[ புதன்கிழமை, 22 ஏப்ரல் 2015, 05:38.13 AM GMT ]
வடமாகாணத்திலும், யாழ்ப்பாணத்தின் ஏனைய பகுதிகளிலும் மணல் அகழ்வினால் நிலக்கீழ் நீருக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் இந்த ஆய்வில் கண்டறியவுள்ளதாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க கூறினார்
எனினும் வட மாகாணத்தில் முன்னர் பாரியளவில் முன்னெடுக்கப்பட்ட மணல் அகழ்வு தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான மணல் அகழ்வினால் நிலக்கீழ் நீருக்கு ஏற்படும் பாதிப்பை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க மேலும் தெரிவித்தார்.
இதேவேளை யுத்த காலத்தில் படையினர் தமது இராணுவ நடவடிக்கைகளுக்காகவும், இராணுவ முன்னரங்க காவலரண்களை அமைப்பதற்காகவும் மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்காரணமாக குன்றும் குழியுமாக பல இடங்கள் இன்றும் காணப்படுகின்றன.
அதுமாத்திரமல்லாது யுத்தம் முடிந்த கையோடு இராணுவத்தினரின் ஆதரவோடு சட்டவிரோத மணல் அகழ்வுகள் வடக்கில் தொடர்ந்து நிகழ்ந்து வந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வடமராட்சி கிழக்கு மக்கள்
[ புதன்கிழமை, 22 ஏப்ரல் 2015, 05:44.09 AM GMT ]
10அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இன்று முற்பகல் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கு முன்பாக அப்பிரதேச மக்கள் அமைப்புக்களின் ஏற்பாட்டில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று நடைபெற்று வருகின்றது.
இந்திய ரோலர்களின் அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்துவதோடு கடற்றொழில் உபகரணங்கள் சூறையாடப்படுவதைத் தடுக்கக் கோருதல் உட்பட, நாட்டில் எமது மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் காபெற், கொங்றீற் வீதிகள் போடப்பட்டு அதி சொகுசு வாகனங்கள் பயணிக்கின்ற நிலையில் போராலும், சுனாமியாலும் முழுமையாக பாதிக்கப்பட்டு உயிர், சொத்துக்களை இழந்த நிலையில் 2010ம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யபட்ட எமது வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் இப்போதும் குன்றும் குழியுமாக, சேறுகள் படிந்த பாதையில் தான் பயணம் நாம் பயணம் செய்கின்றோம்.
யாழ்ப்பாணத்தின் பிற பிரதேசங்களோடு ஒப்பிடும் போது எமது பிரதேசம் அபிவிருத்திகளில் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதாக உணர்கின்றோம்.
இந்நிலையில் எமது பிரதேச அபிவிருத்தி புறக்கணிக்கப்படுவது தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் நேரடியாகவும், கடிதம் மூலமும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம்.
அவை எவையும் முழுமையாக 5 வருடங்களாக நிறைவேற்றப்படவில்லை.
இவை தொடர்பில் மத்திய அரசு,மாகாண அரசு,உள்ளுராட்சி அமைச்சு என்பன அசமந்தப் போக்கிலே செயற்படுவதாக உணர்கின்றோம்.
எனவே நாம் அபிவிருத்தியில் பின்தள்ளப்பட்வர்களாக இருப்பதாக நாங்கள் உணர்கின்றோம்.
எனவே குறித்த பிரதேச அபிவிருத்தி புறக்கணிப்பை தடுக்க 10 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் இறங்கியுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyERWSUjs3C.html
Geen opmerkingen:
Een reactie posten