தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 5 april 2015

எதிர்க்கட்சித் தலைவர் யார்? முறையாக அறிவிப்பு வந்தால் உண்மையாக செயற்படுவோம்! இரா.சம்பந்தன்

பொலிஸாரின் அதிகாரங்கள் இராணுவத்துக்கு வழங்கும் நடைமுறை ரத்தாகும்: அரசாங்கம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஏப்ரல் 2015, 03:26.11 AM GMT ]
பொலிஸாரின் அதிகாரங்களை இராணுவத்துக்கு வழங்கப்படுவதை ரத்துச் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த அதிகாரங்களை நீடித்து செல்வது அவசியம் இல்லை என்பது உணரப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பொலிஸாருக்கு பதற்றமான நிலை ஒன்றை கட்டுப்படுத்த முடியாது போகும் சந்தர்ப்பத்தில் மாத்திரமே இராணுவத்தினர் அழைக்கப்படுவர்.
இந்த சந்தர்ப்பத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இராணுவத்தினரை அழைப்பது என்ற தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

ஊவா தமிழ் சாகித்திய விழாவின் மூன்றாம் நாள் இன்று!- பிரதமர் ரணில் பங்கேற்கவுள்ளார்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஏப்ரல் 2015, 03:37.37 AM GMT ]
10 வது ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழா வெள்ளிக்கிழமை காலை மிகவும் கோலாகலமாக பதுளை வீல்ஸ் பாக் மைதானத்தில் ஆரம்பமானது.
இந் நிகழ்விற்கு ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஸ் தலைமை தாங்கினார்.
முதல் நாள் நிகழ்வுகள்
முதல் நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக ஊவா மாகாண முதலமைச்சர் ஹரீன் பெர்னான்டோ, இராஜாங்க அமைச்சர்களான வேலுசாமி இராதாகிருஸ்ணன், கே.வேலாயுதம், ஊவா மாகாண அமைச்சர்களான ரவீந்திர சமரவீர, ஜே.எம். குமாரதாச, மாகாண சபை உறுப்பினர் ருத்தரிரதீபன், முன்னாள் ஊவா மாகாண சபை உறுப்பினர் அ. அரவிந்தகுமார், உட்பட முக்கியஸ்தர்களும் பாடசாலை மாணவர்களும் கலந்துக் கொண்டார்கள்.
இரண்டாம் நாள் நிகழ்வுகள்
“ஊழியேல் எங்கும் ஊவாத்தமிழ் எஃது” என்ற தொனிப்பொருளில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்துது 03 நாட்கள் நடைபெரும் தமிழ் சாகித்திய விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வு நேற்று காலை ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஸ் தலைமயில் ஆரம்பமானது.
இதன் பிரதம அதிதிகளாக இந்திய உதவி உயர் ஸ்தானிகர் ராதா வெங்கட்ராமன், கிழக்கு மாகான கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபானி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
நிகழ்வில் அதிதிகள் வரவழைக்கப்பட்டு தேசிய கீதம், சாகித்திய விழா கீதம் இசைக்கப்ட்டு விழா ஆரம்பமானதுடன் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடர்ந்து ஊடகவியளாலர்கள் கௌரவிப்பும் பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து சாகித்திய விழா சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.
மூன்றாம் நாள் நிகழ்வுகள்
ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழா கடந்த வெள்ளிக்கிழமை பதுளை வில்ஸ் பார்க் மைதானத்தில் நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் ஊவா மாகாண முதலமைச்சா் ஹரீன் பொ்னாண்டோ, இராஜாங்க அமைச்சா்களான இராதாகிருஷ்ணன்,கே.வேலாயுதம், மாகாண அமைச்சா்களான ரவி சமரவீர, ஆனந்த குமாரசிரி, உறுப்பினா் ருத்திரதீபன் என பலா் கலந்து கொண்டனா்.
இதன்போது பல்வேறு கலை, கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்த தமிழ் சாகித்திய விழா இன்று 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை பதுளையில் இடம்பெறவுள்ளது. ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் இந்த தமிழ் சாகித்திய விழா நடைபெறுகின்றது.
முதல் தினமான வெள்ளிக்கிழமை தமிழர்களின் கலை கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் வகையில் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஊவா மாகாணத்தின் 203 பாடசாலைகளின் மாணவ, மாணவிகள் பங்கேற்று தமிழ் கலாசாரத்தை வெளிக்காட்டினா்.
இதனை அடுத்து நேற்று சனிக்கிழமை கண்டி- இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ராதா வெங்கட்ராமனின் பிரசன்னமும் இடம்பெற்றது. அதேவேளை, தமிழகத்தின் மனவள கலை மூத்த பேராசிரியர் லட்சுமணனின் பேருரை மற்றும் செயன்முறை என பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
இதுதவிர, குறிஞ்சி வேந்தன் சிறப்புரையும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள மூன்றாம் நாள் நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்கின்றார்.
இதன்போது ஆய்வரங்கம், விருது வழங்கல் உள்ளிட்டவை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதாக ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழா ஏற்பாட்டுக்குழுவும்.ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சும் அறிவித்துள்ளன.
http://www.tamilwin.com/show-RUmtyETZSUkr4H.html

