[ சனிக்கிழமை, 04 ஏப்ரல் 2015, 10:10.18 PM GMT ] [ பி.பி.சி ]
இது சம்பந்தமாக குற்றவியல் விசாரணை செய்யப்பட்டு குற்றத்துக்கு பொறுப்பானவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.
சிறிலங்கா ஏர்லைன்ஸ் மீது தெரிவிக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை ஆராய்ந்த மூத்த சட்டத்தரணி ஜே. சி. வெலியமுன தலைமையிலான விசாரணைக் குழு, அதிர்ச்சியூட்டும் பல மோசடிகள் நடந்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக இலங்கை பிரதமர் அலுலகத்தின் அறிக்கை கூறுகிறது.
சிறிலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிசாந்த விக்ரமசிங்ஹ, தனது பதவியை முழுமையாக முறைகேடாக பயன்படுத்தியுள்ளார் என விசாரணைக் குழு குற்றஞ்சாட்டியுள்ளது.
ஒப்பந்தங்கள் முறைகேடாக கையாளப்பட்டமை, தகைமையற்றவர்களை பணிக்கமர்த்தியமை, மற்றும் விமான சேவையின் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டமை என பில்லியன் டொலர்கள் கணக்கில் மோசடி நடந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய அரசாங்கத்தின் கீழ் சிறிலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம், புத்தம் புதிய விமானங்களை வாங்கியது உட்பட ஏராளமான செலவுகளை அனாவசியமாக செய்திருந்தது என்றும், ஆனால் குறைவான செலவிலேயே விமான சேவையில் நல்ல விதமான மாற்றங்களை கொண்டுவந்திருக்க முடியும் எனவும் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள விமான சேவையின் முன்னாள் தலைவரும், முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் மைத்துனருமான நிசாந்த விக்ரமசிங்ஹ மீது குற்றவியல் விசாரணை மேற்கொண்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என சட்டத்தரணி வெலியமுனவின் அறிக்கை பரிந்துரை செய்துள்ளது.
நிசாந்த பயன்படுத்துவதற்காக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார் ஒன்றை சிறிலங்கா ஏர்லைன்ஸ் தலைமை அதிகாரி கபில சந்திரசேன, போலி ஆவணங்கள் அடிப்படையில் தந்தார் என்பதற்கான ஆதாரங்களை விசாரணைக் குழு கண்டறிந்துள்ளது.
நுழைவுத் தேர்வில் சித்தி பெறாதவர்கள் பலருக்கு முகாமைத்துவத்தின் தலையீட்டின் பேரில் வேலை வழங்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
இது தவிர விமான சேவையின் நிறைவேற்று அதிகாரி சந்திரசேன, அந்தப் பதவிக்கு பொருத்தமற்றவர் என்பதுடன், முறைகேடான வகையில் விமானிகளை பணிக்கமர்த்தியமை உட்பட, விமானப் பணியாளர்கள் சட்டத்துக்கு புறம்பாக ஆட்கடத்தல் கும்பலுக்கு உதவியமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மீது தெரிவிக்கப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில், முன்னாள் அரசாங்கத் தரப்பில் இருந்து இதுவரை பதில் ஏதும் வந்திருக்கவில்லை.
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தமிழகத்தில் விளையாட தடை!
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஏப்ரல் 2015, 12:32.28 AM GMT ]
இலங்கையில் நடந்த இனப்படுகொலையால் தமிழகத்தில் இலங்கை அரசுக்கு எதிராக கடந்த சில ஆண்டுகளாக கொந்தளிப்பு இருந்து வருகிறது.
இதன் காரணமாக, கடந்த ஐ.பி.எல். தொடரில் சென்னையில் நடந்த போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்கவில்லை.
வரும் 8ம் தேதி நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் தொடங்கவுள்ளன.
இந்த தொடரிலும் சென்னையில் நடைபெறும் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்க முடியாது.
