தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 6 april 2015

எமது முயற்சியின் பயனாகவே மக்களின் காணிகள் மீளளிக்கப்பட்டன!- டக்ளஸ் தேவானந்தா

சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவடைந்தால் ஓய்வு பெற்றுக் கொள்வோம்!- சிரேஸ்ட உறுப்பினர்கள்
[ திங்கட்கிழமை, 06 ஏப்ரல் 2015, 12:53.13 AM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவடைந்தால் ஓய்வு பெற்றுக் கொள்வோம் என கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது கட்சி இரண்டாக பிளவடைந்தால் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ள நேரிடும் என தெரிவித்துள்ளனர்.
கட்சியின் உறுப்பினர்களை சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
கட்சியை மீளக் கட்டியெழுப்ப தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
தனித்தனி கட்சிகளில் இருவரும் மேடை ஏறினால் இதில் யாரைத் தெரிவது என்ற நெருக்கடி நிலைமை ஏற்படும்.
தேர்தல் முறைமை மாற்றத்திற்கு முன்னதாக இரண்டு தலைவர்களையும், இணைக்க சகல முயற்சிகளும் எடுக்கப்படும். தேர்தல் முறைமை மாற்றத்திற்கு முன்னதாக இரண்டு தலைவர்களையும் இணைக்க சகல முயற்சிகளும் எடுக்கப்படும்.
அந்த முயற்சி தோல்வியடைந்தால் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ள நேரிடும் என கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyETaSUks0C.html

எமது முயற்சியின் பயனாகவே மக்களின் காணிகள் மீளளிக்கப்பட்டன!- டக்ளஸ் தேவானந்தா
[ திங்கட்கிழமை, 06 ஏப்ரல் 2015, 12:17.04 AM GMT ]
வலிகாமம் பிரதேசத்தில் படையினர் வசமிருந்த மக்களின் காணிகள் மீள்குடியேற்றத்திற்காக மீளளிக்கப்பட்டமையானது ஆரம்ப காலங்களில் நாம் எடுத்துக் கொண்ட முயற்சியின் பயனாகவே சாத்தியப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சரும் ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகமுமாகிய கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
'உண்மையான மாற்றம்' என்ற தொனிப்பொருளில் தொகுதிவாரியாகக் கட்சியின் செயற்பாட்டாளர்களைச் சந்தித்து ஈ.பி.டி.பி. கட்சி கலந்துரையாடி வருகிறது.
இதன்படி கடந்த சனிக்கிழமை தென்மராட்சி தொகுதியில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-
ஆரம்ப காலங்களில் நாம் எடுத்துக் கொண்ட முயற்சியின் பயனாகவே வலிகாமம் கிழக்கு மற்றும் வடக்கு பிரதேசங்களில்  படையினர் வசமிருந்த மக்களின் காணிகள் மீள்குடியேற்றத்திற்காக மீளளிக்கப்பட்டுள்ளன.
ஆனால் இன்று அதற்கு பலரும் உரிமை கோருகின்றனர்,
முன்னைய அரசுகளுடன் நாம் உறவுக்கு கரமும் உரிமைக்குக் குரலும் கொடுத்து வந்தோம். தற்போதும் அவ்வாறே செயற்பட்டு வருகின்றோம்.
கடந்த காலங்களில் தவறான அரசியல் தலைமைகளால்தான் எமது சமூகம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
அந்நிலையை மாற்றி மக்கள் தமது சொந்த கால்களில் நின்று உழைத்து உயர்வு காணவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், ஜக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராசா மகேஸ்வரன் ஆகியோரது படுகொலைகளுக்கும் எமது கட்சிக்கும் எவ்விதமான தொடர்புகள் இல்லையென்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளன.
இதுபோன்று சாவகச்சேரியில் நிகழ்ந்த கபில்நாத்தின் படுகொலை தொடர்பான உண்மைத் தகவல்களும் விரைவில் வெளிவரும்.
இதேபோன்றுதான் ஏனைய படுகொலைகள் தொடர்பிலும் உண்மைத் தகவல்கள் வெளிப்படுத்தப்படும். அதன் மூலம் மக்கள் உண்மைகளை புரிந்து கொள்வார்கள் என்றார்.
இந்த நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் சூசைமுத்து அலெக்சாண்டர் (சாள்ஸ்), வடமராட்சி அமைப்பாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் உள்ளிட்ட கட்சியின் தென்மராமட்சி பிரதேசத்தின் முக்கிய பிரதிநிதிகளும் உடனிருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmtyETaSUks0A.html

Geen opmerkingen:

Een reactie posten