தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 15 april 2015

கேன்ஸ் திரைப்பட விழாவில் இலங்கை மாணவியின் ஆவணப்படம்



தமிழர் பகுதியில் இராணுவம் ஏன் புதுவருட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கின்றது?- டுவிட்டரில் கருத்து மோதல்
[ புதன்கிழமை, 15 ஏப்ரல் 2015, 08:05.48 AM GMT ]
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தமிழர் பகுதிகளில் இராணுவத்தினர் புத்தாண்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றமை குறித்து சமூக ஊடக வலையமைப்பான டுவிட்டரில் சமூக ஆர்வலர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்
சுதந்திர ஊடக இயக்கத்தின் முன்னாள் ஏற்பாட்டாளரான சுனந்த தேசப்பிரிய, தமிழர் பகுதியில் இராணுவம் ஏன் புதுவருட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கின்றது? அங்கு சிவில் அதிகாரிகள் இல்லையா? என தனது டுவிட்டர் கணக்கில் புகைப்படங்களுடன் பதிவேற்றம் செய்துள்ளார்.
அதனைப் பலரும் பகிர்ந்து கொண்டுள்ள நிலையில் சுனந்தவின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஒருவர் ' தமிழர்கள் மிகவும் நாகரீகமற்றவர்கள் தமது சொந்த விழாவையே நடத்த தெரியாதவர்கள் அதனால் தான்' (இராணுவம் ஏற்பாடு செய்து நடத்துகின்றது) என்ற பொருள்பட பதிலளித்துள்ளார்.
இன்னுமொருவரோ ' விடுதலைப் புலிகளிடமிருந்து தமிழர்களைக் காப்பாற்றியது இலங்கை இராணுவம் என்பதே உண்மையாகும். அதனால் தான் அவர்கள் அக்கறை கொண்டுள்ளனர்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்குப்பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ள ஒருவரோ ' அப்படியென்றால் நாம் ஏன் இராணுவத்தினர் நாடு பூராகவும் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்ககூடாது? இராணுவத்தினருக்கு என ஆணையொன்றுள்ளது. அது இதுவல்ல' எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyESZSUkx6H.html


கேன்ஸ் திரைப்பட விழாவில் இலங்கை மாணவியின் ஆவணப்படம்
[ புதன்கிழமை, 15 ஏப்ரல் 2015, 07:22.09 AM GMT ]
இலங்கை மாணவி ஒருவரின் ஆவணப்படமொன்று கேன்ஸ் திரைப்பட விழாவில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.
பிரான்ஸில் முதுமானி பட்டப்படிப்பைத் தொடர்ந்து வரும் 32 வயதான சார்மினி கங்கானம்கே என்ற மாணவியின் ஆவணப்படமே இவ்வாறு காட்சிப்படுத்தப்பட உள்ளது.
போர் இடம்பெற்ற நாட்டிலிருந்து வெளியேறிய தாய் ஒருவரின் கருவில் இருக்கும் குழந்தைக்கான செய்தியாக இந்த ஆவணப்படத்தின் கதை அமைந்துள்ளது.
முதுமானி பட்டத்திற்கான ஆய்வாக செய்யப்பட்ட இந்த ஆவணப்படம், வெறுமனே நூலகத்தில் இருப்பதனை விரும்பவில்லை எனவும் மக்களுக்கு ஏதேனும் செய்தியை சொல்ல வேண்டுமெனவும் மாணவி தெரிவித்துள்ளார்.
கணவரின் கமரா, ஸ்மார்ட் போன் போன்ற கருவிகளை பயன்படுத்தி மிகவும் செலவு குறைந்த அடிப்படையில் ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
போரின் நேரடி வலிகள் இல்லாத போதிலும் போரினால் ஏற்பட்ட அனுபவங்கள் கசப்பானது என கங்கானம்கே தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyESZSUkx6F.html

Geen opmerkingen:

Een reactie posten