தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 20 april 2015

லண்டனில் சிங்கள அரசின் திட்டமிட்ட சதி இதுவா ? தமிழ் வேட்ப்பாளரை நாசம் செய்ய ..

நேற்றும் , நேற்று முன் தினமும் லண்டனை தளமாக கொண்டு இயங்கும் சில இணையங்கள் சிங்களப் பெண் ஒருவர் லண்டனில் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதாக செய்திகளை வெளியிட்டு இருந்தார்கள். சற்றும் சம்பந்தமில்லாத இச்செய்தியை ஏன் திடீர் என்று தமிழ் இணையங்கள் வெளியிட்டது என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. அது ஒருபுறம் இருக்க , கிழக்கு ஹரோப் பகுதியில் , உமா குமரன் எனும் தமிழ் பெண் லேபர் கட்சி ஊடாக போட்டியிடுகிறார். அவர் உருவத்தை ஒத்த சிங்களப் பெண் ஒருவரின் படத்தை பல தமிழ் இணையங்கள் பிரசுரித்து, அவர் பிரித்தானிய தேர்தலில் போட்டியிடுவதாக செய்தி வெளியிட்டு உள்ளது. இதனால் பல தமிழர்கள் குழப்பிப் போய் உள்ளார்கள் என்று அறியப்படுகிறது.
மேலும் குறித்த சிங்களப் பெண் எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் என்று அந்த இணையங்கள் தெளிவாக குறிப்பிடவில்லை. இதனால் பச்சை தமிழச்சியான உமா குமாரனை சிலர் சிங்கள , வம்சாவளி நபர் என்று நினைக்க ஆரம்பித்துள்ளார்கள். இதன் காரணமாக தமிழர்களது வாக்குகள் உமா குமாரனுக்குச் செல்வதை ஒரு சக்தி தடுக்க முற்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே இது குறித்து மக்கள் மிகவும் அவதானமாக இருப்பது நல்லது. கனடாவில் உள்ள தமிழர்கள் எவ்வாறு ஒன்று திரண்டு , ராதிகா சிற்சபேசனை MP ஆக்கி , முதல் ஈழத் தமிழ் பெண்ணை கனேடிய பாராளுமன்றத்திற்கு அனுப்பினார்களோ, அதுபோல தற்போது போட்டியிடும் ஈழத் தமிழச்சியான உமா குமாரனையும் பிரித்தானிய தமிழர்கள் நினைத்தால் நிச்சயம் ஒரு MP யாக தெரிவுசெய்ய முடியும்.
அத்தோடு இலங்கையில் நடைபெற்றது ஒரு இன அழிப்பு என்பதனையும் , அங்கே போர் குற்றம் நடைபெற்றுள்ளது என்பதனையும் உமா குமாரன் மிகவும் தெளிவாக புரிந்துள்ளார். குற்றம் இழைத்தவர்கள் தண்டனை அனுபவிக்கவேண்டும் என்ற நிலையில் அவர் உறுதியாக உள்ளார். எனவே கிழக்கு ஹரோ பகுதியில் வாழும் அனைத்து தமிழர்களும் , தமிழரான உமா குமாரனுக்கு தமது வாக்குகளை வழங்கவேண்டும். மே 7ம் திகதி அவர் தெரிவுசெய்யப்பட்டால், பிரித்தானிய வரலாற்றில் , ஈழத் தமிழர் ஒருவர் MP ஆகியது இதுவே முதல் தடவை என்பது பொண் எழுத்துக்களால் பொறிக்கப்படும் ! அதுவும் எமது போராட்ட பாதைக்கு ஒரு மைல்கல்லாக அமையும்.
கிழக்கு ஹரோ பகுதியில் அடங்கும் சில இடங்கள்:
குவீன்ஸ் பெரி
பெல்-மொவுன்ட்
கெண்டன்
வீல்ஸ்-டோன்
நோத்விக் பார்க்
இந்த இடங்களில் வசிக்கும் தமிழர்கள் உமா குமாரனுக்கு தமது வாக்குகளை போடுவார்கள்.

Geen opmerkingen:

Een reactie posten