தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 2 april 2015

வடக்கில் இருந்து இராணுவத்தை விலக்கினால் ரணிலுடன் கைகுலுக்கத் தயார்: முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் காட்டம்!

சம்பந்தரின் ஜனநாயத்தை கேள்விக்குள்ளாக்கிய கஜேந்திரகுமார்!

0
ஆனால் அவ்வாறு கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிட்டுவிட்டு இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் புதிய அரசின் பலாபலன்களை தமிழ் மக்கள் பெற்றுக்கொள்வது பற்றி பேசிக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார்.
யாழ்.ஊடக அமையத்தினில் இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பினில் அவர் பேசுகையினில் கூட்டமைப்பின் பதிவு என்பது இப்போதைக்கு ஒன்றும் முக்கியமானதல்ல.அதன் கொள்கையே இப்போது முக்கியமானது.
முன்னர் நாங்கள் கூட்டமைப்பிலிருந்த போது பங்காளிக்கட்சிகளினில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தவிர்ந்தவை தேசியம் தன்னாட்சி,சுயநிர்ணயம் போன்றவற்றை முன்னிறுத்துவதில்லையென முடிவெடுத்திருப்பதாகவும் அதனால் கூட்டமைப்பிலுள்ள மூன்று கட்சிகளது பெரும்பான்மையென்ற வகையினில் அதனையே கூட்டமைப்பின் நிலைப்பாடாக முன்னெடுக்கப்போவதாகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்புத்தலைவர் இரா.சம்பந்தன் அப்போது தெரிவித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது தெரிந்ததே.
ஆனால் இப்போது அதே சம்பந்தன் கூட்டமைப்பினை பதிவு செய்வதினில் ஜனநாயக ரீதியினில் தமிழரசுக்கட்சியின் நிலைப்பாட்டை முன்னிறுத்தியே பதிவு செய்வது பற்றி பரிசீலிக்கவேண்டியிருப்பதாக கூறுகின்றார்.இப்போது கூட்டமைப்பினை பதிவு செய்வது தொடர்பினில் பெரும்பாலான கட்சிகள் வலியுறுத்திவருகின்ற நிலையினில் இப்போது அவர் கூறுவது எந்தவகை ஜனநாயகமெனவும் கஜேந்திரகுமார் கேள்வி எழுப்பினார்.
இவர்களது இராஜதந்திரங்களை நம்பி நம்பி தமிழ் மக்கள் நடுத்தெருவிற்கு வந்து அழிந்தது போதும்.இந்த 65 வருட போராட்டம இலட்சியம்,நோக்கம்,இழப்பு அனைத்துமே வீணானவையல்ல.அவற்றை வீணான இழப்பாகவும் மாற்ற முடியாது.கனவுகள் நனவாக மாற மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும்.
இத்தகைய ஏமாற்றுக்கும்பல்களை அடையாளம் காணவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
- See more at: http://www.canadamirror.com/canada/40288.html#sthash.jRiA6rb7.dpuf


இலங்கையில் ‘மிதிவெடியற்ற தேசத்தை’ உருவாக்க தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவோம்! கனடா.

0
இது குறித்து கொழும்பில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
கடந்த 2009இல் யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து மிதிவெடியற்ற சுற்றுச் சூழலை உருவாக்குவதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு கனடா தனது ஒத்துழைப்பைத் தொடர்ந்தும் வழங்கும் என்று இலங்கைக்கும் மாலைதீவுகளுக்குமான கனடா உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இம்மாதம் நான்காம் திகதி கொண்டாடப்படும் ´மிதிவெடியகற்றும் செயற்பாட்டுக்கான உதவி மற்றும் மிதிவெடி தொடர்பான விழிப்புணர்வுக்கான சர்வதேச தினத்தில்´ அடையாளப்படுத்துவதில் இலங்கைக்கும் மாலைதீவுகளுக்குமான கனடா உயர்ஸ்தானிகராலயம் மகிழ்ச்சியடைகின்றது.
