தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 15 april 2015

ஆனந்த சங்கரியின் தடுமாற்றம் எதனால்? ஆதாரத்துடன் மாகாண சபை உறுப்பினர் ஜனா சாடல்



ஆனந்த சங்கரி ஐயாவை நான் மிகவும் நேசித்தவன், இப்போதும் நேசிக்கிறவன். அவரது வயது, அரசியல் அனுபவம், நீண்டகாலமாக மக்களுக்கு குரல் கொடுத்தவர் என்ற ரீதியில் அவர் மீது ஒரு அபிமானம் இருந்தது.
நான் முதல் முதலில் பாராளுமன்றம் சென்றது அவர் தற்போது வைத்திருக்கும் கூட்டணிக் கட்சியின் சின்னத்திலே தான்.
ஆனால் கடந்த சில வருடங்களாக ஆனந்த சங்கரி ஐயாவின் கட்டுரைகள், கடிதங்களைப் பார்க்கும்போது சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்.
அவரும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பிலிருந்து வேறுபட்டுச் செல்வது மிகவும் மனவருத்தத்திற்குரியது.
மேலும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு கிடைக்கக் கூடாது என்று ஆனந்த சங்கரி கூறுவது அவரது தனிப்பட்ட வெறுப்புணர்ச்சியே தவிர வேறில்லை. என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தம் கருணாகரன் லங்காசிறி இணையத்திற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten