தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 5 april 2015

போர்க்குற்றம் தொடர்பில் முன் தீர்ப்பை வழங்க முடியாது: இறுதிப்போரில் இறந்தவர்களுக்கு இறுதி வணக்கத்தை செலுத்தியது அமெரிக்கா!

பொதுத் தேர்தலில் மும்முனைப் போட்டி!
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஏப்ரல் 2015, 01:43.56 AM GMT ]
எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது மூன்று முனைகளில் போட்டியிடப் போவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆகியோர் தனித்தனியாக போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்கள் தனித் தனி கூட்டணிகளை அமைத்து தேர்தலில் களமிறங்குவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
தேர்தலுக்காக கிராம மட்டத்தில் ஏற்கனவே ஒழுங்கமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேன சில கட்சிகள் அமைப்புக்களுடன் இணைந்து போட்டியிடவுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க, தமிழ், முஸ்லிம் கட்சிகள் உள்ளிட்ட மேலும் சில கட்சிகளை இணைத்து கூட்டணி அமைத்துக்கொள்ளவுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஒன்றை அமைத்து தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்திலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மஹிந்த ராஜபக்சவின் கூட்டணிகள் இன்னமும் சின்னம் பற்றி தீர்மானிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyETZSUkr3H.html


வட,கிழக்கு மாணவர்களுக்கு சொலத்தூண் சுவிஸ் அமைப்பினர் 200 துவிச்சக்கர வண்டிகளை வழங்கினர்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஏப்ரல் 2015, 02:29.40 AM GMT ]
வட, கிழக்கு மாகாண மாணவர்களுக்கான கல்வி வள மேம்பாட்டுத்திட்டத்தின் ஒரு கட்டமாக அன்பே சிவம் அமைப்பின் அனுசரணையில், தமிழர் நலன்புரிச் சங்கம் சொலத்தூண் சுவிஸ் அமைப்பினர் 200 துவிச்சக்கர வண்டிகளை வழங்கினர்.
இது  தொடர்பான நிகழ்வு வடமாகாணத்தில் உள்ள வல்வட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் திருமண மண்டபத்தில், அன்பே சிவம் அமைப்பின் தலைவர் அ.அருளானந்தஜோதி தலைமையில் நேற்று நடைபெற்றது.
நிகழ்வில் வட மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாணசபை உறுப்பினர்கள், கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் மற்றும் அன்பே சிவம் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் திருநாம சிங்கம், இலங்கையின் இணைப்பாளர் குமரன் கல்வியலாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmtyETZSUkr4C.html


போர்க்குற்றம் தொடர்பில் முன் தீர்ப்பை வழங்க முடியாது: இறுதிப்போரில் இறந்தவர்களுக்கு இறுதி வணக்கத்தை செலுத்தியது அமெரிக்கா
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஏப்ரல் 2015, 03:05.49 AM GMT ]
இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் முன்கூட்டியே கருத்துக் கூற முடியாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் ஜனநாயகம் மற்றும் தொழில் உரிமைகள் உதவி செயலாளர் டொம் மாலிநொவ்ஸ்கி இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிந்த அவர் நேற்று அளித்த செவ்வி ஒன்றில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் இலங்கையின் பிரதிபலிப்பு வரை தமது நாடு காத்திருக்கபோவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை மக்களின் ஆதரவுடன் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உள்ளக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
மக்களின் உதவியுடன் இந்த பணிகளை செய்ய இலங்கை அரசாங்கம் முன்வந்துள்ளமையை அமெரிக்கா வரவேற்கிறது.
இலங்கை அரசாங்கத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அதன் நடவடிக்கைகளிலும் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று அவர் கருத்துரைத்துள்ளார்.
வடக்கு, கிழக்கை பொறுத்தவரை அங்கு மக்களின் பல பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியுள்ளன.
காணாமல் போனோர், அரசியல் கைதிகள் மற்றும் வாழ்வாதாரம் என்று பல்வேறு தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகள் உள்ளன. எனவே அரசாங்கம் திறந்த நிலையில் பிரச்சினைகளை அணுகும் போதே அனைத்து மக்களின் சந்தேகங்களையும் நிவர்த்தித்து முன்செல்ல முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
இறுதிப்போரில் இறந்தவர்களுக்கு இறுதி வணக்கத்தை செலுத்தியது அமெரிக்கா
இறுதிப்போரின்போது வன்னியில் கொல்லப்பட்டதாக நம்பப்படும் இடத்தில் அமெரிக்கா தமது இறுதி வணக்கத்தை செலுத்தியுள்ளது.
இலங்கையில் தமது விஜயத்தை முடித்துக் கொண்ட அமெரிக்காவின் ஜனநாயக, மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் துறையின் உதவிச்செயலாளர் டொம் மலிநௌஸ்கி இதனை தெரிவித்துள்ளார்.
வன்னியில் இறுதிப்போர் இடம்பெற்ற இடத்துக்கு சென்றபோது தமது உணர்வுபூர்வமான நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து போரினால் இறந்த இரண்டு தரப்பினருக்கும் அங்கு இறுதிமரியாதை செலுத்தியதாக டொம் குறிப்பிட்டார்.
இதேவேளை முஸ்லிம்கள் தாக்கப்பட்ட அளுத்கமை நகருக்கு சென்ற அவர் அரசாங்கம், பொறுப்புக்கூறலை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இந்தநிலையில் புதிய அரசாங்கம் அமெரிக்காவின் உதவியுடன் பல விடயங்களில் முன்னேற்றமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில் போரின்போது காணாமல் போனோர் தொடர்பில் தாமதமின்றி பதில் வழங்கப்பட வேண்டும் என்றும் டொம் கோரிக்கை விடுத்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyETZSUkr4D.html

Geen opmerkingen:

Een reactie posten