை நாடாளுமன்றில் சமர்ப்பித்து அமுல்படுத்த முடியாது என அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyESXSUkw4J.html

19ம் திருத்தச் சட்டத்தை சமர்ப்பிப்பதில் சிக்கல்?
[ திங்கட்கிழமை, 13 ஏப்ரல் 2015, 01:46.16 AM GMT ]
19ம் திருத்தச் சட்டத்தை சமர்ப்பிப்பதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக சட்டத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
19ம் திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு அதன் பின்னர் நாடாளுமன்ற செயற்குழுவில் சமர்பித்து திருத்தங்களை செய்வதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட திருத்தங்களின் அடிப்படையிலேயே உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
அதன் பின்னர் அரசாங்கம் இரண்டு தடவைகள் 19ம் திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை செய்துள்ளது. எனினும், இந்த திருத்தங்கள் உச்ச நீதிமன்றிற்கு அனுப்பி வைக்கப்பட்ட பிரதியில் உள்ளடக்கப்படவில்லை.
இவ்வாறான ஓர் நிலைமையில் நாடாளுமன்ற செயற்குழுக் கூட்டங்களின் போது சட்ட மூலத்திற்கு அங்கீகாரம் பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலைமை உருவாகியுள்ளது.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மத்திய செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக வழக்குத் தொடரப்படும்: எஸ்.எம். சந்திரசேன
[ திங்கட்கிழமை, 13 ஏப்ரல் 2015, 01:53.48 AM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்களான நான் உள்ளிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
கட்சியின் இந்த தீர்மானத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும்.
பதிவுத் தபால் ஊடாக பணி நீக்கப்பட்டமை குறித்து எனக்கு அறிவிக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கடிதத் தலைப்பைக் கொண்ட குறித்த கடிதத்தில், கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டிருந்தார்.
எனினும், என்ன காரணத்திற்காக நான் மத்திய செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்டேன் என்பதற்கான விளக்கம் அளிக்கப்படவில்லை.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை போட்டியிடச் செய்ய வேண்டுமென்ற நோக்கில் ரத்தினபுரியில் நடைபெற்ற கூட்டத்தில் நான் பங்கேற்றிருந்தேன்.
இதன் காரணமாகவே நான் விலக்கப்பட்டிருக்கலாம் என கருதுகின்றேன் என எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyESXSUkw5C.html

19வது திருத்தத்திற்கு 175 பேர் ஆதரவு! மறுப்போருக்கு தேர்தலில் பதிலடி கிடைக்கும்!- அரசாங்கம்
[ திங்கட்கிழமை, 13 ஏப்ரல் 2015, 02:29.10 AM GMT ]
அரசியலமைப்பின் 19 வது திருத்தச்சட்டம் திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும். இதனை பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றுவோம். எவ்வாறாயினும் 175 உறுப்பினர்கள் இந்த திருத்தத்திற்கு ஆதரவாக இருப்பார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
மக்களின் அபிலாஷைகளுக்கு தற்போதைய மக்கள் பிரதிநிதிகள் உரிய ஒத்துழைப்பினை வழங்காவிடின் பொதுத் தேர்தலின் போது மக்கள் அவர்களுக்கு தகுந்த பதிலடி வழங்குவார்கள் எனவும் அமைச்சர்
சுட்டிகாட்டினார்.
இது தொடர்பில் கேசரிக்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
அரசியலமைப்பின் 19வது திருத்தச்சட்டத்தினை பாராளுமன்றில் சமர்ப்பித்தோம். எனினும் இதற்கு எதிர்க்கட்சிகளினால் பாரியளவில் எதிர்ப்பு வெளியிடப்பட்டது. அத்தோடு அரசாங்கத்தில் உள்ள பங்காளி கட்சிகளும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தன.
எனினும் அதற்கான திருத்தங்களையும் அமைச்சரவையில் அங்கீகரித்தோம்.ஆனால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறைமையை கொண்டு வர முனைவதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறைமையை கொண்டு வரும் நோக்கம் எமக்கு இல்லை. ஜனாதிபதி தேர்தலின் போது மக்களின் வாக்குறுதிகளுக்கு அமைவாக ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவுள்ளோம். நாட்டிற்கு சர்வாதிகார தன்மையை கொண்ட ஆட்சி முறைமையை நாம் நீக்கி புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த வேண்டியுள்ளது.
இதன்பிரகாரமே அரசியலமைப்பின் 19வது திருத்தச்சட்டத்தை நாம் கொண்டு வந்தோம். இவற்றில் உயர்நீதிமன்றம் வழங்கிய வியாக்கியானத்திற்கு அமைவாக திருத்தம் மேற்கொண்டு 20ம் திகதி அதனை பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளோம்.
இந்நிலையில் குறித்த சட்டத்திருத்ததிற்கு சுதந்திர கட்சியினரின் ஆதரவு எமக்கு கிடைக்கப்பெறும். எனினும் எமது அரசின் நிதிகோரல் யோசனை வாக்கெடுப்பின் போது உண்மையான எதிர்க்கட்சியை நாம் அறிந்துக் கொண்டோம்.
எனவே குறித்த யோசனையின் போது எமக்கு எதிராக செயற்பட்ட 50 உறுப்பினர்கள் உதவிபுரியாவிடனும் 175 பேரினுடைய ஆதரவுடன் நாம் 19வது திருத்ததை நிறைவேற்றியே தீருவோம். எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் 50 பேரும் இந்த திருத்ததிற்கு ஆதரவாக வாக்களிப்பர்.
எனவே மக்களின் அபிலாஷைகளுக்கு தற்போதைய மக்கள் பிரதிநிதிகள் உரிய ஒத்துழைப்பினை வழங்கவேண்டும் இல்லையேல் அடுத்த பாராளுமன்ற தேர்தலின் போது மக்களிடமிருந்து அவர்களுக்கு தகுந்த பதிலடி கிடைக்கும் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyESXSUkw5F.html

Geen opmerkingen:

Een reactie posten