தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 29 april 2015

தமிழரின் தீர்வுக்கு சர்வதேசத்தின் மத்தியஸ்தம் அவசியம்

இரவு 11 மணிவரை நீடித்த பாராளுமன்ற அமர்வு
[ புதன்கிழமை, 29 ஏப்ரல் 2015, 01:33.59 AM GMT ]
19வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு நேற்றைய பாராளுமன்ற அமர்வுகள் இரவு 11.10 வரை நீடித்திருந்தன.
திருத்தச் சட்டம் மீதான முதலாவது வாக்கெடுப்பு 7.30 மணியளவில் நிறைவடைந்த போதிலும் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இரவு 11 மணியளவில் நிறைவடைந்தது.
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் நாள் விவாதம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
விவாவத்தின் இறுதியில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது திருத்தத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு 7.30 மணியளவில் நிறைவடைந்த போதிலும் திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள 56 சரத்துக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் திருத்தங்கள் தனித்தனியாக சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்திற்கு உட்படுத்தி இறுதியில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டிருந்தது.
இரண்டு தடவைகளும் பெயர் கூவியே வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் சரியாக இரவு 11 மணிக்கு இரண்டாவது வாக்கெடுப்பு நிறைவேறியது.
இதன் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் எதிர்க்கட்சித் தலைவர் நிமல்சிறிபால டி சில்வாவினதும் நன்றி கூறலுடன் சபை நடவடிக்கைகள் நிறைவுக்கு வந்தன.
பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வு எதிர்வரும் மே மாதம் 19ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

20ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு அவசியம்: எதிர்க்கட்சித் தலைவர்
[ புதன்கிழமை, 29 ஏப்ரல் 2015, 01:51.32 AM GMT ]
20ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
19ம் திருத்தச் சட்ட நிறைவேற்றத்தின் பின்னர் நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
19ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக திருப்தி அடைய முடியாது. சிறந்த ஒர் தேர்தல் முறைமை அவசியமாகின்றது.
19ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதனைப் போன்று 20ம் திருத்தச் சட்டத்தையும் அமுல்படுத்த வேண்டும்.
எந்தவொரு ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்படாத காரியத்தை இந்த ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார்.
அதிகார மோகமின்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

செய்த பிழையை திருத்திக் கொள்ள சந்தர்ப்பம் கிட்டியுள்ளது: ரவூப் ஹக்கீம்
[ புதன்கிழமை, 29 ஏப்ரல் 2015, 01:57.20 AM GMT ]
18ம் திருத்தச் சட்டத்திற்கு வாக்களித்து செய்த பிழைகளை திருத்திக் கொள்ள சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
19ம் திருத்தச் சட்டம் குறித்த நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவா் இதனைத் தெரிவித்துள்ளார்.
19ம் திருத்தச் சட்டத்திற்கு சில யோசனைகளை முன்வைத்து, வேறும் நோக்கங்களை அடைந்து கொள்ள முயற்சிக்கின்றனர்.
தேர்தலின் போது ஜனாதிபதி அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
தேர்தல் முறைமை மாற்றம் குறித்து சிறுபான்மை மக்களின் கருத்து கோரப்பட வேண்டும்.
தேசிய கொடி மாற்றியமைக்கப்பட்டு காண்பிக்கப்பட்டமை ஆச்சரியமளிக்கின்றது.
இவ்வாறான ஓர் நிலைமை மீளவும் இடம்பெற இடமளிக்கப்பட முடியாது என ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.


தமிழரின் தீர்வுக்கு சர்வதேசத்தின் மத்தியஸ்தம் அவசியம்
[ புதன்கிழமை, 29 ஏப்ரல் 2015, 04:37.51 AM GMT ]
இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு இலங்கை அரசு மற்றும் தமிழ்த் தலைவர்களுக்கு இடையில் நடுநிலைமை வகிக்க சர்வதேசம் முன்வரவேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் வட மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சபையில் நாளை இடம்பெறும் அமர்வில் இத்தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளததாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் உள்ள தமிழர்களின் அரசியல் விவகாரம் 65 ஆண்டுகளை கடந்துள்ள நிலையிலும் இதுவரை தீர்க்கப்படாமல் உள்ளது.
அத்துடன் யுத்தம் இடம்பெற்று 6 வருடங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரை இப்பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படாமல் தொடர்ந்தும் நீடித்து கொண்டே இருக்கின்றன.
எதனால் நாட்டில் யுத்தம் இடம்பெற்று என்பது தொடர்பில் ஆராயாமல் உள்ளதையும் கருத்திற்கொண்டும்,
ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் இலங்கை குறித்த 2014ம் ஆண்டு மார்ச் தீர்மானமானது நீதி பொறுப்புக்கூறல் ஆகியவற்றுக்காக ஐ.நா. தொழில்நுட்ப உதவியை இலங்கைக்கு வழங்க முன்வந்திருப்பதை  கருத்திற்கொண்டும்,
இலங்கையில் ஜனவரி மாதத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்மையை கருத்திற்கொண்டும் குறித்த தீர்மானம் சமர்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள தமிழ் - சிங்கள இனப் பிரச்சினையில் சர்வதேச சமூகத்தினதும், ஐ.நா. சபையினதும் வழிகாட்டல்கள், அனுசரணை வழங்கல், மத்தியஸ்தம், உறுதியளிப்பு மற்றும் தீவிர பங்களிப்பு இல்லாமலும் நிரந்தரமானதும் சமத்துவமானதுமான தீர்வு ஒன்றைக் காண முடியாது என வடமாகாண சபை உறுதியாக நம்புகின்றது. 
ஐ.நா.வும் சர்வதேச சமூகமும் இலங்கையிலுள்ள தமிழ் - சிங்கள இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதை நோக்கி தமது தொழில்நுட்ப உதவிகளை வழங்க முன்வர வேண்டும் என வடமாகாண சபை அழைப்பு விடுக்கின்றது.
இலங்கையிலுள்ள தமிழ் - சிங்கள இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதை நோக்கமாக கொண்டு இலங்கை அரசுக்கும் தமிழ் தலைவர்களுக்கும் இடையில் மத்தியஸ்தம் வகிக்க முன்வருமாறு சர்வதேச சமூகத்துக்கு குறிப்பாக ஐரோப்பிய யூனியன், இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றுக்கு இச்சபை அழைப்பு விடுக்கின்றது உள்ளிட்ட கோரிக்கைகள் இத்தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடமாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் இத்தீர்மானம் சமர்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyERdSUjx5E.html

Geen opmerkingen:

Een reactie posten