தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 2 april 2015

முதல்வர் விக்னேஸ்வரனை எவரும் விமர்சிக்க முடியாது!

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த வாக்குகள் பற்றி கூறும் சரத் பொன்சேகா
[ வியாழக்கிழமை, 02 ஏப்ரல் 2015, 11:32.31 AM GMT ]
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்கு வங்கி குறிப்பிடத்தக்களது இருக்கவில்லை என ஜனநாயகக் கட்சியின் தலைவரான முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தற்போது ஐக்கிய தேசியக்கட்சி தற்காலிக சந்தோஷத்தை அனுபவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜனநாயகக் கட்சி ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளதை முன்னிட்டு ஹப்புத்தளையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த ஜனாதிபதித் தேர்தல் வெற்றியின் பிரதிபலன்களை ஐக்கிய தேசியக்கட்சி அனுபவித்து கொண்டிருந்தாலும் அந்த கட்சியால், அந்த தேர்தலில் முன்னேற்றங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
அந்த தேர்தலில் கிடைத்த 62 லட்சம் வாக்குகளில், நாங்கள் சுமார் 7 லட்சம் வாக்குகளை பெற்றுக்கொடுத்திருப்போம். அந்த 7 லட்சம் வாக்குகள் ஜனநாயகக் கட்சியின் வாக்குகள்.
ஜே.வி.பியின் சுமார் 5 லட்சம் வாக்குகளும் அதில் அடங்கும். இரண்டையும் சேர்த்தால் 12 லட்சம் வாக்குகள். மூன்று லட்சம் வாக்குகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரின் வாக்குகள். ஜாதிக ஹெல உறுமயவின் இரண்டு லட்சம் வாக்குகள்.
மலையக தமிழர்களின் 100 வீதமானவர்கள் அன்னப்பறவை சின்னத்திற்கு வாக்களித்தனர். சுமார் 7 லட்சம் வாக்குகளை மலையக தமிழர்கள் வழங்கினர். இவற்றை கூட்டினால், 24 லட்சம் வாக்குகள்.
இதனை தவிர நாடு முழுவதிலும் உள்ள சுமார் 15 லட்சம் சிறுபான்மையினர் அன்னப் பறவைக்கு வாக்களித்தனர். 24 லட்ச வாக்குகளுடன் இதனை கூட்டினால்,39 லட்சம் வாக்குகள். 62 லட்சம் வாக்குகளில் இந்த 39 லட்சம் வாக்குகளை கழித்தால், ஐக்கிய தேசியக் கட்சி 25 லட்சம் வாக்குகளையே பெற்றுக்கொடுத்துள்ளது.
இதனால், ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டது என்பதற்காக நாம் அஞ்ச தேவையில்லை. ஐக்கிய தேசியக் கட்சியினர் சில நேரம் அப்படி எண்ணலாம்.
நீண்டகாலம் அந்த கட்சியின் கஷ்டங்களை அனுபவித்த நிலையில், மனதளவிலேனும் சிறிது காலத்திற்கு அவர்கள் சந்தோஷப்படுவதற்கு நாங்களும் பங்களித்துள்ளோம் என்பது மகிழ்ச்சியே எனவும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

வடமாகாண சபையின் அனுமதியுடன் காணிகளை கையளியுங்கள்: சீ.வி.கே
[ வியாழக்கிழமை, 02 ஏப்ரல் 2015, 12:21.37 PM GMT ]
வடமாகாணத்திலுள்ள அரச காணிகளை உரியவர்களிடம் கையளிக்கும் போது மாகாண சபையின் அனுமதியை பெற வேண்டும் என மத்திய காணி ஆணையாளருக்கு பணிப்புரை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வட மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இதனை தெரிவித்துள்ளார்.
2014ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பண்டா - செல்வா ஒப்பந்தம், டட்லி - செல்வா ஒப்பந்தம், இலங்கை - இந்திய உடன்படிக்கை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் முன்மொழிவுகள் மற்றும் 13வது அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டியே இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் இதுமாதிரியான பணிப்புரை விடுத்தல் செயற்பாடு நல்லிணக்க நடவடிக்கைகளின் முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைக்கும் என வடமாகாண சபை அவைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyETWSUkp7H.html


தமிழக மீனவர்களின் கோரிக்கையை நிராகரித்தது இலங்கை
[ வியாழக்கிழமை, 02 ஏப்ரல் 2015, 12:45.00 PM GMT ] [ பி.பி.சி ]
இலங்கைக் கடற்பரப்பில் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதற்கு இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான கூட்டம் கொழும்பில் இன்று நடைபெற்றது.
எல்லை தாண்டிவரும் இந்திய மீனவர்களை, அவர்களது படகுகளுடன் கைது செய்யுமாறு கடற்படையினருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டிருப்பதாக, இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்களில் ஒருவராகிய மன்னார் மாவட்ட மீனவர் சம்மேளனத் தலைவர் ஜஸ்டின் சொய்சா தெரிவித்தார்.
அண்மையில் இலங்கை-இந்திய மீனவர் பிரதிநிதிகளுக்கிடையில் சென்னையில் நடைபெற்ற மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தைகளின்போது, ஆண்டொன்றுக்கு 83 நாட்கள் இலங்கைக் கடற்பரப்பினுள்ளே வந்து மீன்பிடிப்பதற்கு இந்திய மீனவர்களை அனுமதிக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் கோரியிருந்தனர்.
எனினும் தடை செய்யப்படாத தொழில் உபகரணங்களைக் கொண்டு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பார்களானால், அதை இலங்கை மீனவர்கள் பொருட்படுத்தமாட்டார்கள் எனவும் ஜஸ்டின் சொய்சா தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய வடமாகாண மாவட்டங்களின் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் கடற்தொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்கள் மற்றும் கடற்தொழில் அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்ததாகவும் அவர் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmtyETWSUkqyA.html

