[ திங்கட்கிழமை, 06 ஏப்ரல் 2015, 12:00.11 AM GMT ]
மேலும் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
உள்நாட்டு யுத்தம் காரணமாக யெமனில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்கள் 58 பேரை¨யும் மிஹின் லங்கா விமானம் மூலம் இலங்கை வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
யெமனில் சுமார் 100 பேர் வரை தொழில் புரிகின்றனர். அவர்களில் 58 பேர் யெமனிலிருந்து சீன விமானம் மூலம் பஹரேய்னுக்கு அழைத்து வரப்பட்டு பின்னர் அங்கிருந்து மிஹின் லங்கா விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
யெமனின் தலைநகர் ‘சனா’ என்ற பிரதேசத்தில் தங்கியிருந்த 58 பேரே முதற்தடவையாக அழைத்து வரப்படுகின்றனர்.
யெமனின் ஏனைய பகுதிகளிலுள்ள இலங்கையர்களையும் தலைநகர் சனா பிரதேசத்திற்கு அழைத்து வந்து இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதேவேளை, யெமனிலுள்ள இலங்கையர்கள் தொடர்பாக தகவல்கள் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் தொலைபேசி இலக்கங்களான அல்லது 011-2323015 என்ற இலக்கங்களூடாக தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள முடியும்.
யெமனிலுள்ள சுமார் 20 பேர் தங்களுக்கு நாடு திரும்ப அவசியமில்லையென்றும் அவர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஐந்து இலங்கையர்கள் தென்னாபிரிக்காவின் ஜுபுட் அரசு பகுதியில் வதிகின்றனர். அவர்களையும் இலங்கைக்கு அழைத்துவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சிலர் வேலைவாய்ப்பு பணியகத்தில் தம்மை பதிவு செய்து கொள்ளாததாலும் வேறு சிலர் பிற நாடுகளிலிருந்து யெமனிற்குள் சென்றிருப்பதாலும் இலங்கையர் தொடர்பிலான முழுமையான விவரங்களை பெறமுடியாதுள்ளது.
இவர்கள் தொடர்பான மேலதிக விபரங்களை பெறுவதற்காக வெளிவிவகார அமைச்சும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சும் இணைந்து வேலை திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
19ம் திருத்தச் சட்டம் ரணிலின் ஓர் சூழ்ச்சித் திட்டமாகும்: ஹெல உறுமய
[ திங்கட்கிழமை, 06 ஏப்ரல் 2015, 01:21.07 AM GMT ]
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தேசிய அமைப்பாளர் நிசாந்த சிறிவர்னசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
19ம் திருத்தச் சட்டத்தில் சில மாற்றங்கள் செய்யாது நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டால் நிச்சயம் அதனை தோற்கடிப்போம்.
பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதே அனைவரினதும் நோக்கமாகும்.
மாறாக தனிப்பட்ட நபர்களின் விருப்பு வெறுப்புக்களை பூர்த்தி செய்யும் அரசியல் அமைப்பு ஒன்று அவசியமற்றது.
19ம் திருத்தச் சட்டம் நீதிமன்றின் ஊடாகவேனும் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்ற காரணத்தினால் நீதிமன்றின் ஒத்துழைப்பை நாடினோம்.
குறைகள் களையப்பட்ட 19ம் திருத்தச் சட்டமே நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
தற்போதைய 19ம் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க அனுமதிக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyETaSUks0D.html
19ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு கிடைக்காவிட்டால் பாராளுமன்றம் கலைக்கப்படும்: ஐ.தே.க
[ திங்கட்கிழமை, 06 ஏப்ரல் 2015, 01:32.47 AM GMT ]
19ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த ஐக்கிய தேசியக் கட்சி முழு அளவில் அர்ப்பணிப்புடன் செயற்படும்.
எதிர்வரும் 9ம், 10ம் திகதிகளில் குறித்த 19ம் திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகளினால் பரிந்துரை செய்யப்பட்ட சில திருத்தங்கள் 19ம் திருத்தச் சட்டத்தில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளது.
அரசியல் அமைப்பில் திருத்தங்களைச் செய்ய மக்கள் ஆணை வழங்கியுள்ளனர்.
அந்த ஆணையின் அடிப்படையிலேயே ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுத்து வருகின்றது என கபீர் ஹசிம் சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyETaSUks0F.html
அம்பாறை தமிழ் மக்களுக்கு அநீதி நடக்கும் போது குரல் கொடுப்பவன் நானே!- முன்னாள் அமைச்சர் தயாரத்ன
[ திங்கட்கிழமை, 06 ஏப்ரல் 2015, 12:41.31 AM GMT ]
காரைதீவில், அமைச்சரின் அரசியல் விவகாரங்களுக்கான இணைப்பாளர் வீ.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெற்ற வரவேற்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பி.தயாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஆறு நிறைவேற்று ஜனாதிபதிகளின் கீழ் 1977முதல் தொடர்ச்சியாக 38வருடங்கள் அமைச்சராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் பாராளுமன்றத்தை அலங்கரித்த பி.தயாரத்ன மீண்டும் ஐ.தே.கட்சியில் இணைந்து கொண்டுள்ளதை ஆதரித்தே இவ்வரவேற்பு விழா இடம்பெற்றது.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:
அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கு அன்றிலிருந்து இன்று வரை அமைச்சரவையிலும் பாராளுமன்றத்திலும் உள்ளும் புறமும் குரல் கொடுத்து வருபவன்.
