[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஏப்ரல் 2015, 01:15.13 AM GMT ]
பொதுநிர்வாக மற்றும் பௌத்த சாசன அமைச்சர் கரு ஜயசூரிய இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்காலத்தில் இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட மாட்டாது.
இந்திய முறையில் விசேட சபையொன்றின் மூலம் ஜனாதிபதி தெரிவு மேற்கொள்ளப்படும்.
ஜனாதிபதி தெரிவு குறித்த விசேட முறைமைகள் புதிய அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்படும்.
இந்த புதிய முறைமை குறித்து அரசாங்கம் பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.
நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னதாக இது தொடர்பிலான யோசனை சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெற்றுக்கொள்ளப்படும்.
19ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் புதிய ஜனாதிபதிக்கு வழங்கப்படும்.
மக்களினால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிகாரங்கள் அவ்வாறே இருக்கும் அவரது பதவிக் காலம் முடிவடைந்து புதிய ஜனாதிபதி நியமிக்கப்படும் போதே புதிய அதிகாரங்கள் அமுலில் இருக்கும் என அமைச்சர் கரு ஜயசூரிய சிங்கள வார இறுதி பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyETZSUkr3G.html
19ம் திருத்தம் குறித்த உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கம் 7 அல்லது 8ம் திகதி நாடாளுமன்றில்...
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஏப்ரல் 2015, 01:56.59 AM GMT ]
சபாநாயகர் சாமல் ராஜபக்ஸவினால் இந்த அறிவிப்பு விடுக்கப்படவுள்ளது.
19ம் திருத்தச் சட்டம் குறித்த நாடாளுமன்ற விவாதம் எதிர்வரும் 8, 9 மற்றும் 10ம் திகதிகளில் மேற்கொள்ளப்படவுள்ளது.
எதிர்வரும் 10ம் திகதி திருத்தச் சட்டம் குறித்து நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 19ம் திருத்தச் சட்ட அமுலாக்கத்திற்கு சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியினால் மட்டுமே நாடாளுமன்றை கலைக்க முடியும்: எதிர்க்கட்சித் தலைவர்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஏப்ரல் 2015, 01:58.30 AM GMT ]
ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் தரப்பினர் நாடாளுமன்றம் கலைப்பது குறித்து வெளியிடும் கருத்துக்கள் குறித்து பொருட்படுத்த வேண்டியதில்லை.
நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னதாக அரசியல் அமைப்பு திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். தேர்தல் முறைமையிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.
இதற்கான பூரண ஒத்துழைப்பை அரசாங்கத்திற்கு வழங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தயார்.
தேர்தல் முறைமையில் மாற்றமின்றி அரசியல் அமைப்பு மாற்றங்கள் செய்வதனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்றுக்கொள்ளாது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
சிங்களப் பத்திரிகை ஒன்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
புலிகளின் சொத்துக்களை பெற்றுக்கொள்ள மைத்திரி அரசாங்கம் முயற்சி
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஏப்ரல் 2015, 02:04.04 AM GMT ]
முக்கியமான ஐந்து நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெருமளவு சொத்துக்கள் காணப்படுகின்றன.
இந்த நாடுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி குறித்த சொத்துக்களை பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.
கனடா, சுவிட்சர்லாந்து, நோர்வே, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் பெருமளவு சொத்துக்களை வைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புலிகளுக்குச் சொந்தமான வாகன விற்பனை நிறுவனங்கள், டீன் மீன் ஏற்றுமதி நிறுவனங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்ட 170 வர்த்தக நிறுவனங்கள் கனடாவில் காணப்படுகின்றன.
சுவிட்சர்லாந்தின் முக்கிய வங்கியொன்றில் ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.
புலிச் செயற்பாட்டாளர்கள் இந்த சொத்துக்களை குறித்த நாடுகளில் தொடர்ந்தும் நிர்வகித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyETZSUkr4B.html
Geen opmerkingen:
Een reactie posten