தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 27 april 2015

திருப்பியனுப்பிய இலங்கை அகதி ஒருவருக்கு சுவிஸ் அரசாங்கம் அகதி அந்தஸ்து வழங்கியது!

2013ம் ஆண்டு இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்ட அகதி ஒருவர் கைதுசெய்யப்பட்ட நிலையில் மீண்டும் சுவிட்ஸர்லாந்துக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை சுவிட்ஸர்லாந்தின் செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
சுவிட்ஸர்லாந்துக்கு வந்த நிலையில் அகதி அந்தஸ்து பெறுவதற்கு குறித்த இலங்கையர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் விண்ணப்பித்திருந்தார்.
எனினும் சுவிட்ஸர்லாந்து அரசாங்கம், அவரை நாட்டுக்கு திருப்பியனுப்பியது.
இதன்போது கொழும்பு விமானநிலையத்தில் சென்று இறங்கிய அவர் இலங்கை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார்.
அதன்பின்னர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்னரே அவர் விடுவிக்கப்பட்டார்.
சுவிஸ் அதிகாரிகள் குறித்த இலங்கையர் சுவிஸூக்கு திரும்ப உரிய நடவடிக்கைகளை எடுக்காமையே அவர் சிறையில் காலத்தை கழிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியது.
இது தொடர்பில் அகதியின் சட்டத்தரணி, சுவிட்ஸர்லாந்தின் செயலக பணிப்பாளர் மாரியோ கட்டிக்கர் மீது வழக்கை பதிவுசெய்தார்.
எனினும் குறித்த இலங்கையரை சுவிட்ஸர்லாந்துக்கு திரும்பியழைக்க வேண்டுமாயின் கொழும்பில் உள்ள சுவிட்ஸர்லாந்து தூதரகம் அவர் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் இல்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கையர் கடந்த ஏப்ரல் 25ம் திகதியன்று அரச சார்பற்ற அமைப்பு ஒன்றினால் சுவிட்ஸர்லாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பின்னர் அவர் சுவிஸிலுள்ள அவரின் குடும்பத்துடன் இணைக்கப்பட்டார்.
சுவிட்ஸர்லாந்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டமிடப்பட்ட நிபந்தனைகள் காரணமாகவே குறித்த இலங்கையர் நாடு கடத்தப்பட்டார்.
எனினும் அந்த நிபந்தனைகள் பிழையானவை என்ற அடிப்படையில் 2014ம் ஆண்டு அவை நீக்கப்பட்டன.
இதன்பின்னரே அகதி அந்தஸ்து கோரி 2001, - 2013ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட சுமார் 250 இலங்கை அகதிகள், அகதி அந்தஸ்துக்காக பரிசீலிக்கப்படுகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmtyERbSUjw6C.html

Geen opmerkingen:

Een reactie posten