தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 28 april 2015

இனவாதத்தை தோற்கடிப்போம்: மனோ கணேசன் தலைமையில் மேதின நிகழ்வு

இலங்கை கடற்பரப்பில் தங்கம், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் இந்திய மீனவர்கள்: மத்திய அரசு தகவல்
[ செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015, 06:30.08 AM GMT ]
இந்திய மீனவர்கள் தங்கம், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகின்றனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது,
இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்களின் அத்துமீறல் நடவடிக்கைகளினால் இலங்கை கடற்படையினருக்கும், இந்திய மீனவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்படுகின்றது.
இதனை இந்திய கடலோர காவற்படை ஒருபோதும் பொறுப்பேற்காது என உயர் நீதிமன்றத்தில் இந்திய கடலோர காவல்படை துணை இயக்குநர் ஜெனரல் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளார்.
மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களுக்கு கடலில் முப்படை பாதுகாப்பு வழங்குமாறு வலியுறுத்தி வழக்கறிஞர் எஸ்.எம்.ஆனந்தமுருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்திய கடல் எல்லையில் கூடுதல் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது.
இந்த உத்தரவை நிறைவேற்றாத காரணத்தினால் மத்திய அமைச்சரவைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக் குமார், ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய கடலோர காவல்படையின் துணை இயக்குநர் ஜெனரல் கே.ஆர்.நாட்டியாலின் பதில் மனுவை உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ஆர்.சுவாமிநாதன் தாக்கல் செய்தார்.
அந்த பதில் மனுவில் இந்திய கடல் எல்லையில் மீன்வளம் குறைந்ததால், நமது மீனவர்கள் இலங்கை கடல் எல்லையில் மீன்பிடிக்க ஆரம்பித்தனர்.
இலங்கையில் யுத்தம் நிறைவுற்றதன் பின்னர் இந்திய மீனவர்கள் தங்கம், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டனர்.
எந்தெந்த வகையில் மீன்பிடிக்கக் கூடாதோ, அந்த வகைகளை மீன்பிடிக்க பயன்படுத்துகின்றனர்.
இலங்கை மீனவர்களின் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்துகின்றனர்.
இந்திய மீனவர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதால், அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்கின்றனர்.
சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி போதைப் பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதற்காக 2014 ஜனவரி முதல் தற்போதுவரை இந்தியாவைச் சேர்ந்த 185 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், 937 மீனவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது..
இதுதவிர ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் எச்சரித்து அனுப்பப்படுகின்றனர்.
இது தொடர்பாக இந்திய தூதரகத்துக்கு இலங்கை தகவல் வழங்கியுள்ளது.
இலங்கை கடல் எல்லையில் அத்து மீறலில் ஈடுபட்ட படகுகளின் பதிவு எண்களை இலங்கை தெரிவித்துள்ளது.
அந்த படகுகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு தெரிவித்துள்ளோம்.
சென்னை, தூத்துக்குடி, மண்டபம், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் நடைபெற்ற மீனவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், சர்வதேச எல்லை தாண்டி மீன் பிடிக்கக்கூடாது என்றும்,
ஆபத்தில் சிக்கினால் உடனடியாக இந்திய கடற்படைக்கு தகவல் தர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் இந்திய கடல் எல்லையில் மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கியதாக இதுவரை கடலோர காவல்படைக்கு எவ்வித புகாரும் வரவில்லை.
எல்லை தாண்டும் மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை நடவடிக்கை எடுக்க முடியாது.
எச்சரிக்கை செய்ய மட்டுமே முடியும்.
பாக்கு நீரிணை மற்றும் மன்னார் வளைகுடா கடல்பரப்பு 160 கடல் மைல் தூரம் உள்ளது.
இதன் காரணமாக, இந்திய மீனவர்கள் சர்வதேச எல்லையை தாண்டுவதை இந்திய கடலோர காவல் படையால் தடுக்க முடியவில்லை
இந்த மனுவில் மனுதாரர் பட்டியலிட்டுள்ள தாக்குதல் சம்பவங்கள் அனைத்தும், இலங்கை கடல் எல்லையில் நடைபெற்றவை.
இந்திய எல்லைக்குள் இலங்கை கடற்படையினர் மீனவர்களை தாக்குகின்றனர் என்பது தவறானது.
எல்லை தாண்டி செல்வதால் இலங்கை கடலோர காவல்படைக்கும் இந்திய மீனவர்களுக்கும் தகராறு ஏற்படுகிறது.
இதற்கு இந்திய கடலோர காவல்படை பொறுப்பேற்க முடியாது.
எனவே, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டதையடுத்து மனு மீதான அடுத்த விசாரணையை ஜூன் முதல் வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
http://www.tamilwin.com/show-RUmtyERcSUjxzB.html

