தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 21 april 2015

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவு கூர பின்னிற்க வேண்டாம்: சிவாஜிலிங்கம் கோரிக்கை

வடகிழக்கில் 10 வருடங்களுக்கு நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை தொடருமாறு கோரவுள்ளோம்!- சுரேஸ் எம்.பி.
[ செவ்வாய்க்கிழமை, 21 ஏப்ரல் 2015, 02:05.21 PM GMT ]
வடகிழக்கு மாகாணங்களில் 10 வருடங்களுக்கு தற்போதுள்ள நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை தொடருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுவதென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு தீர்மானித்திருப்பதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இன்றைய தினம் நாடாளுமன்ற குழு கூட்டம் சுமார் 3 மணிநேரம் இடம்பெற்றிருந்தது. இதன் போது தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பாக பேசியிருந்தோம்.
இதில் குறிப்பாக வடகிழக்கு மாகாணங்கள் கடந்த 30 வருடங்களாக போரினால் பாதிக்கப்பட்ட மாகாணங்களாகும்.
இதனடிப்படையில் மேற்படி மாகாணங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைப்பதன் ஊடாக இந்த மாகாணங்களின் நலன்கள் பெரிதும் கவனிக்கப்படாமல் போகும் வாய்ப்புக்கள் அதிகம் இருக்கின்றன.
இந்நிலையில் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் உள்ள 9 பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை போன்று தற்போதுள்ள எண்ணிக்கையை, தொடர்ந்தும் 10 வருடங்குள்கு நீடிக்குமாறு நாங்கள் அரசாங்கத்தை கோருவதென தீர்மானித்திருக்கின்றோம்.
இதேவேளை தொகுதிவாரி தேர்தல் முறை தொடர்பாக பரவலாக பேச்சுக்கள் இடம்பெறும் நிலையில், அவ்வாறு தொகுதிவாரி தேர்தல் நடத்தப்பட்டால் ஒரு தொகுதியில் 1லட்சம் மக்கள் இருக்கவேண்டும் என்ற நிலையுள்ளது.
இதன்படி பார்த்தால் யாழ்.மாவட்டத்தில் 11 தொகுதிகள் முன்னர் இருந்தது. அந்த தொகுதிகளில் முன்னர் இருந்ததைப் போன்று மக்கள் தொகை 1 லட்சம் அளவில் இல்லை.
எனவே தொகுதிவாரி தேர்தல் முறை வருவதனால் சிறுபான்மை கட்சிகள் எவ்வாறான பாதிப்புக்களை எதிர்கொள்ள நேரிடும் என்பது தொடர்பாகவும் பேசியிருக்கின்றோம் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyERVSUjszG.html

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவு கூர பின்னிற்க வேண்டாம்: சிவாஜிலிங்கம் கோரிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 21 ஏப்ரல் 2015, 02:17.34 PM GMT ]
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாளை, மே மாதம் 12ம் திகதி தொடக்கம் 18ம் திகதி வரையில் உணர்வுபூர்வமாக நினைவு கூருங்கள். எத்தகைய அழுத்தங்கள். அச்சுறுத்தல்கள் வந்தாலும் பின்னிற்க வேண்டாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பி னர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேட்டுள்ளார்.
சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தமிழர்கள் தம்மீது நடத்தப்பட்ட இன அழிப்பை மறந்துவிடவில்லை. அதற்கான நீதி கடந்த 6 வருடங்களாக மறுக்கப்பட்டு வருகின்றது. இதற்காக நாங்கள் ஓய்ந்துவிட மாட்டோம். நீதிக்காக தொடர்ந்தும் போராடுவோம். எமக்கு நீதி வேண்டும் என்பதை நினைவுபடுத்தும் வகையில் 12ம் திகதி தொடக்கம் 18ம் திகதி வரையில் தமிழகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும், தாயகத்திலும் உள்ள தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக நினைவுகூர வேண்டும்.
இதன் மூலம் தமிழர்கள் தங்கள் மீது இழைக்கப்பட்ட அநீதிக்கு தொடர்ந்தும் நீதியை கேட்கிறார்கள். எந்தச் சந்தர்ப்பத்திலும் குற்றவாளிகளை தண்டிக்கவோ மறக்கவோ மாட்டார்கள் என்ற விடயம் சர்வதேசத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் தெரியும் வகையில் எங்களின் நினைவுகூரல்கள் இடம்பெற வேண்டும். அச்சுறுத்தல்கள், அழுத்தங்கள் கடந்தகாலங்களைப் போன்று இவ்வாண்டும் கட்டவிழ்த்தவிடப்படலாம்.
கட்டவிழ்த்து விடப்படும். அதனைக் கண்டு பின்நிற்காமல் நாங்கள் தொடர்ந்தும், எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்டு போராடுவோம் என்றார்.
காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை செய்ய ஐ.நா குழு அடுத்த மாதம் இலங்கை வருகை
இலங்கையில் இடம்பெற்ற காணாமல்போதல்கள், கடத்தல்கள், சரணடைந்து காணாமல்போ னமை மற்றும் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் காணாமல்போனமை தொடர்பில் ஐ.நா மனிதவுரிமை ஆணையாளரினால் நியமிக்கப்பட்ட 3 பேர் கொண்ட விசாரணைக்குழு அடுத்த மாதம் இலங்கை வந்து விசாரணை நடத்தும்.
இந்த விசாரணைகளின் ஊடாக வடகிழக்கு மாகாணங்களில் போர் நடைபெற்ற காலப்பகுதியிலும், போருக்குப் பின்னர் சரணடைந்து மற்றும் ஒப்படைக்கப்பட்டு காணாமல்போனவர்கள்  தொடர்பான உண்மை நிலை வெளிப்படுத்தப்படும் என வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சி வாஜிலிங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அண்மையில் வெளிநாடு சென்றிருந்தபோது மேற்படி ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளரினால் நியமிக்கப்பட்ட 3 பேர் கொண்ட விசாரணை குழுவை சந்தித்து பேசியிருக்கின்றோம்.
இதன்போ து 20 ஆயிரம் பேர் காணாமல்போயுள்ளதாக நாங்கள் கூறியிருக்கின்றோம். ஆனால் 6ஆயிரம் பேரின் முறைப்பாடுகளே தங்களிடம் உள்ளதாக அவர்கள் கூறியிருக்கின்றார்கள். ஆனால் எங்களுடைய எண்ணிக்கையை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
மேலும் அடுத்த மாதம் தாங்கள் இலங்கைக்கு வந்து சுமார் 10 தினங்கள் தங்கியிருந்து காணாமல்போனவர்களுக்கு என்ன நடந்தது? என்பது தொடர்பிலான உன்மையை கண்டறியவுள்ளதாகவும் தனித்தனியே அந்த முடிவை காண முடியாது எனவும் ஒட்டுமொத்தமாக காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது?  என்பதை
தாங்கள் நிச்சயம் வெளிப்படுத்துவோம் என அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.
இந்நிலையில் காணாமல்போனவர்களுக்கு நீதி கிடைக்கும் என நாங்கள் நம்புகின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyERVSUjszH.html

Geen opmerkingen:

Een reactie posten