[ புதன்கிழமை, 22 ஏப்ரல் 2015, 06:24.38 AM GMT ]
பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரொஹான் ஹெட்டியாரச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.
19ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி நாட்டின் அரசியல் கலாச்சாரத்தில் மாற்றத்தைக் கொண்டு வர அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இந்த திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்ட முறைமையில் பிழையிருக்கலாம்ää தொழில்நுட்ப பிரச்சினைகள் இருக்கலாம் அவற்றை புறந்தள்ளி மக்களின் அபிலாஸைகளையும் நாட்டின் எதிர்காலத்தையும் கருத்திற் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட வேண்டும்.
தேசிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த யோசனைத் திட்டத்திற்கு ஆதரவளிக்கப்பட வேண்டும்.
19ம் திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் நம் எவராலும் நிராகரிக்க முடியாது என்றே கருதுகின்றோம்.
சில தசாப்தங்களாக எதிர்பார்க்கப்பட்ட விடயங்களை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்பு கிட்டியுள்ளது.
இலங்கை அரசியல் வரலாற்றில் பொன்னான மாற்றமொன்றை ஏற்படுத்த சந்தர்ப்பம் கிட்டியுள்ளது என ரோஹன ஹெட்டியாரச்சி ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீற ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் உரிமையில்லை: சமூக நீதிக்கான பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்
[ புதன்கிழமை, 22 ஏப்ரல் 2015, 06:36.44 AM GMT ]
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்தி அரசியலமைப்பில் சீர்த்திருத்தங்களை மேற்கொள்வதாக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்களுக்கு வாக்குறுதி வழங்கப்பட்டது.
இதனடிப்படையில் மக்களின் ஆணையில் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதிக்கும் மற்றும் அவர் நியமித்துள்ள அரசாங்கத்திற்கும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறி செயற்பட எந்த உரிமையுமில்லை.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க வேண்டும் என்ற பொது எதிர்பார்ப்பே ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இதன் பின்னணியில் தூர நோக்கம் கொண்ட அரசியல் கட்சிகள் மற்றும் பிரஜைகள் குழுக்களும் இருந்தன என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலில் இணைந்து செயற்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அணிகள் தற்போது தமது நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்பட்டு வருகின்றன.
இவ்வாறான நிலையில், பொதுமக்களின் பக்கம் இருந்து நோக்கும் போது இந்த அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தை செயற்பாட்டு ரீதியாக முன்னெடுத்து செல்ல வேண்டிய தேவை காணப்படுகிறது.
அவசர பணியாக 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை பலன் தரும் வகையில் நிறைவேற்றி கொண்டு ஏனைய சீர்த்திருத்தங்களை நோக்கி செல்லுமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறும் சீர்த்திருத்தங்களுக்கு எதிரான சக்திகளை தோற்கடிக்க செயற்பாட்டு ரீதியாக தலையிடுமாறும் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு பங்களிப்பு செய்த சகல தரப்பினரிடமும் கோரிக்கை விடுப்பதாகவும் சமூக நீதிக்கான பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
மகிந்தவின் பெயரை பயன்படுத்தி 19ம் திருத்தச்சட்டத்தை தாமதப்படுத்தியுள்ளனர்: அஜித் பெரேரா
[ புதன்கிழமை, 22 ஏப்ரல் 2015, 08:23.34 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பெயரைப் பயன்படுத்தி 19வது திருத்தச் சட்டம் சமர்ப்பிப்பதை தாமதப்படுத்தியுள்ளதாக பிரதி அமைச்சர் அஜித் பீ.பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் சட்டத்தையும் நல்லாட்சியையும் விரும்பாதவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறானவர் தொடர்பாக மக்கள் தீர்மானம் மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்துங்கள்: மனோ, அசாத் சாலி, விக்ரமபாகு ஆகியோர் கூட்டாக கோரிக்கை
[ புதன்கிழமை, 22 ஏப்ரல் 2015, 08:37.31 AM GMT ]
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.