ஐந்நூறிற்கும் மேற்பட்ட குடும்பங்களை மீளக் குடியமர்த்தக் கூடிய ஆயிரம் ஹெக்டேயருக்கு மேற்பட்ட உயர் விளைச்சல் மிக்க விவசாயக் காணிகளை விடுவிக்க வசதிப்படுத்தும் வகையில், இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் நிலக்கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக மிதிவெடி ஆலோசனைக் குழுவின் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க கனேடிய அரசாங்கம் 850 000 டொலர்களை வழங்கவுள்ளது.
கனேடிய உயர் ஸ்தானிகர் ஷெலி வைடிங் இது குறித்து கூறியதாவது:
பொதுமக்கள் மீதான நிலக்கண்ணிவெடிகளின் அபாயகரமான பாதிப்புகள் கேள்விக்கிடமற்றவையாகும். எனது எதிர்பார்ப்பு என்னவெனில், கனடா போன்ற பங்குதாரர்களின் ஒத்துழைப்புடன் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள குறிப்பிடத்தக்கப் பணிகள் உயிர்களைப் பாதுகாத்தல்,
மீளத் திரும்புதலுக்கு வசதிப்படுத்தல் மற்றும் பாரபட்சமற்ற இத்தகைய ஆயுதங்களின் பாவனையை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்குடன் உரிய சர்வதேச பொருந்தணைகளை ஏற்றுக்கொள்ளுதல் என்பவற்றை நோக்கி இட்டுச் செல்லும் என்பதாகும்.´
பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தலாக அமையக் கூடிய அல்லது சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்குத் தடையாக இருக்கக் கூடிய யுத்தத்தின் வெளிப்பாடுகளான வெடிக்கக் கூடிய எச்சங்கள் மற்றும் மிதிவெடிகள் உள்ள நாடுகளில் தேசிய மிதிவெடியகற்றல் செயற்பாடுகளின் கொள்திறனை உருவாக்கவும் விருத்தி செய்யவும் ஊக்குவிக்கும் அரசுகளின் முயற்சிகளைத் தொடர மிதிவெடியகற்றும் செயற்பாட்டுக்கான உதவி மற்றும் மிதிவெடி தொடர்பான விழிப்புணர்வுக்கான சர்வதேச தினம் அழைப்பு விடுக்கின்றது.
மிதிவெடியகற்றும் செயற்பாட்டுக்கான உதவி மற்றும் மிதிவெடி தொடர்பான விழிப்புணர்வுக்கான சர்வதேச தினத்தின் 2015ஆம் ஆண்டுக்கான கருப்பொருளான ´மிதிவெடிகளைவிட´ என்பதானது, நாடுகளினால் எதிர்கொள்ளப்படும் பல்வேறு வகையான வெடிபொருள்களின் அச்சுறுத்தல்களையும் வெடிக்கக் கூடிய பல்வேறு வகையான ஆபத்துக்களை இல்லாதொழிப்பதன் முக்கியத்துவத்தின் மீது கவனத்தைச் செலுத்துதலையும் கருத்திற் கொள்கிறது.
இந்தக் கருப்பொருளைக் கருத்திற் கொண்டு, இலங்கையில் மிதிவெடியகற்றல் செயற்பாடுகள் உள்ளடங்கலான மிதிவெடியகற்றல் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க 2.4 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டமை மற்றும் கொத்தணிக் குண்டுகள் தொடர்பான மாநாட்டினைக் கனடா ஏற்றுக் கொண்டுள்ளமை என்பவற்றை மார்ச் 17ஆம் திகதி கனேடிய அரசாங்கம் அறிவித்தது.
´மிதிவெடியினால் பாதிக்கப்பட்ட இடங்களில் வாழும் இலங்கையர் பாதுகாப்பாக இருப்பதில் இந்நிதியுதவி முக்கிய பங்கினை ஆற்றும்.அது நாட்டில் மிதிவெடியகற்றலில் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளில் முக்கியத்துவத்தினைக் கட்டியெழுப்புகிறது என்று கூறிய அவர்,
இந்த அறிவிப்புடன், ´பொதுமக்கள்மீது அபாயகரமான பாதிப்புகளை ஏற்படுத்துவதன் காரணமாக, கொத்தணிக் குண்டுகளை உலகிலிருந்து இல்லாமற் செய்ய கனடா நடவடிக்கை எடுக்கிறது´ என்று கனேடிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரொப் நிக்கொல்ஸன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புதிய நிதியுதவியானது, முன்னாள் மோதல் பிரதேசங்களிலிருந்து பாரியளவிலான வெடிப்பொருள் கருவிகளை அகற்றுவதில் வெற்றிகரமாகச் செயற்பட்ட மெக் மற்றும் ஹலோ டிரஸ்ட் போன்ற சர்வதேச மிதிவெடியகற்றும் அமைப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியமையினூடாக இலங்கையில் மிதிவெடியகற்றும் முயற்சிகளுக்கான கனேடிய அரசாங்கத்தின் பங்களிப்பு முன்னைய முக்கியத்துவத்தைக் கட்டியெழுப்பும்.