வட்டமடு விவகாரத்திலும் கல்முனை தமிழ் பிரதேசசெயலக விவகாரத்திலும் கூடிய அழுத்தம் கொடுத்தவன். அதற்காக முஸ்லிம் மக்களுக்கு எதிராக ஒருபோதும் செயற்பட்டவனல்ல.
தலைவன் என்ற அடிப்படையில் எந்த இனத்திற்கு அநீதி நடக்கின்றதோ அதனை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதற்காக குரல்கொடுத்தேயாக வேண்டும். அதனையே செய்து வருகின்றேன்.
துரதிஸ்டவசமாக அமைச்சரவையில் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய தமிழ் அமைச்சர்கள் இல்லாததது பெருங்குறையே.
எனவே தமிழ் மகன் ஒருவன் ஏதாவது தேசியக் கட்சியினூடாக தேர்தலில் நின்று பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகி அமைச்சராக வேண்டும்.அப்போது நாம் மௌனிப்போம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வெறுமனே உரிமை உரிமை என்று காலத்தைப் போக்காமல் உரிமையோடு மக்களின் அடிப்படைத் தேவைகளை பெற்றுக் கொடுப்பவர்களாக மாறவேண்டும். கிழக்கில் அந்த மாற்றம் வந்திருக்கிறது. மத்தியிலும் வரவேண்டும்.
யாருக்காகவும் நான் எனது கொள்கையை மாற்றமாட்டேன். இந்தத் தடவையுடன் ஓய்வுபெற விரும்புகின்றேன். அம்பாறை மாவட்டத்தில் நண்பர் தயா கமகேயுடன் இணைந்தே பயணிப்போம். எம்மிடையே எந்த வேறுபாடுமில்லை. என்றார்.
அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எஸ்.ஜெயச்சந்திரன் உரையாற்றுகையில்:
1977 முதல் ஜ.தே.கட்சியில் பாராளுமன்ற உறுப்பினராக அரசியலில் பிரவேசித்த தயாரத்ன எம்.பி., நிறைவேற்று ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜயவர்த்தன ஆர்.பிரேமதாச டி.பி.விஜேதுங்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ச தற்சமயம் மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் கீழ் பாராளுமன்ற உறுப்பினராக அமைச்சராக தொடர்ச்சியாக சேவையாற்றி வந்தவராவார்.
கடந்த காலத்தில் பாராளுமன்றத்தில் தளம்பல் நிலை ஏற்பட்டபோது நிலையான பாராளுமன்றம் அமையவும் யுத்தத்தை நிறைவுசெய்து நாட்டிற்கு அமைதியையும் சமாதானத்தையும் வழங்க எண்ணி பொதுஜன ஜக்கிய முன்னணிக்கு ஆதரவு வழங்கிய அவர் 2010ல் இடம்பெற்ற தேர்தலில் பொதுஜன ஜக்கிய முன்னணி சார்பில் போட்டியிட்டு மீண்டும் அமைச்சரானார்.
ஆனால் அமைச்சுக்குரிய அதிகாரம் முற்றாக கிடைக்கவில்லை.அதனால் அவரால் நினைத்த மாதிரி மக்களுக்கு சேவையாற்ற முடியவில்லை. ஜனாதிபதி மஹிந்தவின் கீழ் முழு மந்திரியாக இயங்க அவரால் முடியவில்லை. அதற்கான சூழ்நிலையுமில்லை.
இதனால் மந்திரியாகவிருந்தும் ஜனாதிபதியோ அரசாங்கமோ தனது மக்களுக்கு உரிய சேவையைச் செய்ய விடவில்லை என்ற ஆதங்கம் அவருக்கிருந்தது. ஒன்றுமே செய்ய முடியவில்லை.
இந்நிலையில்தான் இவ்வாண்டில் ஆட்சிமாற்றம் இடம்பெற்றது.தற்போது நாட்டில் நல்லாட்சிக்கு அத்திவாரமிடப்பட்டுள்ளது. இக்கட்டத்தில் ஐ.தே.கட்சித் தலைமைகளும் பிரதம மந்திரியும், ஐ.தே.க.வில் இணையுமாறு வேண்டுகோள் விடுத்ததற்கமைவாக மீண்டும் ஜ.தே.க.வில் சேர்ந்தார். அவரது வெற்றியை உறுதி செய்யுங்கள். என்றார்.
கூட்டத்தில் அமைச்சரின் இணைப்பாளர் சுனில், ஐ.தே.க.பிரமுகர் பேரின்பம், பொறியியலாளர் தங்கவேல், தொழிநுட்ப உத்தியோகத்தர் ரவீந்திரன் ஆகியோரும் உரையாற்றினர்.
http://www.tamilwin.com/show-RUmtyETaSUks0B.html
Geen opmerkingen:
Een reactie posten