ஐ.நா. நிபுணரிடம் வடமாகாணசபையின் இனப்படுகொலை யோசனை வழங்கப்பட்டது?
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஏப்ரல் 2015, 03:41.09 AM GMT ]
இலங்கைக்கு வந்திருந்த ஐக்கிய நாடுகளின் உண்மை மேம்பாடு மற்றும் நீதிக்கான விசேட நிபுணரிடம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தற்போதைய நிலைமைகளை விளக்கியுள்ளது
பப்லோ டி கிரெப் இலங்கையில் தமது விஜயத்தின் போது பல்வேறு தரப்பினரையும் சந்தித்து வருகிறார்.
இந்தநிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஸ் பிரேமசந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம் ஏ சுமந்திரன் ஆகியோர் அவரை கொழும்பில் சந்தித்தனர்.
இதன்போது இலங்கையில் முன்னர் இருந்த மனித உரிமைகள் நிலை தொடர்பிலும் தற்போதைய நிலை தொடர்பிலும் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிக்கு விரிவாக விளக்கியதாக சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐக்கிய நாடுகளின் நிபுணர்,  வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனுடன் மூடிய அறைக்குள் நடத்திய சந்திப்பின் போது விக்னேஸ்வரன், கடந்த பெப்ரவரி மாதம் வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தொடர்பான யோசனையை அவரிடம் வழங்கியிருக்கலாம் என்று நம்பப்படுவதாக கொழும்பின் செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyETZSUkr4I.html

எதிர்க்கட்சித் தலைவர் யார்? முறையாக அறிவிப்பு வந்தால் உண்மையாக செயற்படுவோம்! இரா.சம்பந்தன்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஏப்ரல் 2015, 03:19.43 AM GMT ]
எதிர்கட்சித்தலைவராக இருப்பதற்கு முறையாக அறிவிக்கப்பட்டால் நாம்ட உண்மையாகச்ஹ செயற்படுவோம்  எமது செயற்பாடுகள் அனைவரையும் திருப்திப்படுத்தும் நேர்மையுடையதாக இருக்கும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
இது தொடர்பாக சம்பந்தன் கொழும்பு ஊடகமொன்றுக்கு மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடந்த செவ்வாயக்கிழமை காலை 10 மணிக்கு சபாநாயகர் கட்சித் தலைவர்களை அழைத்து பேச்சுநடத்தும் வகையில் என்னை அழைத்துப் பேச்சு நடத்தினார். இதன்போது எதிர்க்கட்சி தலைவர் விவகாரமும் பேசப்பட்டது.
தற்பொழுது பாராளுமன்றத்தில் ஐ.ம.சு.முன்னணி, ஐ.தே.கட்சி, த.தே.கூட்டமைப்பு, ஜ.ம.முன்னணி ஆகிய நான்கு கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.இந்தநிலையில் இரு பிரதான கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளன.
அந்தவகையில் இரு பிரதான கட்சிகளில் ஒன்று எதிர்க்கட்சியாக இருக்கமுடியாது. அடுத்து பெரும்பான்மை கட்சிக்கே எதிர்க்கட்சி பதவி வழங்கப்பட வேண்டும். இவ்விடயம் தொடர்பில் நானும் சபாநாயகரும் பேசிக்கொண்டோம்.
எதிர்க்கட்சிப் பதவி த.தே. கூட்டமைப்புக்கு வழங்கப்படுமானால் அது குறித்து ஆச்சரியப்படவோ, வழங்கப்படாவிட்டால் கவலைப்படவோ போவதில்லை எவ்வாறெனினும் நாம் உண்மையாகச் செயற்படுவோம் என்றார்.
இதேவேளை தமிழ் கூட்டமைப்புடன் இணைந்து எதிர்க்கட்சியை உருவாக்க தாங்கள் தயாராக இருப்பதாகவும், இது தொடர்பில் சபாநாயகரிடமும் தமது விருப்பத்தை தெரிவித்துள்ளோம் எனவும்  மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஹஸன் அலி அவர்கள், எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு சம்பந்தன் அவர்களே பொருத்தமானவர் என்றும் தற்பேபாது அதிக ஆசனங்களைக் கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நாம் பூரண ஆதரவை வழங்குவோம் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை பிரதான கட்சிகள் இரண்டும் இணைந்து அரசாங்கம் அமைத்திருப்பதால் பாராளுமன்ற விதிமுறைப்படி தமிழ் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டுமென சம்பிக்க ரணவக்க அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இதனிடையே சம்பந்தனை எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு நியமிக்க நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என ஐ.ம.சு. முன்னணியின் மாற்றுக்குழு உறுப்பினர்களான வாசு, விமல், தினேஷ், கம்மன்பில ஆகியோர்   தெரிவித்துள்ளனர்.
அதேவேளை தேசிய அரசாங்கம் அமைக்க நாம் ஆதரவளித்தாலும் தான் எதிர்க்கட்சி தலைவர் பதவியிருந்து விலகப் போவதில்லை எனவும் தாம் ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்தவே அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டோம் என்றும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ளவில்லையெனவும்  நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற விவகாரத்துக்கு எதிர்வரும் 7ம் திகதி முடிவு கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyETZSUkr4F.html




Geen opmerkingen:

Een reactie posten