இது இடம்பெயர்ந்துள்ள ஆயிரக்கணக்கான மக்களை அவர்களது சொந்த இடங்களுக்கு மீளக் குடியமர்த்த உதவுவதாகவிருக்கின்றது.- இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதே போன்று வடக்கு மாகாணத்தில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காணிகளில் சில இடங்கள் மிதிவெடி அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை கடந்த ஆண்டு ஆட்சியில் இருந்த அரசாங்கம் காணிகளை மக்களிடம் மீளக்கையளிப்பதற்கு மிதிவெடி அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதே காரணம் என்று கூறியிருந்தமை இங்கு நோக்கத்தக்கது.
- See more at: http://www.canadamirror.com/canada/40359.html#sthash.jTYvHPiS.dpuf


வடக்கில் இருந்து இராணுவத்தை விலக்கினால் ரணிலுடன் கைகுலுக்கத் தயார்: முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் காட்டம்!

0
சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரட்ன, வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன், பாராளுமன்ற பிரதிக்குழுக்களின் தவிசாளர் முருகேசு சந்திரகுமார், வட மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பிராந்திய இரத்த வழங்கல் சேவை நிலையத்தினை திறந்து வைத்துள்ளனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய வடக்கு முதல்வர்,
இன்று நான் கொழும்பு செல்ல வேண்டியிருந்தது. ஜனாதிபதியுடன் சம்பந்தன் அவர்கள் ஒரு கூட்டத்தைக் கூட்டி என்னையும் டெனீஸ்வரனையும் கடற்றொழிலாளர்கள் பிரச்சினை பற்றி கருத்துக்கள் வழங்குமாறு கோரியிருந்தார்.
நான் ஏற்கனவே ஜனாதிபதி இந்தியா செல்ல முன் கடற்றொழிலாளர் பிரச்சினைகள் பற்றி என் கருத்துக்களைக் கூறியிருந்ததாலும், இன்று இங்கு வைத்திய கலாநிதி இராஜித சேனாரத்ன வருகை தருவதாக இருந்ததாலும் டெனீஸ்வரனை அங்கு போகுமாறு கோரி நான் இங்கு வந்துள்ளேன். எமது பிரச்சினைகளை ஓரளவு தெரிந்து வைத்து எமக்காகக் குரல் கொடுப்பவர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரத்ன அவர்கள்.
இந்தத் தருணத்தில் எம்முடன் சேர்ந்து இந்த நிகழ்வில் அவர் கலந்து கொள்வதையிட்டு மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். முல்லைதீவு மாவட்ட மக்களின் நலனை எமது முன்னுரிமை கொடுக்க வேண்டிய ஒரு விடயமாக நினைத்து எமது கடமைகளை ஆற்றி வருகின்றோம்.
எம்மால் பணம் செலவழித்துக் கட்டமுடியாவிட்டாலும் Americares நிறுவனம் தமது செலவில் கட்டித்தந்துள்ள இந்த சத்திரசிகிச்சைத் தொகுதி, இரத்த வங்கி ஆகியவற்றைத் திறந்துவைத்தாவது எமது மகிழ்வையும் கரிசனையையும் உங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளோம்.
முன்னைய அரசாங்கத்திற்கு ஒரு சத்திர சிகிச்சை அளிக்க எமது ஜனாதிபதிக்கு உறுதுணையாக நிற்கின்றவர் கௌரவ அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரத்ன. அவர் முன்னைய அரசாங்கத்தின் நோயுற்ற பகுதிகளை வெட்டி சத்திர சிகிச்சை செய்து புதியதொரு அரசாங்கத்தை எமக்குத் தரப் படாதபாடு பட்டுள்ளார். அவருக்கு எமது நன்றிகள் உரித்தாகுக.