முதல்வர் விக்னேஸ்வரனை எவரும் விமர்சிக்க முடியாது!
[ வியாழக்கிழமை, 02 ஏப்ரல் 2015, 12:53.03 PM GMT ]
தென்னிந்தியத் திருச்சபையின் முன்னாள் பேராயர் அதி வணக்கத்துக்குரிய எஸ்.ஜெபநேசன் அவர்கள் சொன்ன கதை இது.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த ஜோர்ஜ் புஷ் (முன்னையவர்) ஒருநாள் தனது மனைவியுடன் காரில் சென்றுகொண்டிருந்தார். பாலம் ஒன்றில் பயணிக்கும் போது காரை நிறுத்துமாறு திருமதி புஷ் கூறினார். கார் நிறுத்தப்பட்டதும் அதிலிருந்து இறங்கிய திருமதி புஷ் சிறிது தூரம் நடந்து சென்று அப்பகுதியில் பெயின்ட் அடித்துக் கொண்டு நின்ற ஒருவருடன் கதைத்துவிட்டு திரும்பினார்.
காரில் ஏறியபோது பெயின்ட் அடிக்கும் நபர் யார் என்று ஜனாதிபதி புஷ் தன் மனைவியிடம் கேட்டார். அவன் என்னுடைய முன்னாள் காதலன் என்று மனைவியின் பதில் இருந்தது.
தன்னைச் சுதாகரித்துக்கொண்ட ஜோர்ஜ் புஷ் இந்த நாட்டு ஜனாதிபதியின் மனைவி என்பதில் இப்போது நீ பெருமை அடைவாய் அல்லவா? என்றார்.
அதற்கு திருமதி புஷ், பெயின்ட் அடிப்பவனை நான் கட்டியிருந்தால் அவன்தான் இப்போது இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்திருப்பான் என்று பதில் அளித்தார்.
இந்தக் கதைக்குள் திருமதி புஷ்ஷின் ஆற்றலால் தான் அவரின் கணவர் ஜனாதிபதி ஆனார் என்பது தெரியப்படுத்தப்படுகின்றது.
திருமதி புஷ் கூறியதில் எவ்வளவு உண்மை உள்ளது என்பது பற்றி நாம் பகுப்பாய்வு செய்ய விரும்பவில்லை. ஆனால், சிலருக்கு தனிப்பட்ட ஆளுமை, செல்வாக்கு உண்டு என்பதை மட்டும் இங்கு ஏற்றுத் தான் ஆக வேண்டும்.
இந்தியாவின் பிரதமராக இருந்த நேரு, தமிழகத்தில் முதல்வராக இருந்த அறிஞர் அண்ணாதுரை, எம்.ஜி.இராமச்சந்திரன், தற்போதைய இந்தியப் பிரதமர் மோடி ஆகியோர் கட்சி என்பதற்கு அப்பால் அவர்கள் மீதான மக்களின் விருப்பு அவர்களை பதவியில் இருத்தியது.
பிரதமர் நரேந்திர மோடி பாரதிய ஜனதாக்கட்சியில் போட்டியிட்டதால்தான் வெற்றி பெற்றார் என்று எவரும் வாதிட முடியாது. மோடி வேறொரு கட்சியில் நின்று போட்டியிட்டிருந்தாலும் அவரே பிரதமராகியிருப்பார்.
இது போன்ற ஒரு நிலைமை வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் உண்டு. வடக்கின் முதல்வராக விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறுத்தியதன் காரணமாகவே தமிழ் மக்கள் ஆர்வத்தோடு வாக்களித்திருந்தனர்.
இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட விருப்பு வாக்குகளை விக்னேஸ்வரன் பெற்றுக் கொள்வதற்குள் அவர்மீது மக்கள் கொண்ட விருப்பே காரணம் எனலாம்.
இப்போது கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றீடான அரசியல் தலைமையை உருவாக்கக் கூடிய சக்தி விக்னேஸ்வரனுக்கே உண்டு என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உணர்ந்து கொள்ள வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றீடான அரசியல் தலைமையை உருவாக்கும் சக்தி முதல்வர் விக்னேஸ்வரனுக்கு இருக்கின்ற போதிலும் அவர் அப்படியான சிந்தனையை கொண்டிருக்கமாட்டார் என்பதற்காக அவரை எப்படியும் விமர்சிக்கலாம் என விமர்சிப்பது மடமைத்தனம்.
இருந்தும் கூட்டமைப்பிற்குள் இருக்கக் கூடிய ஒரு சில முக்கிய தலைகள் முதல்வர் விக்னேஸ்வரனுக்கு எதிரான பிரசாரங்களை பொது மேடைகளில் செய்து வருகின்றனர்.
இத்தகைய விமர்சனங்கள், பேசுபவர்களைத் பாதிக்குமே அன்றி அது முதல்வரைப் பாதிக்காது என்பது நிறுத்திட்டமான உண்மை.
அதேநேரம் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர், முதல்வர் விக்னேஸ்வரனின் கருத்துக்களுடன் ஒருபோதும் முரண்பட்டதாக தெரியவில்லை.
ஆக, அறநெறிக் கருத்துக்களோடு தமிழர்களுக்கான அரசியல் நியாயங்களை முன்வைக்கும் முதல்வர் விக்னேஸ்வரனின் உபாயம் அரசியல்வாதிகளுக்குக் கடுப்பாக இருந்தாலும் தமிழ் மக்களுக்கு அதில் நிறையவே உடன்பாடு உண்டு என்பது உணரப்படவேண்டும்.
http://www.tamilwin.com/show-RUmtyETWSUkqyC.html

Geen opmerkingen:

Een reactie posten