தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 28 april 2015

ஜனாதிபதிக்கு அறிவிக்காமல் பிரதமர் விடுத்துள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல்: எதிர்க்கட்சியினர் கேள்வி

மரண தண்டனையை ரத்து செய்ய கோரி அவசர கடிதம்! தண்டனையை நிறைவேற்றுவதில் மாற்றமில்லை!- இந்தோனேசியா அரசாங்கம்
[ செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015, 11:12.54 AM GMT ]
பிலிப்பைன்ஸ் நீதி திணைக்களத்தினால் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு கோரி இந்தோனேசிய சட்டமா அதிபருக்கு அவசர கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.
ஜனாதிபதி விடோடோ பிலிப்பைன்ஸ் பெண் மேரி ஜேன் குறித்து கலந்துரையாடுவதற்கு அவசர கூட்டமொன்றை ஆயத்தப்படுத்தியதாக அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டு கைதி ஒருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த Mary Jane Veloso(30) என்ற பெண் 2.6 கிலோ எடையுள்ள ஹெரோயின் போதை பொருளை கடத்தியதாக கடந்த 2010 ஆண்டு இந்தோனேசிய பொலிசாரால் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார். 
அவுஸ்ரேலியாவை சேர்ந்த ஆன்ரூ சான் மற்றும் மயூரன் சுகுமாரன் என்ற இரண்டு கைதிகளுக்கு இன்று இரவு மரண தண்டனை நிறைவேற்ற அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அவுஸ்ரேலிய கைதிகளுடன் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள Mary Jane Veloso கைதிக்கும் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என இந்தோனேஷிய ஜனாதிபதி தற்போது அவசர ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தகவல் கிடைக்கப்பெற்ற பின்னர் பிலிப்பைன்ஸ் அரசு, இந்தோனேஷிய Attorney-General-க்கு மரண தண்டனையை தடை செய்யுமாறு ஒரு அவசர கடிதத்தை அனுப்பியுள்ளது.
மூன்று கைதிகளுக்கும் ஒரே நேரத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்படுமா என்ற சூழல் நிலவி வருவதால், இந்தோனேஷிய சிறைச்சாலை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தண்டனையை நிறைவேற்றுவதில் மாற்றமில்லை!- இந்தோனேசியா அரசாங்கம்
இதேவேளை, இந்த மரண தண்டனையை கண்டித்து ஐரோப்பிய மனித உரிமைகள் அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது என அதன் செயலாளர் ஜக்லன்ட் தெரிவித்துள்ளார்.
இதேவேளை எவ்வித சட்ட சவால்கள் விடுக்கப்பட்ட போதிலும் விதிக்கப்பட்ட தண்டனையை நிறைவேற்றுவதில் எவ்வித மாற்றமும் இல்லை என இந்தோனேசிய அரசாங்கம் தெரிவித்ததாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிஷப் ஏ.பி.சி செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதிக்கு அறிவிக்காமல் பிரதமர் விடுத்துள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல்: எதிர்க்கட்சியினர் கேள்வி
[ செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015, 10:58.32 AM GMT ]
கடந்த பெப்ரவரி மாதம் 13ம் திகதி ஜனாதிபதிக்கு அறிவிக்காமல் பிரதமர் விடுத்துள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பினர். 
பொலிஸ் பாரிய நிதி மோசடி விசாரணைப் பிரிவை ஸ்தாபிப்பது தொடர்பான இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரதமர் தலைமையிலான அமைச்சரவை உப குழு ஊடாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பிரதி பொலிஸ் மாஅதிபருக்கு நேரடியாக முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்திலும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும கூறியுள்ளார்
இந்த நடவடிக்கை தவறான வழிகாட்டல்களை நாட்டுக்கு வழங்குவதாகவும், பொலிஸ் ஆட்சியை நோக்கி நாடு பயணிப்பதையே இந்த செயற்பாடு எடுத்தியம்புவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் மற்றும் பாராளுமன்றத்திற்கு இந்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டிருக்கவில்லை எனவும் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் ஜனாதிபதிக்கும் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை என இன்று நடைபெற்ற கூட்டத்தின்போது அறிந்துகொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் குறித்த வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் மீளப்பெற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினர் எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளிடம் பழிதீ்ர்க்கும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தலை விடுத்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
திருட்டுத்தனமாக சட்டங்களை அறிமுகப்படுத்தி அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள இத்தகைய நிறுவனங்கள் உடனடியாக கலைக்கப்பட வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyERcSUjx1B.html

Geen opmerkingen:

Een reactie posten