இருப்பினும் அவரின் புதிய அரசாங்கத்தின் பிரதமருடன் எனக்கேன் வீண் விவாதம் என்று அவரும் நினைக்கக்கூடும்.எனதருமை மக்களான நீங்களும் நினைக்கக்கூடும். வரமுன் காப்பவனே புத்திசாலி.வருவதை அறிந்து நாங்கள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அது எம்மையே வருத்தும்.
என்னைப் பொறுத்தவரையில் இன்றே திரும்பவும் வீடு சென்று எனது ஓய்வினை மீண்டும் ஏற்றுவாழும் மனோநிலையில்தான் நான் இருக்கின்றேன். எதுவும் தேவையில்லை.ஆனால் பொறுப்புக்கள் தரப்பாட்டால் அவற்றைத் தட்டிக்களிக்க நான் தயாரில்லை.
அண்மையில் பிரதமரின் விஜயம் பற்றி ஓர் அழைப்பிதழ் கிடைத்தது. அதை அனுப்பியவர் என்னைத் தெரிந்த திருமதி ரோசி சேனாநாயக. திருமதி விஜயகலா மகேஸ்வரனின் அழைப்பின் பேரில் பிரதமர் வருகின்றார் என்றும் அந்தக் குறிப்பிட்ட நிகழ்வில் என்னையும் பங்குபற்றுமாறு அழைக்கப்பட்டது. என்னைப் பிரதமரின் உத்தியோகபூர்வ அலுவலகம் அழைக்கவில்லை.
பிரதமர் தமது விஜயம் பற்றி எம்முடன் கலந்தாலோசிக்கவுமில்லை.அவர் சார்பான அழைப்பை விடுத்தது அவரின் கட்சியின் பிரமுகர் ஒருவர். கட்சியின் இன்னொருவரின் அழைப்பின் பேரிலேயே அவர் வருகை தந்தார்.
ஆக மொத்தம் இதன் அர்த்தம் என்ன? தமது கட்சியை இங்கு நிலைநாட்ட, அலுவலகங்களைத் திறந்து வைக்க, நேரடியாக மத்தியில் இருந்து மக்களுக்கு நன்மைகளைப் பெற்றுக் கொடுத்து இன்னாரை அண்டினீர்கள் ஆனால் உங்களுக்கு நாங்கள் சகல உதவிகளையும் பெற்றுக் கொடுப்போம் என்று கட்சி முறையாகக் கூறவே பிரதமர் இங்கு வருகை தந்தார்.
இது முற்றிலும் ஒரு அரசியல் ரீதியான பயணம். எனவே நான் மக்களின் பிரதிநிதி என்ற முறையில் பிரதமரின் கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லையே என்ற குற்றச்சாட்டு அர்த்தமற்றது.அவர் தமது கட்சியை வளர்க்க வந்தார். வளர்த்துவிட்டுப் போகட்டும். அதற்கும் எமக்கும் எந்த சம்பந்தமுமில்லை.
225 மக்கள் பிரதிநிதிகள் கொண்ட நாடாளுமன்றத்தில் இன்று 45 பிரதிநிதிகளை மட்டுமே கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிப் பலம் பெற்று ஆண்டு வருகின்றது. அடுத்த பொதுத் தேர்தலில் தமக்கு என்ன கிடைக்குமோ என்ற பயம் உள்ளூரப் பிரதமரை வருத்திக் கொண்டுதான் இருக்கும்.
அதனால்தான் வடமாகாணத்தில் எப்படியாவது காலடி ஊன்ற அவர் பல நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். ஒரு பிரதமரை அண்டினால் பல நன்மைகள் பெறலாம் என்பது எனக்குத் தெரிந்த விடயம்தான்.
ஆனால் அடுத்த பொதுத் தேர்தலில் என்ன நடக்கப் போகின்றது என்பதை அறியாது வடமாகாணத்தில் எம் மக்களின் செல்வாக்கைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த அவர் விழையும் போது அதனை மக்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதும் எனது கடப்பாடுதான். இதிலே தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை.
