[ செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015, 02:02.25 PM GMT ]
மைத்திரி அரசின் நூறு நாள் திட்டத்தில் அடங்கிய 19 ஆவது திருத்தச் சட்டம் நேற்று நாடாளுமன்றில் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து இன்றும் விவாதிக்கப்பட்டு - திருத்தங்கள் செய்யப்பட்ட பின்னர் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
இதன்போது 19வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 215 பேரும் எதிராக ஒருவரும் வாக்களித்தனர். 7 பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
இன்றைய வாக்கெடுப்பின் போது ஜானக பண்டார, ஜகத் பாலசூரிய, எல்லாவல மேதானந்த தேரர், கெஹலிய ரம்புக்வெல்ல, பசில் ராஜபக்ஷ, விநாயகமூர்த்தி, பிரேமலால் ஜயசேகர ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை.
இதேவளை டொக்டர். சரத் வீரசேகர 19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தார். பாராளுமன்ற உறுப்பினர் அஜித் குமார வாக்களிக்கவில்லை.
எதிர்க்கட்சிகளின் திருத்தங்கள் உள்ளடக்கப்படும்! மூன்றாம் வாசிப்பு விவாதம் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது
இலங்கையின் நாடாளுமன்றத்தில் 19வது அரசியலமைப்பு திருத்த யோசனைகள் தொடர்பில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த திருத்தங்கள் தற்போது விவாதிக்கப்பட்டு சட்டமூலத்தில் இணைக்கப்படுகின்றன.
இதனுடன் இணைந்ததாக சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு விவாதம் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.
மொத்தமுள்ள 59 சரத்துக்களும் வாசிக்கப்பட்டு அவற்றில் எதிர்க்கட்சிகளின் திருத்தங்கள் உள்ளடக்கப்படுகின்றன.
இந்தநிலையில் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்னும் சில மணிநேரங்களில் இடம்பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதன் அடிப்படையிலேயே 19வது அரசியல் அமைப்பு திருத்தத்தின் நிறைவேற்றம் குறித்த முடிவுகள் வெளியாகும்.
ஏற்கனவே சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று இரவு 7 மணியளவில் 214 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது
http://www.tamilwin.com/show-RUmtyERcSUjx2E.html
நாமல் ராஜபக்ச ஆதரவாக வாக்களித்தார்! - எதிராக வாக்களித்து வரலாற்றில் இடம்பிடித்த சரத் வீரசேகர
[ செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015, 02:49.29 PM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகோதரரும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ச, அவைக்கு சமூகமளிக்கவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மட்டும் இந்த திருத்தச் சட்டத்திற்கு எதிராக வாக்களித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால சில்வா உள்ளிட்ட நாடாளுமன்றின் 215 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
சில் ராஜபக்ச, கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற அமர்வுகளில் இன்று பங்கேற்கவில்லை.
இன்னும் சற்று நேரத்தில் மூன்றாம் குழு நிலை விவாதமும் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
இரண்டாம் இணைப்பு
அதிகளவான மக்களின் எதிர்பார்ப்பு 105 நாட்களுக்குள் நிறைவேறியிருப்பது இலங்கையின் வரலாற்றில் நினைவு கூரப்படும் விடயங்களில் ஒன்றாகிவிட்டது.
இந்த நிலையில் 19 வது திருத்தச் சட்டத்தினை எதிர்த்து வாக்களித்த ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் சரத் வீரசேகரவும் நினைவு கூரப்படுவார்.
http://www.tamilwin.com/show-RUmtyERcSUjx2H.html
Geen opmerkingen:
Een reactie posten