இம்மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய நிறைவேற்று சபை உறுப்பினருமான மனோ கணேசன்,
சுடுநீரில் விழுந்த நண்டுகளை போல் நேற்று முதல் நாள் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் நடந்து கொண்டுள்ளார்கள். பானை நீரில் நண்டுகளை போட்டு அடியில் தீயை பற்ற வைத்தால், ஆரம்பத்தில் மிதமான நீரில் நண்டுகள் குதூகலமாக நடனமாடும்.
ஆனால், நீரின் உஷ்ணம் அதிகரித்தவுடன், இந்த நடனம் நின்று, ஒப்பாரி ஓலம் கேட்க தொடங்கும். இதுதான் அன்று மகிந்த ஆட்சியில் நடனமாடிய நண்டுகளுக்கு இன்று நடக்கின்றது.
எமது நல்லாட்சியின் பொருளாதார குற்றவியல் விசாரணை பிரிவு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஆகியவற்றின் விசாரணைகள் இன்று, எட்டு முன்னாள் அமைச்சர்கள் தொடர்பில் முடிவுக்கு வந்துள்ளன.
இவர்களில் சிலர் அடுத்த சில வாரங்களில் கைதாவார்கள். இந்த உண்மை இவர்களுக்கு தெரியும். இவர்களால் இன்று நாட்டை விட்டு தப்பி ஓடவும் முடியாது. அப்படியே ஓடினாலும், இன்று உலகில் இவர்கள் ஓடி ஒளியவும் முடியாது.
இன்டர்போல் மூலம் மீண்டும் இங்கேயே கொண்டு வரப்படுவார்கள் என்பதும் இவர்களுக்கு தெரியும்.
தமது குற்றங்களுக்காக கூண்டோடு கூட்டில் அடைபடும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது இவர்களுக்கு இன்று தெரிகிறது. பாராளுமன்ற சபையின் கெளரவத்தை சின்னாபின்னாபடுத்தும், இந்த சப்தமும், ஆர்ப்பாட்டமும் இதனால்தான் நடந்தது. எங்கள் மீது கை வைக்காதீர்கள்.
கை வைத்தால், பாராளுமன்றத்தை நடத்த விட மாட்டோம். நாட்டை நடத்த விட மாட்டோம். 19ம் திருத்தத்தை சட்டமாக்க விட மாட்டோம் என்றெல்லாம் சூடு தாங்க முடியாமல் இந்த நண்டுகள் இன்று கூவுகின்றன.
18ம் திருத்தத்தை ஆதரித்து மகிந்த ராஜபக்சவை நாட்டின் சர்வதிகாரியாக்கிய மகாபாவம் செய்த பாராளுமன்றமே. இந்த பாராளுமன்றம். அன்றைய ஆளும் கட்சியில் இருந்தும், எதிர்க்கட்சியில் இருந்த விலைக்கு வாங்கப்பட்ட சிலரும் சேர்ந்து மகிந்தவுக்கு முடி சூட்டினார்கள்.
இதில் ஒருசிலர் எங்களுடன் சேர்ந்து இன்று பாவமன்னிப்பு பெற்றுள்ளனர். மீதியுள்ள கூட்டத்தில் இருக்கின்ற எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் இனி மன்னிப்பு கிடையாது. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் இவர்களுக்கு மறக்க முடியாத பாடத்தை கற்றுத்தர மக்கள் காத்திருக்கின்றனர்.
எனவே, நாட்டை பணயக் கைதியாக பிடித்து வைத்திருக்கும், இந்த பழைய பாராளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தலுக்கு சென்று புதிய பாராளுமன்றத்தை அமைப்போம் என நாம் ஜனாதிபதி அவர்களிடம் கோரியுள்ளோம். அதையே இங்கும் கோருகிறோம் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyERWSUjs5A.html
Geen opmerkingen:
Een reactie posten