[ திங்கட்கிழமை, 13 ஏப்ரல் 2015, 06:04.29 AM GMT ]
ஊ சத்தமிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நகரசபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 05 லட்ச ரூபா ரொக்கப் பிணை மற்றும் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோத்தபாய, பசிலின் கைதை தடுக்கும் சட்டமா அதிபர்
[ திங்கட்கிழமை, 13 ஏப்ரல் 2015, 06:32.24 AM GMT ]
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரை கைது செய்வதை தடுக்கும் நடவடிக்கைகளில் சட்டமா அதிபர் யுவன்ஜன வனசுந்தர ஈடுபடுகின்றார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் பாரியளவில் ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கு முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதற்கான ஆதாரங்கள் காணப்பட்ட போதிலும் சட்டமா அதிபரும் திணைக்களமும் கைது செய்வதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அக்கறை செலுத்தவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர், பொருளாதார அமைச்சர், ஜனாதிபதியின் பாரியார், கடற்படைத்தளபதி, ஆகியோரும், பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் ஆகியோரை கைது செய்வதற்கு போதுமான அளவு சாட்சியங்கள் காணப்படுகின்றது.
ஊழல் மோசடிகள், கொலைகள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பில் சாட்சியங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விசாரணை அறிக்கைகள் சட்டதா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி ஆலோசனை கோரப்படும் பட்சத்தில் அறிக்கைகளுக்கான பதில்கள் கிடைப்பதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குற்றச்செயல்களில் ஈடுப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குற்ற புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ் மக்கள் மத்தியில் சுயநலம் நீங்கி பொதுநல உணர்வு மேலோங்க புதுவருடம் அமைய வேண்டும்: யோகேஸ்வரன்
[ திங்கட்கிழமை, 13 ஏப்ரல் 2015, 07:01.21 AM GMT ]
அவ்வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டதாவது, புதுவருடமானது இந்து, பௌத்த மக்களின் புதுவருடமாக திகழ்கின்றது. ஆனால் இம்மண்ணில் பூர்வீக குடிகளான இந்து மக்கள் இன்றும் தமது சொந்த மண்ணில் சுதந்திரமின்றி அடிமையாக வாழும் நிலை விளங்கிக் கொண்டிருக்கின்றது.
கடந்த கால யுத்த சூழலால் பாதிக்கப்பட்டு உறவுகளின் உயிர்களை இழந்தும், காணாமல் பறிகொடுத்தும், உடல் உறுப்புக்கள் பாதிக்கப்பட்ட நிலையிலும், இயற்கையாகவும், சேர்க்கையாகவும் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு கணவனை இழந்தவர்களாகவும், தபுதாரனாகவும், பெற்றோரை இழந்தவர்களாகவும், அகதிகளாகவும், சிறைக்கூட வாழ்வை அனுபவிப்பவர்களாகவும், பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் இழந்து தவிர்ப்பவர்களாகவும் உள்ள எமது உறவுகளின் துன்ப நிலையை துடைக்க இயன்றளவு ஆதரவுகளை வழங்கி அம்மக்களின் அகத்தில் மலரும் இன்ப நிலை கண்டு மகிழ்வுறும் இந்து தமிழனாக நாம் இப்புதுவருடத்தை கொண்டாடுவோம்.
இந்நாட்டின் நீண்டகாலமாக உயிர் தியாகம் உட்பட பல தியாகங்களை புரிந்து இன்றும் நம் தமிழ் தேசிய இனம் இந்நாட்டில் தமக்குரியதான நியாயமான, நீதியான அரசியல் தீர்வை பெற்று சுதந்திரமாக வாழ முடியாது வேதனையை அனுபவிக்கும் எம் இந்து தமிழ் இனத்திற்கு நியாயமான அரசியல் தீர்வு கிடைத்து எதிர்பார்த்த அரசியல் அபிலாசைகளை பெற்றுக் கொண்டு மகிழ்வாக வாழும் வருடமாக இவ்வருடம் அமைய இறைவனை வேண்டுவோம்.
தமிழர்களுக்கான நியாயமான அரசியல் உரிமையை இதுவரை காலமும் வழங்காது ஏமாற்றிய இந்நாட்டில் இரண்டு முக்கிய முதன்மை கட்சிகளும் எமது நியாயமான கோரிக்கையை ஏற்று நியாயமான அரசியல் தீர்வை எமக்கு வழங்க இந்நாட்டின் அரச தலைவருக்கும், அரசாங்கத்துக்கும் இறைவன் நல்லெண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என இறைவனை பிராத்திக்கின்றோம்.
அதுமட்டுமின்றி இந்நாளில் கேலிக்கை நிகழ்வுகனை தவிர்த்து பிற உயிர்களை வதைத்து அவற்றின் ஊணை உண்டு இன்பம் காணும் போலி இந்துவாக வாழாது சைவ உணவு உண்டு உண்மையாக இந்துவாக இப்புதுவருடத்தில் திகழ்வோமாக.
எங்கள் தமிழ் மக்கள் மத்தியில் சுயநலம் நீங்கி பொது நல உணர்வு மேலோங்கும் நல்லாண்டாக இவ் ஆண்டு மலர இறைவனை வேண்டி மீண்டும் நல்வாழ்த்தை தெரிவிக்கின்றேன் என தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyESXSUkw6J.html
Geen opmerkingen:
Een reactie posten