இலங்கை வீரர்கள் ஏஞ்சலா மத்யூஸ் (டெல்லி) திசர பெரேரா (பஞ்சாப்) லஷித் மலிங்கா (மும்பை ) அணிகளுக்காக விளையாடி வருகின்றனர்.
சென்னையில் நடைபெறவுள்ள போட்டிகளில் பங்கேற்க இலங்கை வீரர்களை அனுமதிக்க வேண்டாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பொதுச்செயலாளர், ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழுவுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட ஐ.பி.எல். நிர்வாகம், இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
தீர்ப்பு! மகிழ்ச்சி அதிர்ச்சி! ஜெயலலிதாவுக்கு வந்த திடீர் சிக்கல்!
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஏப்ரல் 2015, 01:10.39 AM GMT ]
சொத்துக் குவிப்பு அப்பீல் கேஸில் எப்போது தீர்ப்பு வருமாம்? சுப்ரீம் கோர்ட் கொடுத்த கெடு முடிஞ்சிடிச்சே?
ஜெ.வுக்கு ஜாமீன் கொடுத்த சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி தத்து-லோக்கூர்-சிக்ரி பெஞ்ச் உத்தரவுப்படி அனைத்து டாக்குமெண்ட்டுகளையும் கர்நாடக ஹைகோர்ட்டில் டிசம்பருக்குள் சமர்ப்பித்து, மார்ச் 31-ந் தேதிக்குள் விசாரணையை முடித்து தீர்ப்பு கொடுத்திருக்கணும். ஏப்ரல் 18-ந் தேதி வரைக்கும்தான் ஜெ.வுக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டிருக்குது. ஆனா தீர்ப்பு இன்னும் வரலை.
பவானி சிங் நியமனத்தை எதிர்த்து தி.மு.க. சார்பில் போடப்பட்ட வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் ஏப்ரல் 7-ந் தேதி நடக்கவிருக்குது. அப்பீல் வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்பட்டால் கர்நாடக ஹைகோர்ட் தலைமை நீதிபதி இது பற்றி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பணும்.
இது சம்பந்தமா விசாரணை நீதிபதி குமாரசாமிதான் ஹைகோர்ட் தலைமை நீதிபதிக்கு முதலில் லெட்டர் எழுதியிருக்கணும். அவரோ தீர்ப்பு எழுதுவதில் மும்முரமாகி அது தொடர்பான புள்ளிவிவரங்களை சேகரிப்பதிலே மும்முரமா இருக்காரு.
தீர்ப்பு விவகாரத்தில் ஜெ. தரப்பு நம்பிக்கையா இருக்குது போலிருக்குதே..?
ஜெ. தரப்பின் பெரிய நம்பிக்கையே, 36, போயஸ் கார்டன் வீட்டை புதுப்பிப்பது தொடர்பா லஞ்சஒழிப்புத்துறையோட மதிப்பீட்டில் மாற்றம் ஏற்படும்ங்கிறதுதான். அங்கே கிரானைட் கற்களை சப்ளை செய்த மாடசாமி அது சம்பந்தமான பில்லை விசாரணை டீம் கிட்டே தரலை. அதனால அரசுத் தரப்பு அனுமானத்தில் மதிப்பு போட்டிருந்தது.
கட்டுமான செலவு 21 கோடி ரூபாயில் 20 சதவீதத்தைக் குறைத்து தீர்ப்பளித்தார் டி குன்ஹா. இந்த 21 கோடி ரூபாய் மொத்தத்தையும், நமது எம்.ஜி.ஆர் சந்தா 14 கோடியையும் நீதிபதி குமாரசாமி டோட்டலா தள்ளுபடி செய்துட்டாருன்னா, கம்பெனிகளில் போடப்பட்ட முதலீடு 4 கோடி ரூபாய் உள்பட சில்லறை சொத்துகள்தான் மிச்சமிருக்கும்னும் அதனால விடுதலை ஆகிடலாம்னும் ஜெ. தரப்பு சீனியர் வக்கீல்கள் கார்டனில் சொல்லியிருக்காங்க.