வடமாகாணத்தில் தமது கட்சியை நிலை நாட்ட பிரதமர் பகீரதப் பிரயத்தனங்களில் ஈடுபட்டுள்ளார் என்பது கண்கூடு. மக்களால் பெருவாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாணத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைப் புறக்கணித்துத் தனது கட்சியின் சிலரை முன்வைத்தே தமது அரசியலைக் கொண்டு நடத்துவதற்கு எத்தனிக்கின்றார் என்பதும் கண்கூடு.
அடுத்த கட்டமாக இதைத்தரமாட்டேன். அதைத் தருவேன் என்று எங்களுக்கு அரசியல் ரீதியாகப் பிரச்சினைகளை உண்டாக்கப் போவதும் நான் அறிந்ததே. அதாவது எங்களுடன் சேர்ந்தால் உங்களுக்குச் சகல நன்மைகளும் கிடைக்கும். சேராவிட்டால் நீங்கள் எங்களைப் புறக்கணித்தவர்கள் ஆவீர்கள்.
அதன் தாக்கத்தை நீங்கள் ஏற்கச் சித்தமாக இருக்க வேண்டும் என்ற கருத்தை எமக்கு உணர்த்த முன் வருவார் என்பதும் நான் தெரிந்த ஒன்றே. இதுதான் கடந்த காலங்களில் நடந்த திருவிளையாடல்கள் ஆகவே உண்மைகளை எடுத்துக் கூறுவது, எங்கள் மக்களுக்கு விசுவாசமாக நாங்கள் நடந்து கொள்வது ஆகியன எந்தக் காலத்திலும் பிழையெனக் கொள்ள முடியாது.
நான் என் சொந்த நன்மை கருதியோ, சொந்த விருப்பு வெறுப்புக்களுக்கு இடம் கொடுத்தோ முரண் நடவடிக்கைளில் ஈடுபடவில்லை. எமது முரண்பாடானது வடமாகாணத்தில் இருந்து இராணுவ முகாம் ஒன்றைத்தானும் அகற்ற முடியாது என்று கௌரவ அமைச்சர் ஒருவர் கூறியதில் இருந்தே தொடங்கியது.
ஒருசில கேந்திரஸ்தானங்கள் தவிர மற்றைய இடங்களில் இருக்கும் இராணுவத்தினரைப் படிப்படியாக ஒரு குறிப்பிட் கால எல்லைக்குள் வெளியே அனுப்புவேன் என்று பிரதமர் தரமான ஓர் உத்தரவாதத்தைத் தரட்டும். உடனே அவருடன் கைகுலுக்குவேன்.
இராணுவ முகாம் ஒன்றைத்தானும் வெளியேற்றாமல், வலி வடக்கில் உறுதியளித்த ஆயிரம் ஏக்கர்களில் 400 ஏக்கரை மட்டும் விடுவித்து விட்டு அரசியல் ரீதியாகத் தமக்கு இலாபம் தேடும் பிரதமருடன் நான் எவ்வாறு கைகுலுக்கி மகிழ்ச்சியைத் தெரிவிப்பது? எமது மக்கள் எங்களை மாகாண ஆட்சிபீடம் ஏற்றியது சில காரணங்களை முன்வைத்து. அவை எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாகத் தரப்பட்டுள்ளன.
இராணுவத்தினரை வெளியேற்ற வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு. போர் முடிந்த பின்னர் அவர்களுக்கு வடமாகாணத்தில் எந்த வேலையும் இல்லை. வேண்டுமெனில் பொலிஸாரின் தொகையைக் கூட்டட்டும். ஆனால் இராணுவத்தினர் மக்களின் காணிகளை மீளளித்து மக்கள் மத்தியில் இருந்து வெளியேற வேண்டும்.
இவ்வாறான முக்கிய விடயங்களை நாங்கள் அறுதியிறுதியாகப் பேசித் தீர்த்துக் கொள்ளாவிடில் பாதிக்கப்படப்போவது நாங்களே. பிரதமரின் செயலால் 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் எமது வடமாகாண சபைக்கிருக்கும் மிக நலிந்த மெலிந்த அதிகாரங்கள் பற்றிய உண்மைகள் வெளிவரத்தொடங்கியுள்ளன.