லண்டனில் பிரமாண்டமான அளவில் முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சிப் பேரணிக்கான ஏற்பாடு!
[ செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015, 07:02.26 AM GMT ]
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 6 ஆம் ஆண்டு நினைவெழுச்சி பேரணியில் பிரித்தானியாவின் அனைத்துப் பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்கள் பேரெழுச்சியுடன் கலந்து தமிழீழ விடுதலைக்கு வலுச்சேர்க்க தயாராகுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்திருக்கிறது.
முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைக்காக உயிர்நீத்த பல்லாயிரக்கணக்கான உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் அதேநேரம் பல்வேறு அரசியல் நோக்கங்களை இலக்கிற் கொண்டும் அத்தினம் பேரணியும் பொதுக்கூட்டமும் ஏற்பாடு செயப்பட்டுள்ளது.
இப்பேரணி நண்பகல் 14 மணிக்கு March Starts: Whitehall Place by Northumberland Avenue (WC2N 5AE) – Nearest Station – Embankment, இல் ஆரம்பித்து, பிற்பகல் 05மணிக்கு Richmond Terrance (SW1A 2AT) – Westminster Station , இல் நிறைவுறும்.
இதனைத் தொடர்ந்து இந்தியா, இலங்கை மற்றும் பிற நாடுகளில் இருந்து வருகைதர இருக்கும் பல அரசியல் மற்றும் கலை உலகப் பிரமுகர்கள் உரை ஆற்றுவர்.
2009 இல் இலட்சக் கணக்கில் அணி திரண்டு எழுச்சி கொண்டது போல் எதிர்வரும் மே 18 அன்றும் இப் பேரணி பெரும் எழுச்சி காண்பதற்கு பிரித்தானியாவில் வாழும் அனைத்து தமிழ் மக்களையும் அணி திரண்டெழுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

இனவாதத்தை தோற்கடிப்போம்: மனோ கணேசன் தலைமையில் மேதின நிகழ்வு
[ செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015, 07:10.24 AM GMT ]
ஜனநாயக மக்கள் முன்னணியின் இந்த வருட மேதின ஊர்வலமும், கூட்டமும் கொழும்பு, கொட்டாஞ்சேனையில் கட்சி தலைவர் மனோ கணேசன் தலைமையில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
"தலைதூக்கும் இனவாதத்தை தோற்கடிப்போம்" என்ற தொனிப்பொருளில் கண்காட்சிகளுடன் கூடிய ஊர்வலமும், கூட்டமும் நடைபெறும்.
மே முதலாம் திகதி வெள்ளிக்கிழமையன்று பிற்பகல் 1 மணியளவில் ஊர்வலம் கொட்டாஞ்சேனை புனித அந்தோனியார் ஆலயத்துக்கு எதிரில் ஜம்பட்டா ஒழுங்கை சந்தியில் இருந்து ஆரம்பமாகி, ஜம்பட்டா வீதி, சங்கமித்த வீதி, மகாவித்தியாலய வீதி, புதுசெட்டி தெரு, விவேகானந்தா மேடு, ஜிந்துபிட்டி, கண்ணார தெரு, கதிரேசன் வீதி, புனித அந்தோனியார் வீதி ஆகிய வழிகளில் வந்து மீண்டும் ஜம்பட்டா வீதியை அடைந்து கொச்சிக்கடை ஜம்பட்டா ஒழுங்கை சந்தியில் மேதின கூட்டம் நடைபெறும்.
மீண்டும் தலைதூக்கும் இனவாதத்திற்கு எதிராக ஊர்வலத்தில் கோஷங்கள் எழுப்பட்டு, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.
ஊர்வலத்தில், கொழும்பு மாநகர, கொலொன்னாவை, அவிசாவளை, தெஹிவளை-மொரட்டுவை, கம்பஹா, மலையக செயலணிகள் மற்றும் ஜனநாயக மகளிர் இணைய, ஜனநாயக இளைஞர் இணைய பிரிவுகள் தத்தமது பதாகைகளுடன் கலந்து கொள்ளும் என ஜனநாயக மக்கள் முன்னணி ஊடக செயலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyERcSUjxzE.html

Geen opmerkingen:

Een reactie posten