குமாரசாமியும் ஒவ்வொரு விஷயத்தையும் கவனமா கணக்கிடுறாராம். ஒருவேளை, மிச்சமிருக்கிற கணக்கின் அடிப்படையில் தண்டனை கொடுத்தாலும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்து ஈஸியா வெளியே வந்திடலாம்னு உறுதியா நம்புறாங்க. அதைவிட முக்கியமா கார்டனுக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருக்குது.
என்ன நம்பிக்கை?
அ.தி.மு.க கையிலே அரசாங்கம் இருக்கிறதால நீதிபதி ஏரியாவில் என்ன நடக்குதுன்னு சம்பந்தப்பட்டவங்க மூலமா தெரிஞ்சுக்க முடியுது. வேறு மாநிலத்தில் நடக்கிற விசாரணைன்னாலும் அதிகாரிகளோட தொடர்பு அரசாங்கத்துக்கு இருக்கத்தானே செய்யும். அந்த அடிப்படையில் கிடைச்ச ஒரு தகவல் கார்டனுக்கு ரொம்ப மகிழ்ச்சியைத் தந்திருக்குது.
அதாவது, நீதிபதி குமாரசாமியோட பாதுகாவலர்கள், பியூன் இவங்ககிட்டேயெல்லாம் தீர்ப்பு எப்படின்னு கேட்டு அ.தி.மு.க தரப்பில் நச்சரிச்சிக்கிட்டே இருக்காங்க. அதிலே ஒரு பாதுகாவலர்கிட்டே பேசுறப்ப, அந்தம்மா ஜெயலலிதா ரொம்ப பாவம்ப்பா.. 18 வருசமா இந்த கேஸால ரொம்ப பாதிக்கப்பட்டிருக்காங்கன்னு ஜட்ஜய்யா சொன்னாருன்னு சொல்லியிருக்காரு. இந்தத் தகவல்தான் கார்டனுக்கு அதிக நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் கொடுத்திருக்குது.
கோர்ட் வட்டாரம் என்ன சொல்லுது?
நீதிபதி குமாரசாமி ரொம்ப கவனமா குறிப்பு எடுத்துக்கிட்டிருக்காருன்னு சொல்லுது.. அதனால ஜாமீன் கெடு தேதியான 18-ந் தேதிக்குப் பிறகுதான் தீர்ப்பு வருமாம். இதற்கிடையிலே ஏப்ரல் 1-ந் தேதி பவானிசிங் நியமனம் தொடர்பான வழக்கு நீதிபதி லோக்கூர்-பானுமதி பெஞ்ச்சில் விசாரணைக்கு வந்தப்ப ஜெ. சார்பில் மூத்த வக்கீல் பாலி நாரிமன் ஆஜராகி வாதாடினாரு. பவானிசிங் ஹைகோர்ட்டில் ஆஜராவதில் தவறில்லைன்னும், இந்த விஷயத்தில் கர்நாடக அரசுதான் சரியா செயல்படலைன்னும், குன்ஹா கோர்ட்டில் அவர் ஆஜரான போது தொடரப்பட்ட வழக்கிலும் சுப்ரீம் கோர்ட் அவரது நியமனத்தை ஆதரித்து உத்தரவிட்டிருக்குன்னும்,
3 மாதத்தில் தீர்ப்பு தரணும்னு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருக்கிற நிலையிலே அதை நிறைவேற்றணும்னா பவானிசிங்கை தொடரச் செய்வதைத் தவிர கர்நாடக அரசுக்கு வேற வழியில்லைன்னு நாரிமன் வாதாடினாரு. சசிகலா- இளவரசி-சுதாகரன் இவங்களுக்காக வாதாடுன பிரபல வக்கீல் கே.டி.எஸ். துள்சியும் பவானிசிங்கோட நியமனம் சரின்னு வாதாடினாரு. அப்ப சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் குறுக்கிட்டு கேள்வி கேட்டாங்க.