மத்தியால் எந்த அளவுக்கு மாகாணத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை எமக்குணர்த்தி வருகின்றார் பிரதமர். இதை அறியாமல் மத்தியின் மாய்மாலங்களுக்கு மண்டியிட முனைந்துள்ளோம் எம்முட்சிலர்.
இதிலே எமது மக்களின் உரித்துக்கள் அடங்கியுள்ளன. இப்பேர்ப்பட்ட செயல்களை வெறும் மனித உறவுகளின் வெளிப்பாடு என்று கூறமுடியாது. ஆழமாக அமைந்திருக்கும் பக்கச்சார்பான எண்ணங்களின் வெளிப்பாடுகள்என்றே கொள்ள வேண்டும்.
இதன் காரணத்தினால்தான் மக்களாகிய உங்களுக்கு முன்னர் நான் பலமுறை கூறியதை இன்றும் இங்கு கூறக் கடமைப்பட்டுள்ளேன். எனதருமை மக்களே! மத்தியின் அரசாங்கம் தரும் அனைத்து நன்மைகளையும் இருகரம் நீட்டி வாங்கிக்கொள்ளுங்கள்! அவர்கள் அழைக்கும் கூட்டங்களுக்குப் போய் என்ன சொல்கின்றார்கள் என்பதைக் கேட்டுக் கொள்ளுங்கள்!
ஆனால் தேர்தல் காலம் வந்ததும் ஒரு வாக்கையாவது தேசியக் கட்சிகள் என்று தம்மை அடையாளப்படுத்தி வரும் கட்சிகளுக்குக் கொடுக்காதீர்கள். மத்தி எமக்கு நஷ்டஈடாகத் தரவேண்டிய கோடிகளில் மிகக்குறைந்த ஓர் அளவே அவர்கள் எமக்குத் தரப்பார்ப்பது. எமது காணிகள் விடுபடவில்லை.
போரினால் பாதிக்கப்பட்ட எம்மக்களின் தேவைகள் பூர்த்திசெய்யப்படவில்லை. பாரம்பரிய தொழில்களைச் செய்ய அனுமதி கிட்டவில்லை. போர்க்காலத்தில் வெளியில் இருந்து வந்தோர் வியாபாரங்களை விட்டுச் செல்லவில்லை.
இராணுவத்தினர் தெற்கிலிருந்து மக்களைக் கொண்டுவந்து குடியேற்றும் நிலை நிறுத்தப்படவில்லை.காணிகளை இராணுவமும் அவர்களை அண்டியோரும் கபளீகரம் செய்வது நிறுத்தப்படவில்லை.
எனவே இவற்றை எடுத்துக் கூற உங்களுக்கு எமது நிலையறிந்த மக்கட் பிரதிநிதிகளே மத்தியிலும் மாகாணத்திலும் அவசியம் என்பதை மறந்து விடாதீர்கள். நாங்கள் தேர்தலுக்கு முன்னமே சென்ற டிசெம்பர் 30ஆம் திகதியன்று அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்துடன் சேர்ந்து எவ்வாறு எமக்கு உதவி செய்யலாம் என்பது பற்றி உரிய ஆவணங்களை மூன்று தலைவர்களுக்கும் அனுப்பி வைத்திருந்தோம்.
எமது கோரிக்கைகளில் ஆளுநர், பிரதம செயலாளர், ஆகியோரை மாற்றியதைவிட அதுபற்றி வேறு எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. ஆனால் எமக்கு சகல விதத்திலும் ஆதரவையும் அன்பையும் காட்டும் அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரத்னபோன்றவர்களுக்கு எமது நன்றியறிதல்களை எடுத்து இயம்புவோமாக என்றார்.
இந்த நிகழ்வில் Americares நிறுவனத்தின் அதிகாரி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணபை உறுப்பினர்கள், அரச அதிபர், வைத்திய அதிகாரிகள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.blood_bank_kili_001
blood_bank_kili_002
blood_bank_kili_003
blood_bank_kili_004
blood_bank_kili_005
blood_bank_kili_006
- See more at: http://www.canadamirror.com/canada/40362.html#sthash.FgPuyvp1.dpuf

Geen opmerkingen:

Een reactie posten