தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 26 april 2015

பிளவுபட்டுள்ள எமது சமுதாயத்தை தந்தை செல்வாவின் பெயரால் ஒன்றிணைக்க வேண்டும்: விரிவுரையாளர் ச.லலீசன் !



தமிழ் தேசியத்தின் தந்தை என போற்றப்படும் தந்தை செல்வநாயகத்தின் 38வது நினைவு தினம் இன்று யாழ்.நகரில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் தந்தையின் உருவச் சிலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் மக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளதுடன், நினைவு கூட்டத்திலும் கலந்து கொண்டனர்.
இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு குறித்த நினைவு தினம் தந்தை செல்வா சதுக்கத்தில் இடம்பெற்றது.
முதலில் தமிழரசு கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தந்தையின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்தார்.
தொடர்ந்து சர்வமத தலைவர்களும் தந்தை செல்வநாயகத்தின் நினைவுகளை மீட்கும் உரைகளை நிகழ்த்தியிருந்தனர்.
நிகழ்வில் செல்வநாயகத்தின் நினைவு பேருரையினை யாழ்.கோப்பாய் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் செந்தமிழ் சொல்லருவி ச.லலீசன் நிகழ்த்தியிருந்தனார்.
தனது நினைவு பேருரையில் அவர் குறிப்பிடுகையில், 
நாம் பிறந்த நாளிற்கும் இறக்கப் போகின்ற நாளிற்கும் இடையில் ஒரு இடைவெளி உள்ளது. அந்த இடை வெளியை நம்மில் பெரும்பாலானோர் நிரப்பாமலே சென்று விடுகின்றோம். அனால் செல்வநாயகம் அவர்கள் தந்தை எனும் உயரிய நாமத்தினால் நிரப்பி சென்று வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்.
நாங்கள் இன்றும் தமிழ்த் தேசியம், ஈழம் என்று வாழ்கின்றோமென்றால் தனக்கென வாழாது தான் சார்ந்த இனத்திற்காக வாழ்ந்து சென்றுள்ள தந்தை செல்வா எனும் பெரிய மனிதர் தான் காரணமாகும்.
ஒரு சிறிய தீவிலே சிறுபான்மையாகவுள்ள தமிழ் இனத்தை உலகம் தெரிந்து கொண்டுள்ளது என்றால் அதற்கும் காரணம் தந்தை செல்வாதான்.
தமிழர்களின் வாழ்வு தான் தன்னுடைய வாழ்வு என தன் வாழ்வையே தமிழர்களுக்காக அர்ப்பணித்த தலைவனை போன்ற தலைவனை இதுவரை நாம் கண்டதில்லை.
அந்தளவிற்கு தந்தை செல்வா அவர்கள் தமிழ் இனத்தின் விடுதலைக்கும் விடிவுக்குமாக தனது வாழ்நாள் முழுவதுமாக போராடியவர். எமது இனத்திற்காக இதுவரை யாரும் அகிம்சை வழியில் போராடவில்லை.
சிறுபான்மை இனமொன்று வெற்றியடைய வேண்டுமானால், அவ்வினத்திற்கு ஒற்றுமை என்பது அவசியம் மிக்கதொன்றாகும். நாம் சாதி, மத, பேதத்தால் பிரிந்து கிடந்தால் எமக்கு எப்போதும் விடிவு கிடைக்கப்போவதில்லை.
இந்த பிரிவினால் தமிழ்ச் சாதி என்றும் உருப்படப் போவதுமில்லை. பிரிந்து கிடக்கும் எமது சமூகத்தை ஒன்றிணைப்பது என்பது காலத்தின் மிக கட்டாயமாகும்.
பல பிரிவினைகளால் பிளவுபட்டுள்ள எமது சமுதாயத்தை தந்தையின் பெயரால் ஒன்றிணைக்க வேண்டும். தந்தை செல்வாவினை அச்சாணியாக கொண்ட தமிழ்த் தேசியம் எனும் தேரை நகர்த்த நகர்த்த வேண்டுமென்றால், அத்தேருக்கு கீழ் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதன் மூலமே தமிழ்த் தேசியம் எனும் தேரை சரியான வழியில் கொண்டு செல்ல முடியும்.
தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு அமையவே தந்தை செல்வாவை அச்சாநியாக கொண்ட தேரை கொண்டு செல்ல வேண்டும்.
மாறாக தமது சுய நலன்களுக்காக அதனை தவறான வழியில் கொண்டு சென்று விடக்கூடாது. அவ்வாறு சுய நலன்களுக்காக கொண்டு செல்பவர்கள் வரலாற்றின் அடியிலிருந்து தப்பிக்க முடியாது.
ஒரு இனம் வீழ்வது பெரிதல்ல. வீழ்ந்தும் தலை நிமிர்ந்து எழுந்து நிற்பதே பெரிது. என அவர் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyERaSUjv6F.html

Geen opmerkingen:

Een reactie posten