என்ன கேள்வி?
குன்ஹா கோர்ட்டில் ஆஜராக மட்டும்தான் பவானிசிங்குக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி கொடுத்தது. அதைத் தாண்டி அவர் ஹைகோர்ட்டில் ஆஜராகலாமா? வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்ற உத்தரவுக்காக சட்டத்தை மீறி செயல்படலாமா? சட்டம் பெரிதா? கோர்ட் உத்தரவு பெரிதா?ன்னு நீதிபதிகள் கேட்டாங்க. அதுமட்டுமில்லீங்க தலைவரே.. நீதிபதிகள் ஒரு உதாரணத்தையும் சுட்டிக்காட்டியிருக்காங்க.
கீழ் நீதிமன்றத்திலே ஒரு குற்றவாளி மேலே வழக்கு தொடரப்படுது. அந்தக் குற்றவாளி இது தவறான வழக்குன்னும் இதிலிருந்து தன்னை விடுவிக்கணும்னு சொல்லி ஹைகோர்ட்டில் கேஸ் போடுறாரு. அந்த குற்றவாளி கொடூரமான குற்றத்தை செஞ்சிருக்காருங்கிறதால ஹைகோர்ட்டில் அவர் போட்ட கேஸை எதிர்த்து வாதாட ஒரு சிறப்பு வக்கீலை அரசாங்கம் நியமிக்குது. அந்த சிறப்பு வக்கீல், என்னைத்தான் ஹைகோர்ட்டுக்கு நியமிச்சிருக்காங்க. நான்தான் கீழ்க்கோர்ட்டிலும் அரசு வக்கீலா வாதாடுவேன்னு உரிமைகோர முடியுமா? அது சரியான்னு நீதிபதிகள் கேட்க, அது எப்படி முடியும், தவறுதான்னு வக்கீல் துள்சி சொன்னாரு.''
ம்..
ம்..
அப்ப நீதிபதி லோக்கூர், ஹைகோர்ட்டுக்காக மட்டும் நியமிக்கப்பட்டவர் கீழ்க்கோர்ட்டில் வாதாட முடியாதுன்னா கீழ்க்கோர்ட்டுக்காக நியமிக்கப்பட்டவர் எப்படி ஹைகோர்ட்டில் வாதாட முடியும்னு கேட்டாரு. அதற்கு துள்சிகிட்டே யிருந்தும் பதில் இல்லை. நாரிமன்கிட்டேயிருந்தும் பதில் வரலை. அதற்கப்புறம்தான் 7-ந் தேதிக்கு இந்த வழக்கு விசாரணையை ஒத்திவச்சாங்க. அதுவரை கர்நாடக ஹைகோர்ட்டில் தீர்ப்பு தர தடை விதிக்கணும்னு தி.மு.க வக்கீல் கோரிக்கை வச்சாரு. தடை கொடுக்கலைன்னாலும், 7-ந் தேதிவரைக்கும் குமாரசாமி தீர்ப்பு தரமாட்டாருன்னு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஓப்பன் கோர்ட்டில் சொன்னாங்க.
பவானிசிங் நியமனம் தொடர்பா சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேட்ட கேள்வி, கார்டன் தரப்புக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்குது. எதிர்பார்த்தபடி நடக்கலைன்னா ஹைகோர்ட்டில் மறுபடியும் முதலிலே இருந்து ஆரம்பிக்கணுமான்னு கார்டனில் கலக்கம் தெரியுது. அதே நேரத்தில் தி.மு.க. சார்பில் ஆஜராகும் வக்கீல் அந்தி அர்ஜுனாவும் அவருக்கு உதவியாக இருக்கும் முன்னாள் எம்.பி.யான வக்கீல் சண்முகசுந்தரமும் நம்பிக்கையோடு இருக்காங்க.
http://www.tamilwin.com/show-RUmtyETZSUkr3F.html
Geen opmerkingen:
Een reactie posten