[ புதன்கிழமை, 22 ஏப்ரல் 2015, 11:56.27 AM GMT ]
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காக கோத்தபாய நாளைய தினம் மற்றும் 27ஆம் திகதிகளில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உதயகம்மன்பில ஊடகவியலாளரிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பாராளுமன்ற பாதையை மறைத்து ஆர்ப்பாட்டத்தில் உதயகம்மன்பில உட்பட அரசியல் குழுக்கள் ஈடுபட்டிருந்தார்கள்.
அதன் போது மகிந்த ராஜபக்ச, திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு அமைச்சர் பதவி வழங்கியமை தவறு என்றால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறுபான்மையுடைய ரணில் விக்ரமசிங்கவிற்கு எவ்வாறு பிரதமர் பதவி வழங்கினார் என உதயகம்மனபில கேள்வியெழுப்பியிருந்தார்.
19ஆம் திருத்தச்சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் 26 பேருக்கு பதவி வழங்கியமை இலஞ்சம் இல்லையா என அவர் மேலும் கேள்வியெழுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கோத்தா ஆதரவு ஆர்ப்பாட்டம் : நீதிமன்றம் தடை விதிப்பு
கொழும்பில் அமைந்துள்ள லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முன்பாக நாளை வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்த கொழும்பு பிரதான நீதவான் தடை விதித்துள்ளார்.
பொலிஸ் தரப்பு முன்வைத்த அறிக்கை ஒன்றை அடுத்து நீதவான் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
19வது திருத்தச் சட்டத்தை குழப்பும் மகிந்த ராஜபக்ச: அரசாங்கம், ஜே.வி.பி குற்றச்சாட்டு
[ புதன்கிழமை, 22 ஏப்ரல் 2015, 12:55.22 PM GMT ]
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் எதிர்வரும் 27 ஆம் 28 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுக்கப்பட உள்ளதுடன் அதனை நிறைவேற்றி கொள்ளவதற்கு கிடைக்கும் இறுதி சந்தர்ப்பமும் அதுவாகும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் முயற்சித்து வருகின்ற போதிலும் அலிபாபாவும் 40 திருடர்களுமே இந்த திருத்தச் சட்டத்தை எதிர்க்கின்றனர்.
அவர்கள் இதற்கு பல தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். எதிர்வரும் செவ்வாய் கிழமை 19வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றாது போனால், தற்போதை அரசாங்கத்திற்கு இருப்பில்லை.
அப்படியான நிலைமையில், ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைக்க நேரிடும். 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற முடியாமல் போனால், அரசாங்கத்தின் அடிப்படை நோக்கத்தை நிறைவேற்ற முடியாது போனால், அரசாங்கம் தொடர்ந்தும் கொண்டு நடத்துவது சிரமமானது. இதனால் அரசாங்கத்தை கலைக்க நேரிடும்.
எவ்வாறாயினும் ஜனாதிபதி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற தேவையான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவை அவரால் பெற முடியும் என நாம் நம்புகிறோம். ஜனாதிபதியினால் அது முடியாது போனால், அது நாட்டின் துரதிஷ்டம்.
இது ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சினையோ, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரச்சினையோ அல்ல. அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற முடியாது போகுமாயின், அது முழு நாட்டுக்கும் கவலைக்குரிய விடயம் எனவும் பிரதி வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
19வது திருத்தச் சட்டத்தை மகிந்த விரும்பவில்லை: ஜே.வி.பி
இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் விசாரணை நடத்துவதற்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதன் மூலம் சாம்பல் பூசணிக்காய் திருடனை தோளை பார்த்து அறிந்து கொள்ள முடிந்துள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அந்த கட்சியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத்,
திருடர்களை பிடிக்கவில்லை என்று கூறுகின்றனர். திருடர்களை பிடிக்க வாக்குமூலம் வழங்குமாறு அழைத்தால் வேண்டாம் என்கின்றனர்.
திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டாம் என்றுதானே இவர்கள் கோஷம் போடுகின்றனர்.
இதன் மூலம் யார் திருடன் என்பதை அறிந்து கொள்ள முடிந்துள்ளது. மகிந்த ராஜபக்சவை இலஞ்ச ஆணைக்குழுவிற்கு அழைத்ததை எதிர்த்து 19வது திருத்தச் சட்டம் தொடர்பான விவாதத்தை ஒத்திவைத்தமை சூழ்ச்சியாகும்.
முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் அண்மையில் அவரது வீட்டில் கூடிய முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவான சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எந்த சட்டமூலத்தை நிறைவேற்ற இடமளிக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
தற்போதைய அரசாங்கம் எதனையும் செய்ய முடியாத வினைதிறனற்ற அரசாங்கம் என காட்ட வேண்டும் என்றே அவர்கள் முயற்சித்து வருகின்றனர்.
ஜனாதிபதி ஒருவர் எத்தனை தடவை வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பத்தை வழங்கும் 18வது திருத்தச் சட்டம், 19வது திருத்தச் சட்டம் மூலம் இரத்துச் செய்யப்படுவதை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விரும்பவில்லை எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyERWSUjs6J.html
ஊழல், மோசடி விசாரணை: புதிய ஆணையாளர் நியமனம்
[ புதன்கிழமை, 22 ஏப்ரல் 2015, 01:17.36 PM GMT ]
ஊழல், மோசடி விசாரணை ஆணைக்குழுவின் புதிய ஆணையாளராக, காலி மேல்நீதிமன்ற நீதிபதி விக்கிரம அதுல களுஆரச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வழங்கி வைத்தார்.
நாடாளுமன்றத்தைக் கலைக்க மாட்டேன்! மேற்குலக தூதுவர்களிடம் மைத்திரிபால உறுதி
[ புதன்கிழமை, 22 ஏப்ரல் 2015, 02:39.20 PM GMT ]
அமெரிக்க பதில் தூதுவர் அன்ட்ரூ மான், பிரித்தானிய பிரதித் தூதுவர் லாறா டேவிஸ், ஜேர்மனி தூதுவர் ஜேர்ஜன் மோர்ஹாட் ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் இன்று பிற்பகல் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்புத் திருத்தங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய பின்னரே, நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் நடத்த தாம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி தூதுவர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக எழுந்துள்ள சூழல் குறித்து மேற்கு நாட்டுத் தூதுவர்களுக்கு எடுத்துக் கூறியதுடன், அரசியலமைப்புத் திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று நம்புவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்தார்.
இதன் போது, ஜனநாயகத்தை வலுப்படுத்தும், ஊழல் மோசடிகளை ஒழிக்கும் மைத்திரிபால சிறிசேனவின் கொள்கைகளுக்கு தமது நாடுகள் முழு ஆதரவளிக்கும் என்று தூதுவர்கள் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmtyERWSUjs7E.html
Geen opmerkingen:
Een reactie posten